Showing posts with label Book Shelf. Show all posts
Showing posts with label Book Shelf. Show all posts

Sunday, 31 August 2014

, ,

கி.மு. கி.பி. ஒரு பிளாஷ்பேக்

நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் வரலாறு பாடங்கள் நடக்கும் போது தூங்கியது உண்டு.  இதற்கு முக்கிய காரணம், ஒன்று வரலாறு பாடப் பிரிவு எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கும் வகுப்பாக இருக்கும் அல்லது வரலாற்று பாடங்கள் சுவாரசியமாக எழுதப்படவில்லை அல்லது அவற்றை நடத்தும் ஆசிரியர்கள் அவற்றை அழகாக எடுத்துரைக்கவில்லை.  காரணம் எதுவாயினும் வரலாறு நமக்கு எப்போது சுவாரசியமாகப் படவில்லை.


ஆனால் காலம் செல்ல செல்ல வரலாற்றின் மீது ஏனோ அதீத ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.  அதனால் அது சம்மந்தப் பட்ட புத்தகங்களை தேடி தேடிப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படி என் கண்ணில் பட்ட புத்தகம் தான், கி.மு. கி.பி.  முதல் பதிப்பாக 2006 ல் மதன் எழுதி வெளிவந்த இப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை (2009) படித்தேன்.  

சுமார் 200 பக்கங்களுக்குள் ஆசிரியர் கி.மு வையும் கி.பி யையும் அடக்க முயன்றிருக்கிறார்.  உலகம் தோன்றியது, மனிதன் உருவாகியது முதல் தொடங்குகிறது இந்த புத்தகம்.  அதன் பிறகு சற்றே பயணித்து நாகரிகங்கள் வளர்ந்ததை விளக்குகிறது புத்தகம்.  

ஏதென்ஸ், கிரேக்கம் மற்றும் பாரசீகம் வரை சென்று இந்தியாவின் அசோகரின் கலிங்கத்து போரை நினைவு கூறும் ஆசிரியர் அழகான எளிமையான நடைமுறை தமிழிலில் விவரித்து இருக்கிறார்.  வரலாறு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அசோகர், சந்திரகுப்தர், சாணக்கியர்.  அவர்களையும் தாண்டி இந்திய எல்லைகளை தாண்டி உள்ள நாடுகள் பலவற்றிலும் நடந்த வரலாற்று நிகழ்வுகளை கண் முன்னே காட்டுகிறார் ஆசிரியர்.

ஒருவேளை வரலாறை உங்கள் வகுப்புகளில் தவற விட்டிருந்தால் இந்த புத்தகம் உங்களை மீண்டும் அதை படித்து ருசிக்க உதவும்.  


புத்தகத்தைப் பற்றி
  • ஆசிரியர்:  மதன் 
  • பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
  • பக்கங்கள்: 192 பக்கங்கள்

Sunday, 4 May 2014

, , , , , , ,

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், இந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்டீபன் கவே.  ஆங்கிலத்தில் ‘The 7 Habits of Highly Effective People’ என்ற பெயரில் வெளியான இந்த புத்தகத்தை தமிழிலில் மொழி பெயர்த்துள்ளனர்.  சுமார் இரண்டு கோடி பிரதிகளுக்கும் மேலாக விற்றுள்ள சுய முன்னேற்ற புத்தகம்.  ஆண்டுகள் பல ஆன பிறகும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளும் உத்திகளும் இன்றும் தொழில் முனைவோர் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.


இந்த புத்தகம் எவ்வாறு இரண்டு மனிதர்களின் பார்வைகள் வேறுபடுகிறது என்று அறிமுகப் படுத்துகிறது.  இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டீபன் கவே, ஒருவர் திறமையாக மாறுவதற்க்கு எவ்வாறு அடுத்தவரை சார்ந்திராமல் சொந்தமாக முடிவேடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார்.

இந்த புத்தகம், நீங்கள் அதிக ஆற்றல் பெறுவதற்க்கு ஏழு பழக்கங்களை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி சொல்லுகிறது.  முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பில் கிளிண்டன் அவர்கள் இந்த புத்தகத்தை படித்து அதில் கூறப்பட்டுள்ள பழக்கங்களை தன் வாழ்நாளில் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது கடைப்பிடித்து சிறப்பாக வழி நடத்தினார்.

ஆசிரியரைப் பற்றி

ஸ்டீபன் ரிச்சர்ட்ஸ் கவே ஒரு அமெரிக்க எழுத்தாளர், தொழிலதிபர், பேச்சாளர் மற்றும் சுய முன்னேற்றத்திற்க்கான பயிற்சி அளிப்பவராகவும் இருந்திருக்கிறார்.  இவர் இது தவிர பல சுய முன்னேற்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். 


புத்தகத்தைப் பற்றி
  • ஆசிரியர்:  ஸ்டீபன் ரிச்சர்ட்ஸ் கவே (தமிழிலில்: நாகலட்சுமி சண்முகம்)
  • பதிப்பாளர்: மஞ்சூல்
  • பக்கங்கள்: 512 பக்கங்கள்
  • விலை: Rs.228/- 
குறிப்பு: புத்தகம் வேண்டுவோர் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்து படிவத்தை நிரப்பியும் பெறலாம்.

Friday, 21 February 2014

, , ,

சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்

மருத்துவப் படிப்புகள் இல்லாத காலத்திலேயே நம் சித்தர்கள் நமக்கு வரும் நோய்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு இயற்கை முறையில் சரி செய்து கொள்வது பற்றியும் ஓலைச் சுவடிகளில் பதிந்து விட்டு போயிருக்கிறார்கள்.  ஆங்கில ஆதிக்கம் நமது பாரம்பரியத்தில் ஏற்படுத்திய தாக்கத்தில் அழிந்து போன அல்லது அழிந்துக் கொண்டு வரும் மற்றைவையில் நமது சித்த வைத்தியமும் அடங்கும்.

எதற்கு எடுத்தாலும் நாம் ஆங்கில மருத்துவமனைகளுக்கு ஓடுவது, நமது பாட்டி வைத்தியம் எனப்படும் கை வைத்தியம் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்லாததால் வந்த நிலைமை.  அவ்வகையில் டாக்டர். அருண் சின்னையா அவர்கள் எழுதிய ‘சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்’ என்ற புத்தகம் மனித உடலில் இருக்கும் ஒன்பது மண்டலங்கள், ஏற்படும் நோய்கள், அந்த நோய்களுக்கான இயற்கையான எளிதாக மூலிகை மருந்துகள் பற்றியிம் தெளிவாக விளக்குகிறது.

அம்மருந்துகளை எப்படி சாப்பிடுவது, சாப்பிடும் கால அளவு, அவ்வாறு முறைப்படி சாப்பிட்டால் எவ்வளவு நாளில் நோய்கள் குணமாகும் என்பது பற்றியும் விளக்கியிருக்கிறார்.  இது ஒரு எளிமையான முழுமையான மற்றும் ஒவ்வோரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

ஆசிரியரைப் பற்றி
நூலாசிரியர் டாக்டர் அருண் சின்னையா, மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி. பட்டமும், இயற்கை மருத்துவத்தில் டிப்ளமோ சான்றிதழும் பெற்றவர். மருத்துவப் பணியிலும், மருந்துகள் செய்முறையிலும் பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சென்னையில் உள்ள தன்னுடைய ஆதவன் இயற்கை மருத்துவ ஆய்வு மையத்தின் மூலம் ஆண்மைக் குறைவு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், உடல் பருமன், மாதவிலக்குக் கோளாறுகள் போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார். 


புத்தகத்தைப் பற்றி 
  • பெயர்: சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்
  • ஆசிரியர்: டாக்டர் அருண் சின்னையா
  • பக்கங்கள்: 200 பக்கங்கள்
  • பதிப்பாளர்: நலம்
  • விலை: Rs.200/- (வாங்க விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள லிங்கைப் கிளிக் செய்து புத்தகத்தை வாங்கி கொள்ளலாம்)
குறிப்பு: புத்தகம் வேண்டுவோர் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்து படிவத்தை நிரப்பியும் பெறலாம்.

Wednesday, 19 February 2014

, , , , ,

மார்க்கெட்டிங் மாயாஜாலம்

தொழில்களையும் மார்க்கெட்டிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சந்தைப்படுத்துதலையும் என்றும் பிரிக்க முடியாது.  உங்களிடம் மிகச் சிறந்த தொழில் ஐடியா இருக்கலாம், அந்த தொழிலை ஆரம்பிக்க அதிக பணம் இருக்கலாம், ஆனால் உங்களிடம் உங்கள் பொருளையே சேவையையோ மக்களிடம் சென்று சேர்க்காத வரை நீங்கள் தொழிலில் இலாபம் ஈட்ட முடியாது.  மிகவும் சிறிய அளவில் ஆரம்பிக்கப்படும் பல தொழில்கள் அதிகமாக இலாபம் ஈட்டுவது இந்த மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்திதான். 


சந்தையில் போட்டியாளர்களை சமாளித்து மக்களிடம் நம் பொருள்களை எப்படி சேர்த்து அதிக இலாபம் ஈட்டுவது என்பது பற்றி சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ‘மார்க்கெட்டிங் மாயாஜாலம்’ என்ற புத்தகத்தில் மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.  நீங்கள் சிறுதொழில் நிறுவனராய் இருந்தாலும், மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிவோரானாலும், ஏதேனும் விதத்தில் நீங்கள் தொழிலில் சம்பந்தப் பட்டவரானாலும் இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  பெரும்பாலான மார்க்கெட்டிங் புத்தகங்கள் ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளன.  அனைவரும் எளிதில் புரிந்துக் கொள்ளும் படியாக எளிய தமிழில் இந்த புத்தகம் இருக்கிறது.  

ஆசிரியரைப் பற்றி
இப்புத்தகத்தின் ஆசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ. படித்துள்ளவர்.  மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.  கவின்கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM சென்னை, ITM சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ், கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார். 


புத்தகத்தைப் பற்றி
  • பெயர்: மார்க்கெட்டிங் மாயாஜாலம்
  • ஆசிரியர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
  • பக்கங்கள்: 100 பக்கங்கள்
  • விலை: Rs.100/- (டெலிவரி சார்ஜ் தனி) (மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கலாம்)

குறிப்பு: புத்தகம் வேண்டுவோர் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்து படிவத்தை நிரப்பியும் பெறலாம்.

Monday, 17 February 2014

, , ,

சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்

நெப்போலியன் ஹில் அவர்கள் எழுதி 1937 ஆம் ஆண்டு வெளிவந்து சுமார் 7 கோடிகளுக்கும் அதிகமாக விற்பனையாகிய ’Think and Grow Rich’ என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கமே ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’.

இந்த புத்தகத்தில் நெப்போலியன் ஹில், வாழ்க்கையில் எந்த நிலையில் என்ன வேலையில் உள்ளவர்களும் பணக்காரர்கள் ஆவதற்க்கான தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.  சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஆய்வுகள் செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று பணக்காரர்கள் ஆன அவரின் நெருங்கிய நண்பர்களின் வெற்றியின் இரகசியங்களை எழுதியிருக்கிறார்.

நீங்கள் எப்படி 13 வழிகளை பின்பற்றி பணக்காரர்கள் ஆகலாம் என்பது பற்றி ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.  இந்த புத்தகத்தின் மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் பலர்.  இந்த புத்தகம் பணக்காரர் ஆனவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.  உலகிலுள்ள கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாக இப்புத்தகம் பரிந்துரைக்க பட்டிருக்கிறது.

ஆசிரியரைப் பற்றி
நெப்போலியன் ஹில் 1883 ஆம் ஆண்டு பிறந்த அமெரிக்க எழுத்தாளர்.  இவர் தம் வாழ் நாளில் பல பணக்காரர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.  அவ்வாறு தாம் கற்ற மற்றும் தாம் பின்பற்றிய வழிகளையே இந்த புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார்.  அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் அன்ரூ கார்னகி அவரின் உந்துதலின் பேரில் இந்த புத்தகத்தை எழுதினார்.  சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட வெற்றி பெற்றவர்களை பேட்டி கண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டது.  அவர்களில் பலர் கோடீஸ்வரர்கள்.

புத்தகத்தைப் பற்றி
  • பெயர்: சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்
  • ஆசிரியர்: நெப்போலியன் ஹில்
  • பக்கங்கள்: 320 பக்கங்கள்
  • விலை: Rs.123/- 

Saturday, 15 February 2014

, , ,

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?

மனிதர்களாகிய நாம் ஒரு சமூக விலங்காக கருதப்படுகிறோம்.  இதன் அர்த்தம் நாம் தனியாக இந்த உலகத்தில் வாழ்க்கை நடத்த முடியாது.  நாம் பல மனிதர்களுடன் பழக வேண்டியுள்ளது.  அவ்வாறு பழகும் போது நாம் பல குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை சந்திக்க வேண்டியுள்ளது.  அவர்களை நாம் நம் நண்பர்களாக்கி கொள்வது அவசியம்.  ஆனால் ஒருவரை நாம் நண்பராக்கி கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
நீங்கள் பார்க்கும் அல்லது பழகும் அனைவரையும் நண்பர்களாக்கி கொள்ளவும், மக்களிடம் செல்வாக்குடன் விளங்கவும், உங்கள் தொழில், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றில் சிறந்து விளங்கவும் டேல் கார்னகி ஆங்கிலத்தில் எழுதிய ‘How to Win Friends and Influence People?’ என்ற புத்தகம் ‘நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை படிப்பவர்கள் அவர்களின் மனைவி, கணவர், குழந்தைகள், முதலாளி, தொழிலாளி, நண்பர்கள் மற்றும் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை எளிதாக கையாளலாம்.  அவர்களிடம் செல்வாக்கு பெறலாம்.  வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

குறிப்பு: இந்த புத்தகம் சுமார் 1 கோடிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

ஆசிரியரைப் பற்றி:
டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.  அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.  அவர் எழுதிய புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்க படுகிறது.

புத்தகத்தைப் பற்றி:
  • பெயர்: நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?
  • எழுத்தாளர்: டேல் கார்னகி
  • பக்கங்கள்: 394 பக்கங்கள்
  • விலை: Rs.175/- 

Wednesday, 12 February 2014

, , ,

என் சீஸை நகர்த்தியது யார்?

மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் எப்படி உங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பது பற்றி டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன் ஆங்கிலத்தில் எழுதிய ‘Who Moved My Cheese?’ தமிழில் ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது.  இந்த புத்தகம் உலகம் முழுவதும் சுமார் ஒரு கோடி காப்பிகளுக்கு மேல் 37 மொழிகளில் விற்பனையாகி உ:ள்ளது.  இது ஒரு சிறப்பான புத்தகங்களில் ஒன்றாக கருதப் படுகிறது.


இது ஒரு கதை வடிவில் நான்கு பேர்களின் (இரண்டு எலிகள் மற்றும் இரண்டு சிறிய மனிதர்கள்) வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை பற்றியும் அவர்கள் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறார்கள் என்பது பற்றியும் மிகவும் சுவாரசியமாக சொல்லப் பட்டிருக்கிறது.

காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, பணம், உடல் நலம் மற்றும் அமைதியான மனநிலை ஆகியவற்றை எவ்வாறு உங்களின் வளர்ச்சிக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அழகாக சொல்லப் பட்டிருக்கிறது.  இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேருவதற்க்கான வழிகளை பெறுவீர்கள். 

புத்தகத்தின் குறிப்புகள்

புத்தகத்தின் பெயர்: என் சீஸை நகர்த்தியது யார்?
எழுத்தாளர்: டாக்டர். ஸ்பென்சர் ஜான்சன்
பக்கங்கள்: 100 பக்கங்கள்

குறிப்பு: இந்த புத்தகத்தின் அடக்க விலை Rs.150/-. ஆனால் கீழே உள்ள லிங்க் மூலமாக இந்த புத்தகத்தை Rs.100/- க்கு வாங்கிக் கொள்ளலாம் டெலிவரி சார்ஜ் இலவசம்.