Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Friday, 28 February 2014

, , , ,

வென்சர் கேப்பிடல் (Venture Capital) / துணிகர முதலீடு என்றால் என்ன?

எந்த ஒரு தொழில் ஆரம்பிக்கும் போதும் அதற்கான முதலீடு பல வழிகளில் திரட்டப் படுகிறதுபொதுவாக ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு தொழிலை தொடங்கும் போது அதனுடைய சாதக பாதகங்கள் ஏற்கனவே பரிச்சயமாகியிருக்கும்அதனால் முதலீடு போடுபவர்கள் அவற்றை கருத்தில் கொள்வார்கள்ஆனால் புதிதாக, சந்தையில் பரிச்சயமில்லாத, ஒரு தொழிலை தொடங்கும் போது அதற்க்கான முதலீட்டை பெறுவது அவ்வளவு சுலபமில்லைஇதற்க்கான தீர்வுதான் வென்சர் கேப்பிடல் (Venture Capital) அதாவது துணிகர முதலீடு.

வென்சர் கேப்பிடல் என்று சொல்லப்படும் நிறுவனங்கள் போதுவாக புதிய, சந்தைக்கு பரிச்சயமில்லாத தொழில்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.  அவர்கள் உங்கள் தொழிலின் தன்மை, நீங்கள் அதற்க்காக போட்டிருக்கும் திட்டங்கள், லாப கணக்குகள் ஆகியவற்றை அலசி, உங்கள் தொழில் லாபம் ஈட்டும் என்று தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்வார்கள்இதன் மூலம் நீங்களும் உங்கள் தொழிலை கவனமாக ஆரம்பிக்கலாம்

வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், மேலாண்மை நிபுணர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியவற்றை கொண்டு இருக்கும்இதனால் அவர்களின் அனுபவமும் அறிவும் உங்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும்அவர்கள் உங்களின் தொழிலின் ஒவ்வொரு படியிலும் தங்களது ஆலோசனைகளை வழங்குவார்கள்

இந்த முதலீடுகள் பல கட்டங்களில் நடைபெறும்ஆரம்ப முதலீடு, சிறிது வளர்ச்சி அடைந்த பிறகு முதலீடு பின்பு தொழிலின் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்க்கான முதலீடு என பல கட்டங்களாக நடைபெறும்.

இந்நிறுவனங்கள் உங்களின் தொழிலின் பங்கு தாரர்களாக இருப்பார்கள். இந்த பங்குகள் மூலம் அவர்கள் தங்கள் லாபத்தை எடுத்துக் கொள்வார்கள்.  எப்போது உங்கள் தொழில் தன்னிச்சையாக முதலீடுகளை செய்ய முடிகிறதோ அப்போது அவர்கள் நிறுவன பங்குகளை விற்று விலகிக் கொள்வார்கள்.


குறிப்பு: இந்த கட்டுரை வென்சர் கேப்பிடல் பற்றிய ஒரு அறிமுகமே.  இது பற்றி அதிக தகவல்கள் பெற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது நிபுணர்களை அணுகவும். 

Tuesday, 25 February 2014

, , , , , ,

அமேசானில் (Amazon) ஆன்லைனில் உங்கள் பொருள்களை விற்பது எப்படி?

இணையதளம் உலகத்தை சுருக்கி இருந்தாலும் அது ஒரு வகையில் உலகளாவிய வாய்ப்புகளை பரந்து விரிய விட்டிருக்கிறது.  தொழில் முனைவோர் தங்கள் தொழில்களை பல நாடுகளுக்கு கொண்டு சென்று தங்கள் வருமானத்தை பெருக்குகின்றனர்.  அப்படி உங்களுக்கு உதவுவதற்க்காகவே அமேசான் அளிக்கும் இந்த சிறப்பு சேவை மூலம் நீங்கள் இந்தியா முழுவதும் உங்கள் பொருள்களை விற்க வாய்ப்பளிக்கிறது. 



முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் பொருள்களை அமேசானில் பட்டியலிடுங்கள்.  அதற்க்காக வடிவமைக்கப்பட்ட இணையதள கருவிகள், மென்பொருள்கள் மூலம் நீங்கள் உங்கள் பொருள்களை பட்டியலிடலாம்.

வாடிக்கையாளர்கள் அமேசானில் உங்கள் பொருள்களை காண்பார்கள்.  அவர்களுக்கு தேவையான பொருள்களை அதற்க்கான பணத்தை செலுத்தி ஆன்லைனிலே ஆர்டர் செய்வார்கள்.  சிலர் பணம் செலுத்திய பிறகு பொருளை வாங்கும் விருப்பத்தையும் தேர்ந்து எடுக்கலாம். அமேசான் அவர்கள் ஆர்டர் செய்த பொருள்களின் பட்டியலை உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

நீங்கள் அந்த பொருள்களை வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்த பிறகு, அமேசான் அதற்கான விலையை (அவர்களின் தரகு கழித்து) உங்கள் வங்கி கணக்கில் சேர்த்து விடுவார்கள்.

கட்டணங்கள்

அமேசானில் உங்கள் பொருள்களை பட்டியலிடுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.  அவர்கள் தரகு மட்டும் வசூலிக்கிறார்கள்.  மாதசந்தாவாக ரூபாய் 499 வசூலிக்கப்படுகிறது.  மேலும் ஒவ்வோரு பொருள் விற்று முடியும் போது ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது.  தரகு கட்டணம் 5% லிருந்து 15% வரை பொருள்களுக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது.  குறிப்பாக புத்தகங்களுக்கு மின்னனு பொருள்களுக்கு 12% ம், மொபைல் போன்களுக்கு, கணிணிகளுக்கு 5% ம், குழந்தைகளுக்கான பொருள்கள், நகைகள் மற்றும் வீட்டுப் பொருள்களுக்கு 15% ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  தரகுக்கு 12..36% சேவை வரியும் உண்டு.  தரகு கட்டணம், வாடிக்கையாளர் செலுத்தும் பணத்தின் மதிப்பில் கணக்கிடப்படுகிறது.  இதில் டெலிவரி சார்ஜ் மற்றும் வரிகளும் அடங்கும்.

குறிப்பு: முதல் வருடத்திற்க்கு சந்தா மற்றும் தரகுகளில் தள்ளுபடி ஆகியவை உண்டு, இரண்டாண்டுகள் ஒப்பந்த அடிப்படையில். மேலும் விபரங்களுக்கு >இங்கே< கிளிக் செய்து அமேசான் தளத்திற்க்கு சென்று தெரிந்துக் கொள்ளவும்.

Monday, 17 February 2014

இடைக்கால பட்ஜெட் 2014 – முக்கிய அம்சங்கள்

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2014-15 க்கான இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:


  • சிறிய வகை கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் ஆகியவற்றுக்கு சுங்கவரி 12% லிருந்து 8% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
  • நடுத்தர வகை வாகனங்களுக்கான சுங்கவரி 24% லிருந்து 20% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
  • பெரிய வகை வாகனங்களுக்கான சுங்கவரி 27% லிருந்து 24% ஆக குறைக்கப் பட்டுள்ளது.
  • SUV வகை வாகனங்களுக்கான சுங்கவரி 30% லிருந்து 24% ஆக குறைக்கப் பட்டுள்ளது.

இதனால் மேற்படி கூறப்பட்ட வாகனங்களின் விலை குறையலாம்.
  • உள்நாட்டில் தயாராகும் மொபைல் போன்களுக்கான சுங்கவரியும் குறைக்கப் பட்டுள்ளது.
  • பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சமாக அரிசிக்கான சேவை வரி நீக்கப் பட்டுள்ளது.  மேலும் இரத்த வங்கிகளுக்கான சேவை வரியும் நீக்கப் பட்டுள்ளது.  
நன்றி: Flickr-Tax Credits

Sunday, 16 February 2014

, , , ,

பணவீக்கம் என்றால் என்ன?

பணவீக்கம் என்பது நாம் வாங்கும் பொருள்கள் மற்றும் நமக்கு அளிக்கப் படும் சேவைகளின் ஆண்டுக்கு ஆண்டு ஏறும் விலையேற்றம். இது விகிதத்தில் கணக்கிடப் படுகிறது.  உதாரணமாக ஒரு தொலைக்காட்சி பெட்டியின் விலை தற்போது Rs.12000/- என்றால், ஆண்டிற்க்கு 9% என்ற சதவீகத்தில் அதன் விலை ஐந்தாண்டுகளுக்கு பிறகு Rs.18463/- என்றிருக்கும். இதுதான் பணவீக்கம் எனப்படுகிறது.


பணவீக்கம் நாணயத்தின் வாங்கும் சக்தியை குறைக்கிறது.  பணவீக்கம் விலை குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம் செய்யப் படுகிறது.  இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பணவீக்கம் பொதுவாக அதிகமாக காணப்படும்.  ஆனால் மிக அதிக பணவீக்கம் பொருளாதாரத்தை பாதிக்கும்.


பொதுவாக பணவீக்கம் அதிக ஏற்றமும் அதிக இறக்கமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது நலம்.  தேவையான அளவிற்க்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் கடமை மத்திய வங்கியை சார்ந்தது.  பணவீக்கம் தேவை மற்றும் வழுங்கல் போன்ற காரணிகளால் மாற்றம் அடைகிறது.

Saturday, 8 February 2014

2034?


நமக்கு வியாழன் சூரிய குடும்பத்தில் இருக்கும் மிக பெரிய கிரகம் என்று தெரியும்.  அது  83 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகே வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.   இதற்கு முன்,  அது 1954 ஆம் ஆண்டில் பூமிக்கு அருகில் வந்ததாக கூறப்படுகிறது.   இது அந்த நேரத்தில் பூமியில் இருந்து சுமார் 59 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.   அது மீண்டும் 2034 இல் பூமிக்கு அருகே வரும் என்று நம்பப்படுகிறது!  அதற்கு நீங்கள் தயாரா?