Wednesday 7 May 2014

Filled Under: , , ,

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி-1

உலகத்தில் உள்ள அனைவருமே பணகாரர்களாக பிறப்பதில்லை.  அதே சமயத்தில் ஏழையாக பிறந்தவர்கள் எல்லாருமே ஏழையாகவே சாவதில்லை.  அதில் சில பேர் சாதித்து விட்டு போனவர்கள்.  குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்.  இவர்களில் வாழ்கை வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினை, பாதை மற்றும் ஒரு வழிகாட்டி.  அப்படி ஏழையாக பிறந்து பிற்காலத்தில் கோடீஸ்வரர்கள் ஆன ஏழு பேரின் வாழ்கை வரலாற்றை சற்று குறிப்பெடுப்போம்.

ஆண்ட்ரூ கார்னகி

ஆண்ட்ரூ கார்னகி ஒரு அமெரிக்க தொழிலதிபர்.  கார்னகி ஸ்டீல் கம்பெனியை உருவாக்கியவர்.  அந்த காலத்தில் லண்டன் முழுவதும் உருவாக்கிய இரும்புகளை விட இவர் கம்பெனி அதிகமான இரும்புகளை உற்பத்தி செய்யது.  ஆண்ட்ரூ கார்னகி ஸ்காட்லாந்தில் ஒரு ஏழை கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.

Image Courtesy: yourstory.com

வறுமையிலேயே தன் வாழ்கையை துவக்கினார் இவர்.  ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டில் தங்கினார்.  பல வேளைகளில் பசியை போக்க படுத்துறங்கியவர். வறுமையை போக்குவதற்க்காக அமெரிக்காவிற்க்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. 

இவர் தனது 13 ஆவது வயதில் நூல் சுற்றி வைக்கும் சக்கரத்தை சுற்றும் தொழிலாளியாக பிட்ஸ்பர்கில் ஒரு பருத்தி ஆலையில் சேர்ந்தார்.  ஒரு நாளைக்கு 12 மணி நேரம் விதமாக ஒரு வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்தார்.  இவரது ஒய்வு நேரத்தில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.  வாழ்கையில் அடிமட்டத்திலிருந்து முன்னேறிய பலரது வாழ்கை வரலாறுகளை படித்து அதன் மூலம் உத்வேகம் பெற்றார்.

கார்னகி பல வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.  தபால் போடும் பையனாக, இரயில் தண்டவாளங்களை பராமரிக்கும் ஆளாக பணியாற்றினார்.  பின்பு மெஷின் ஆப்ரேடராக பதவி உயர்வு பெற்றார்.  நூலகங்கள் மூலம் தனது கல்வி அறிவை வளர்த்து கொண்டார்.  கொஞ்சம் கொஞ்சமாக தொழில்கள் பற்றி கற்று கொண்டார்.  இரும்பு மற்றும் எண்ணெய் கம்பெனிகளில் முதலீடு செய்தார்.  அது அவருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது.  1889 ஆம் ஆண்டு வாக்கில் இவர் உருவாக்கிய இரும்பு கம்பெனி உலகத்தில் நம்பர் ஒன்னாக உருவாகியது.  கார்னகி உலக பணக்காரர்களில் ஒருவரானார்.

இன்றைய அமெரிக்கா உருவாகுவதற்கு இருந்தவர்களில் முக்கியமானவர் கார்னகி.  1901 ஆம் ஆண்டு இவரது கம்பெனியான கார்னகி ஸ்டீலை ஜெ.பி.மார்கனுக்கு டாலர் 480 மில்லியனுக்கு விற்று, பின்பு தான தர்மங்கள் செய்து கொடையாளர் ஆனார்.  இவர் பல கோடிகளை நியூயார்க் நூலகத்திற்க்கு கொடுத்தார்.  பிட்ஸ்பர்கில் கார்னகி தொழில் நுட்ப நிறுவனத்தை நிறுவினார்.  அது இப்போது கார்னகி-மெலன் பல்கலைகழகம் என்று அழைக்கப் படுகிறது.  மேலும் உயர் கற்பித்தலுக்காக கார்னகி அறக்கட்டளையும், உலக அமைதிக்காக கார்னகி நன்கொடை நிறுவனத்தையும் நிறுவினார்.

சாமுவேல் வால்டன்

சாதாரண சிறிய பல சரக்கு கடையாக இருந்து இன்று அதிகமாக சர்ச்சைக்கும் பல சிறு வணிகர்களுக்கு அச்சத்தை தரும் டாலர் 23 பில்லியன் மதிப்புடைய, பொருளாதார மந்தம் நிலவிய காலத்தில் உருவான வால்ட் மார்ட் நிறுவனத்தை உருவாக்கியவர்தான் சாமுவேல் வால்டன். 

Image Courtesy: yourstory.com

தனது குடும்பத்திற்க்காக பல சிறிய வேலைகளை செய்தவர்.  தன் வீட்டில் பசுமாடு தந்த அதிகப் படியான பாலை வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்தவர்.  அதற்கு பிறகு செய்தித்தாள் போடும் வேலையும் செய்திருக்கிறார்.  மாத இதழ்களுக்கு சந்தாவும் வசூலித்திருக்கிறார்.  கல்லூரியில் படிக்கும் போதே பல வேலைகளை செய்திருக்கிறார்.  

கல்லூரி படிப்பை முடித்த பிறகு இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் இராணுவத்தில் சேர்ந்தார்.  இராணுவத்தில் இருந்து ஓய்வுப் பெற்ற பிறகு தனது 26 வது வயதில் ஒரு பல சரக்கு கடையை மேற்பார்வையிடும் வேலைக்கு சேர்ந்தார்.

கடனை வாங்கி தனது முதல் கடையை வாங்கினார்.  சில நாட்களிலேயே தனது இரண்டாவது கடையையும் வாங்கினார்.  மூன்றாண்டுகளில் இவரது விற்பனை டாலர் 2 லட்சத்தை தாண்டியது.  இவருடைய முதல் வால்ட்-மார்ட் கடை 1962 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள், ஆர்கன்சாஸில் உள்ள ரோஜர்ஸில் தொடங்கப் பட்டது.  போபர்ஸ் பத்திரிக்கை 1982 லிருந்து 1988 ஆண்டுகளில் வால்டனை உலக பணக்காரர்களில் ஒருவராக அறிவித்தது.  அவர் மறைந்த 1992 ஆம் ஆண்டில், அவருக்கு 1960 கடைகள் சொந்தமாக இருந்தது.  சுமார் 3 லட்சத்திற்க்கும் மேலான தொழிலாளர்கள் இருந்தார்கள்.  ஆண்டு நிகர வருமானம் சுமார் டாலர் 50 பில்லியனுக்கும் மேலிருந்தது.


இதன் >பகுதி-2< >பகுதி-3< யும் படிக்கவும்.

Courtesy: The article was originally published by: yourstory.com

0 comments:

Post a Comment