நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும்
திறன் கொண்டவர் என்று மார்தட்டுபவரா? இதோ,
உங்களுக்காக ஒரு செய்தி.
’நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு முயல்களை
துரத்தினால், உங்களால் ஒரு முயலையும் பிடிக்க முடியாது’- என்கிறது ஒரு ரஷ்யாவின் பழமொழி. இப்போது நான் எதைப் பற்றி சொல்ல போகிறேன் என்று
யூகித்து இருப்பீர்கள். அட! நீங்கள் தான் மல்டி
டாஸ்க் (Multi Task) என்று ஆங்கிலத்தில்
சொல்ல படுகிற பல வேலைகளை செய்பவராயிற்றே!
Image Courtesy: YourStory.com |
முதன் முதலின் இந்த மல்டி டாஸ்க் என்ற சொல்
1960 களில் தான் ஆரம்பமாயிற்று. அப்போது தான்
கம்ப்யூட்டருடன் மனித மூளையை ஒப்பிட்டு பார்க்கும் ஒரு ஒப்பிடு ஆரம்ப மானது. உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டர் மூன்று வேலைகளை
ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றல் கொண்டது எனில், அது அந்த மூன்று வேலைகளையும் மூன்று
பகுதிகளாக பிரித்து அவற்றை முடிக்கும். இந்த
ஒப்பீடு மூலம் பலர் ‘பல வேலைகளை செய்யும் திறமைசாலி’ என்று பல பாரட்டுகளையும் பரிசுகளையும்
பெற்றார்கள், பெற்று கொண்டிருக்கிறார்கள்.
பல
வேலைகளை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்
பொதுவாக நமது மூளை பல பணிகளை செய்யும் திறன்
கொண்டது. அதனால் தான் தெரிந்தோ தெரியாமலேயோ
நாம் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்கிறோம்.
உதாரணத்திற்கு பாட்டு கேட்டு கொண்டே பேப்பர் படிக்கிறோம். ஆனால் இவற்றையேல்லாம் நாம் அதிக திறன் கொண்டு செய்வதில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டுமே குறைந்த
தீவிரம் கொண்ட செயல்கள். ஆனால் எப்போது நாம்
அதிக தீவிரம் கொண்ட செயல்களை செய்கிறோமோ அப்போது நமது செயல் திறன் பாதிக்கப் படுகிறது. உதாரணத்திற்கு உங்கள் மருத்துவர் அவரது மனைவியிடம்
பேசிக் கொண்டே உங்களுக்கு சிகிச்சை அளிக்க விரும்ப மாட்டீர்கள். பல வேலைகளை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்:
- உங்கள் ஐ.கியூ (Intelligent Quotient- IQ) குறைகிறது என்று லண்டன் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு கூறுகிறது. ஐ.கியூ என்பது அறிவுதிறனை அளவிடும் ஒரு மதிப்பீடு.
- உங்கள் செயல் திறனை குறைக்கிறது என்று மற்றொரு ஆய்வு சொல்கிறது. கிட்டதட்ட 40 சதவீதம் உங்கள் செயல் திறன் குறைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
- மேரிலாந்தில் உள்ள ஒரு நரம்பு கோளாறுகள் தேசிய நிறுவனம் நடத்திய ஆய்வு, பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளது.
- தொடந்து பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால் மூளையை பாதிப்படைய செய்யும். இதனால் கற்கும் திறன் மற்றும் கவன குறைவும் ஏற்படுகிறது.
- இதனால் குறைந்த தீவிரம் கொண்ட பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவரை விட அதிக தீவிரம் கொண்ட பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர் அதிகமாக பாதிப்படைகிறார்.
எப்படி
இதை கையாள்வது?
- முதலில் நீங்கள் செய்யும் வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். வேறு எந்த நினைவுகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
- வேலைகளை ஒவ்வொன்றாக முடிக்க பாருங்கள். ஒரு வேலையை முடித்த பிறகு அடுத்த வேலையை கையில் எடுங்கள்.
- காலையில் எப்போதும் போல் இல்லாமல் ஒரு முப்பது நிமிடம் முன்னதாக எழுந்து நடைபயிற்சி அல்லது தியானம் செய்யுங்கள்.
- இரவு படுக்கைக்கு எப்போதும் போல் இல்லாமல் ஒரு முப்பது நிமிடம் முன்னதாக தூங்க செல்லுங்கள்.
Courtesy: The Article was originally published by: YourStory.com
0 comments:
Post a Comment