இனி அதிகமாகி வரும் இரயில் கட்டணங்களை பற்றி
கவலைப்பட வேண்டாம். இரயில் கட்டணத்தை தவணை
முறையில் செலுத்தும் வசதியை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதி ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு
மட்டும் பொருந்தும்.
இந்திய இரயில்வே பல சிறப்பு விடுமுறை கால
இரயில்களை அறிமுகப் படுத்தியிருக்கிறது. இவற்றில்
பயணம் செய்வதற்க்கு அதிக கட்டணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் நடுத்தர மக்கள் இவற்றை பயன்படுத்த முடியாமல்
இருக்கிறது. இந்த EMI வசதிமூலம் அது சாத்தியமாயிருக்கிறது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, கட்டணம்
செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது, EMI என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து
அதன் வழியாக கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் இந்த வசதியை பெறலாம். முன்பதிவிற்க்கான கட்டணம் முழுவதும் கிரெடிட் கார்டிலிருந்து
கழிக்க படும். பின்பு அது மாதா மாதம் வங்கியிலிருந்து
தவணை முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.
தற்போது இந்த வசதி சிட்டி பேங்க் கிரெடிட்
கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமெ உள்ளது.
மேலும் இனி வரும் நாட்களில் இவ்வசதி மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு விரிவுப்படுத்த
படலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
இணையம் மூலம் பொருள்களை வாங்குவது அதிகரித்திருக்கும்
இந்த காலத்தில், மின்னனு பொருள்கள், புத்தகங்கள், ஆடை அணிகலன்கள் தவிர இப்போது மளிகை
பொருள்கள் விற்கும் அளவிற்க்கு இது விரிவடைந்திருக்கிறது. அவ்வழியில் மளிகை பொருள்களை விற்கும் இணைய வணிகதளம்
லோக்கல் பன்யா (Local Banya) ஒரு நாளைக்கு 600 ஆர்டர்களை கையாளுகிறது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த
நிறுவனத்தில் இப்போது சுமார் 8000 மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப் படுகிறது. இந்நிறுவனத்தில் 100 க்கும் மேற்ப்பட்டோர் வேலை
பார்க்கின்றனர்.
இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதல்
காரணம் நேரம் தவறாமை. குறித்த நேரத்தில் பொருள்களை
வாடிக்கையாளர்களின் இடம் சென்று சேர்ப்பது இவர்களது வெற்றிக்கு ஒரு முதன்மையான காரணம். மேலும் பொருள்களை வாங்கிய பின்பு செய்து தரும் சேவையும்
ஒரு காரணம். இது இவர்களது தலையாய குறிக்கோளும்
கூட. ஏனென்றால் மளிகைப் பொருள்களை குறித்த
நேரத்தில் டெலிவரி செய்வது மிகவும் முக்கியம்.
அதுவும் எளிதில் அழுகும் பொருள்களான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சரியான நேரத்தில்
சென்று சேர்க்க வேண்டும்.
இந்த முயற்சி இவர்களுக்கு இந்த வெற்றியை
தேடி தந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்து
மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய இவை இரண்டும் இவர்களது மிகப் பெரிய தூண்கள்.
ஒரு ஆர்டர் சராசரியாக Rs.1350/- க்கு
விற்பனையாகிறது. இவற்றில் மளிகைப் பொருள்களின்
சதவிகிதம் 22 ஆகவும், தினசரி பொருள்கள் மற்றும் வீட்டிற்க்கு தேவையான பொருள்களின் முறையே
ஒவ்வொன்றும் 11 சதவிகிதமாகவும், காய்கறிகள் மற்றும் பழங்கள் 11 சதவிகிதமாகவும் உள்ளது.
இந்நிறுவனம் லாபம் மற்றும் நஷ்டமில்லாத
சமநிலைபுள்ளியை வரும் ஜூலை 2014 லில் அடையும் என எதிர்ப்பார்க்க படுகிறது. இந்நிறுவனம் தனது செயல்பாட்டை மேலும் விரிவுப்படுத்த
இருக்கிறது. இதற்க்காக சுமார் ஐந்து மில்லியன்
டாலருக்கு நிதியை திரட்ட திட்டமிட்டிருக்கிறது. (LocalBanya.com)
இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரித்திருப்பதால்
இன்று ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் நீங்கள் கார்களை பார்க்கலாம். குறைந்த பட்சம் ஒரு சிறிய காரையாவது ஒவ்வொருவரும்
வாங்க ஆசை படுகின்றர். இதனால் இன்று கார்களின்
எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது. கார் வைத்திருப்பவர்கள் அவற்றை பராமரிப்பதற்க்கு
சிரம பட வேண்டியிருக்கிறது. இதற்கு காரணம்
அவர்களால் சரியான பாரமரிப்பு நிலையத்தை கண்டறிய முடிவதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் போதவில்லை. இதனால் கார்களின் தரம் நாளுக்கு நாள் பாதிப்படைகிறது. இதற்கு தீர்வாக வந்திருப்பதுதான் மேரிகார்.காம்
(MeriCAR.com).
மேரிகார்.காம் டில்லியை தலைமையிடமாக கொண்ட
கார் வொர்க் ஷாப்ஸ் மற்றும் கார்களை பராமரிக்கும் நிலையங்களை தனது தகவல் பெட்டகத்தில்
வைத்திருக்கும் ஒரு வணிக இணையதளம். இதன் மூலம்
உங்கள் கார்களை பராமரிக்க பராமரிப்பு நிலையங்களை உங்கள் ஊரிலேயே எளிதில் கண்டறியலாம். மேலும் இதன் மூலம் நீங்கள் வெறும் ஒரு அழைப்பு விடுத்தாலே
போதும், பராமரிப்பு நிலையங்களிலிருந்து பணியாளர்கள் உங்கள் கார்களை உங்கள் வீட்டிற்கே
வந்து எடுத்து கொண்டு சென்று மறுபடியும் உங்கள் வீட்டின் முற்றத்திற்கே கொண்டு வந்து
விட்டு விடுவார்கள்.
நீங்கள்
பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு
ராகேஷ் என்பவரால் 2008 ல் ஆரம்பிக்க பட்ட
இந்த நிறுவனம் இப்போது இந்தியா முழுவது இதனை விரிவுப் படுத்தி கொண்டு இருக்கிறது. இதனுடைய ’மை டிரிம், மை சிட்டி’ (My Dream, My
City) என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு நகரிலும் தனது மையத்தை நிறுவ உள்ளது. இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்
வாய்ப்புகள் உள்ளது.
ராகேஷ் சொல்கிறார், ‘நாங்கள், தொழில்கள்
முனைவோர்களை எங்களுடன் இணைய அழைக்கிறோம், அவர்கள் எந்த தொழிலிலும் ஈடுபட்டு இருந்தாலும்
பரவாயில்லை. மேலும் இல்லதரசிகள், பணியிலிருந்து
ஒய்வு பெற்றவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் பணம் சம்பாதிக்கும் எண்ணம்
உள்ள எவரையும் எங்களுடன் இணைய அழைக்கிறோம்.
அவர்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே மேரிகார்.காம் வில் இணைந்து அதன் மூலம்
பணம் சம்பாதிக்கலாம். இதை பற்றிய தகவல்களை
நீங்கள் ஆன்லைன் வீடியோக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்’.
மேரிகார்.காம் தற்போது 10000 நபர்களை
1000 நகர்களில் இருந்து சேர்க்க திட்டம் கொண்டுள்ளது. இவர்களுடன் பார்ட்னராக சேர்பவர்கள் மூலம் தனது கார்
பாராமரிப்பு நிலையங்களை நிறுவ உள்ளது. இதன்
மூலம் பார்ட்னராக சேர்பவர்கள் தனக்கான பங்கை பெறலாம்.
சொந்த தொழில் செய்பவர்கள், கார் இன்சூரன்ஸ்
ஏஜண்ட்டுகள் மற்றும் வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்க நினைபவர்கள் உதிரி வருமானம்
பெற இவர்களுடன் சேரலாம். கார் தொழில்களை பற்றிய
முன் அனுபவம் தேவையில்லை.
மேரிகார்.காம், தனியுரிம வாடிக்கையாளர் தொடர்பு
மேலாண்மை மென்பொருளை தனது பார்ட்னர்களுக்கு வழங்கி எவ்வாறு தொழிலை விரிவிப்படுத்துவது
என்பது பற்றி விளக்கும். இதன் மூலம் மூன்று
நான்கு மாதங்களில் மாதம் ரூபாய் 50000 முதல் 100000 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்கிறது.
மேலும் அதன் பிறகு இத்தொழிலை முழு நேரமாக செய்பவர்கள்
இதை விட இரண்டு மூன்று மடங்கும் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக இந்நிறுவனம் சொல்கிறது.
தொழில்
உதாரணம்
கார் உரிமையாளர்கள் MeriCAR.com என்ற இணையதள
முகவரி மூலமாகவோ அல்லது MeriCAR ஹெல்ப்லைன் கால் சென்டர் மூலமாக தங்களது காரை பராமரிக்க
பதிவு செய்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் ஊழியர்கள்
கார் உரிமையாளர்களுக்கு தங்களது பகுதியில் இருக்கும் பராமரிப்பு நிலையங்களை பற்றிய
விவரங்களை தருவார்கள். கார் பராமரிப்பு நிலையங்கள்
தரும் கமிஷன் தான் இந்நிறுவனத்தின் வருமானம். இதுவரை சுமார் 13000 க்கும் அதிகமான கார்களை மேரிகார்.காம்
பதிவு செய்துள்ளது.
இது ஒரு B2B மாடல். கார் பராமரிப்பு நிறுவனங்கள்
தங்களை இந்த இணையதளத்தில் இணைத்து கொள்வதின் மூலம் தங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது. மேலும் இந்நிறுவனம் கார் உரிமையாளர்களுக்கு உத்திரவாதம்,
பாதுகாப்பும் வழங்குகிறது.
தொடர்ந்த திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள்
மூலம் இத்தொழில் மேலும் வளர்கிறது. மேலும்
கார் உரிமையாளர்கள் இதன் மூலம் பெரும் பணத்தை மிச்ச படுத்த முடிகிறது. இந்நிறுவனம் தயாரித்துள்ள சாப்ட்வேர் மூலம் பார்ட்னர்கள்
மேரிகார்.காம் விற்கு கார்களை பதிவு செய்வதிலிருந்து, அவற்றை கண்காணிப்பது மற்றும்
நிர்வகிப்பது வரை செய்ய முடியும். இதன் மூலம்
அவர்கள் கமிஷன் பெற முடியும். கார் பராமரிப்பு
நிலையங்களும் இந்த சாப்ட்வேரை பயன் படுத்தி தங்களது தொழிலை விரிவு படுத்த முடியும்.
இதில்
பார்ட்னராக எவ்வாறு விண்ணப்பிப்பது
இந்நிறுவனத்தில் பார்ட்னராக முதலில் கீழ்வரும்
லிங்கை பயன்படுத்தி அதில் வரும் பகுதியில் தங்களை பற்றிய விவரம் மற்றும் தாங்கள் தொடங்க
விரும்பும் இடம் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும். இதன் மூலம் இதன் அடிப்படை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். மேலும் தகவல்கள் பெற விரும்பினால் அதற்க்காக சிறப்பு
கோரிக்கை தர வேண்டும்.
Summary:
Mericar.com is an online portal that helps the users (car owners) to choose the best car service centers nearby their home. All the car service centers are well verified and trustworthy. Car owners thereby reduce their cost and timing. Now, Mericar.com calls for partners through which anyone can earn handsome income from their home, in their leisure time. Retired persons, housewives, small entrepreneur, students and anyone who wants to earn extra or full income can opt for this offer.
தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்களை கண்டுவரும்
நம்முடைய வாழ்க்கை ஒன்றை கவனிக்க தவறிவிட்டது.
அதுதான் சத்தான உணவு. இளைஞர்கள் பலர்
இன்று குளிர் அடைக்கப்பட்ட அலுவலகங்களில் கடிகாரத்தை பார்க்காமல் பசியை கூட பொருப்படுத்தாமல்
வேலை பார்க்கின்றனர். இதனால் அவசரகதியில் அவசர
உணவுகளை உண்டு உடலை கெடுத்து கொள்கின்றனர்.
பல இளைஞர்கள் தனது குடும்பங்களை விட்டு விட்டு தனியாக தங்கியிருக்கின்றனர். இதனால் உணவு விசயத்தில் இவர்கள் படும் பாடு சொல்லிமாளாது.
டில்லியில் ஐ.ஐ.டி யில் படித்த இளைஞர் படால்
கொயல் ஒரு மெக்கானிகல் பொறியாளர். இந்த பிரச்சனைக்கு
தீர்வு தேடி பல ஆண்டுகள் கழித்து உருவாக்கியதுதான் FRSH. கவ்ரவ் லால் என்ற ஐ.ஐ.டி டில்லி மற்றும் ஐ.ஐ.ம்
கல்கத்தாவில் படித்த நண்பரின் உதவி மூலம் சந்தைப் படுத்துதல் மற்றும் தொழில் உத்தியை
கற்றுக் கொண்டு இந்த தொழிலை உருவாக்கியிருக்கிறார் படால்.
கடந்த மூன்றாண்டுகளில் இடைவிடாத உழைப்பின்
மூலம் உருவானதே FRSH. இது வேலை செய்யும் இளைஞர்களை
கருத்தில் கொண்டு உருவானது. இன்றைய இளைஞர்கள்
தரம் நிறைந்த, குறைந்த நேரமே எடுத்து கொள்கிற, வகைகள் பல நிறைந்த உணவுவகைகளையே விரும்புகின்றனர். இவர்களுக்காக பல வணிக மாதிரிகளை சோதனை செய்த பின்னர்
கடைசியாக வெற்றி பெற்றதுதான் FRSH.
நீங்கள் உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம். பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம். நீங்கள் அலுவலகம் செல்வதற்க்கு பயணம் செய்யும் போதே
FRSH ல் 30 வினாடிகளில் ஒரு ஆரஞ்ச் ஜூஸை ஆர்டர் செய்யலாம். நீங்கள் அலுவலகத்தில் நுழையும் போது அங்கு வரவேற்பறையில்
உங்களுக்காக ஆரஞ்ச் ஜூஸ் தயாராக இருக்கும்.
அதற்கான பணத்தை செலுத்தி விட்டு நீங்கள் அதை பெற்று கொள்ளலாம்.
பல தடவைகளுக்கு பிறகு மற்றும் வாடிக்கையாளர்களின்
ஆலோசனைகளுக்கு பிறகு உணவின் தரம் உயர்த்தப் பட்டிருக்கிறது. தற்போது இந்த சேவை குர்க்கானில் உள்ள சில அலுவலகங்களுக்கு
மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில்
இந்த சேவை குர்க்கானில் உள்ள பல அலுவலகங்களுக்கும் மேலும் பள்ளிகள், கல்லூரிகள், இரயில்
நிலையங்கள், பல அடுக்குமாடி வீடுகளிலும் விரிவுப் படுத்தபட இருக்கிறது என்கிறார் படால்.
ஒரு நாளைக்கு 80 முதல் 90 வரை ஆர்டர்கள்
பெறப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள்
இதை 1000 ஆர்டர்களாக உயர்த்த FRSH திட்டமிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் தொழில்நுட்பம், தானியங்கிகள்
மற்றும் தரத்தில் முதலீடு செய்ய இருக்கிறது.
இதன் வாடிக்கையாளர்கள் தொடந்து இதற்க்கு ஆதரவு கொடுத்து வருவது இதன் வெற்றிக்கு
ஒரு அடையாளம். இதன் முக்கிய நோக்கம் தரமான
உணவு வகைகளை சரியான விலையில் கொடுப்பதேயாகும்.
Courtesy: The article was originally published by: yourstory.com
Timescity.comஒரு உணவு வழிகாட்டி மற்றும் உணவு விடுதிகளை தரம் பிரித்து விமர்சனம் செய்யும்
ஒரு ஆன்லைன் இணைய தளம். சமீபத்தில் இந்த நிறுவனம்
Dineout.co.in என்ற, டில்லி மற்றும் மும்பையில் உள்ள உணவு விடுதிகளில் இருக்கைகளை பதிவு
செய்யும் சேவையை செய்து வரும் இணையதள நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் மூலம் Timescity.com தங்களது சேவையை விரிவுப்
படுத்தி உள்ளது.
Timescity.com இணையதளம் கடந்த 12-18 மாதங்களில் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த இணையதளம் 20 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது. Dineout.co.in யை கையகப் படுத்தியதன் மூலம், இது
மேலும் பல பார்வையாளர்களை வரவேற்க்கும் என்று நம்பப்படுகிறது.
Dineout.co.in இணையதளம் டில்லி மற்றும் மும்பையில் உள்ள உணவு
விடுதிகளில் இருக்கைகளை ஆன்லைன் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ பதிவு செய்யும் சேவையை
வழங்கி வருகிறது. அவ்வாறு பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு
தள்ளுபடியும் கொடுக்கிறது. இது சுமார் 2 லட்சம்
பதிவுகளை இதுவரை செய்திருக்கிறது.
இந்த சேவையில் ஈடுபட்டிருக்கும் Zomato.com இணையதளம், இந்திய
சந்தையில் மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. இது மாதத்திற்க்கு சுமார் 50 லட்சம் பார்வையாளர்களை
கொண்டுள்ளது. இவர்களுடைய மொபைல் அப்பிளிகேஷன்
ஆன்ராய்டு மற்றும் iOS இல் சுமார் 20 லட்சம் தடவை பதிவிறக்கம் செய்யப் பட்டிருக்கிறது. மேலும் Burrp.com இணையதளம் இந்த சேவையில் இரண்டாவதாக
உள்ளது.
Dineout.co.in இணையதளத்தை கையகப் படுத்தியதன் மூலம்,
Timescity.com இந்த இரண்டு முன்னனியில் இருக்கும் நிறுவனங்களிடம் தனது போட்டியை அதிகப்படுத்தும்.
The content was originally published: ஆதாரம்: Trak.in
எந்த ஒரு தொழிலின் அடிப்படையே அதற்க்கு உண்டான
தேவையே. தேவையின் அடிப்படையிலேயே ஒரு தொழிலின்
அல்லது ஒரு பொருளின் வெற்றி நிர்ணியக்கப் படுகிறது. மனிதனின் தேவைகள் பல. அவற்றை நாம் சரியாக இனம் கண்டுக்
கொண்டால், நமது தொழிலுக்கான ஐடியா கிடைத்து விடும். நமது தொடர் சேவையினால் அது பிறகு வெற்றிப் பெருகிறது.
இப்போது மக்கள் பலப் பொருள்களை ஆன்லைனில்
வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றுள் பலவற்றை
மக்கள் நேரடியாக கடைகளில் சென்று வாங்குவதற்க்கு கூச்சப் படிவார்கள். அவ்வாறு வாங்கும் பொருள்களில், காண்டம் என்று சொல்லப்
படுகிற கருத்தடை சாதனங்கள், பெண்களுக்கான மாதவிடாய் பொருள்கள் மிக முக்கியமானவை. இவற்றை கருத்தில் கொண்டு, உருவாக்கப் பட்டுள்ள ஆன்லைன்
ஷாப்பிங் தான் Shycart.com.
இந்நிறுவனம் இது தவிர, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான
உள்ளாடைகள், கருத்தரித்த அல்லது குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கான பொருள்கள் மற்றும்
உடலுறவு சம்மந்தமான பொருள்களையும் விற்பனை செய்கிறார்கள்.
இவர்களுடைய ஒரு சிறப்பு அம்சம், இவர்கள்
இந்த பொருள்களை பேக்கிங் செய்யும் முறை. அதனால்
வாங்குபவர்கள் கவலை கொள்ள தேவையில்லை. மற்றவர்களால்
நாம் என்ன பொருள் வாங்குகிறோம் என்று தெரியாதபடி பொருள்களை பேக்கிங் செய்து டெலிவரி
செய்கிறார்கள்.
பெரும்பாலான பொருள்களை ஆன்லைனில் வாங்கும்
பழக்கம் பெருகுகிற இந்த காலக் கட்டத்தில் தொழில் தொடங்க விரும்புவோர் அல்லது ஏற்கனவே
தொழில் செய்வோர், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய இந்த மாதிரி மாற்றி யோசித்தால் பலன்
பெறலாம். ஆதாரம்: Trak.in Image Courtesy: Shycart.com
The content was originally published by Trak.in
இணையதளம் உலகத்தை சுருக்கி இருந்தாலும் அது ஒரு வகையில் உலகளாவிய வாய்ப்புகளை
பரந்து விரிய விட்டிருக்கிறது. தொழில் முனைவோர்
தங்கள் தொழில்களை பல நாடுகளுக்கு கொண்டு சென்று தங்கள் வருமானத்தை பெருக்குகின்றனர். அப்படி உங்களுக்கு உதவுவதற்க்காகவே அமேசான் அளிக்கும்
இந்த சிறப்பு சேவை மூலம் நீங்கள் இந்தியா முழுவதும் உங்கள் பொருள்களை விற்க வாய்ப்பளிக்கிறது.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் பொருள்களை அமேசானில் பட்டியலிடுங்கள். அதற்க்காக வடிவமைக்கப்பட்ட இணையதள கருவிகள், மென்பொருள்கள்
மூலம் நீங்கள் உங்கள் பொருள்களை பட்டியலிடலாம்.
வாடிக்கையாளர்கள் அமேசானில் உங்கள் பொருள்களை காண்பார்கள். அவர்களுக்கு தேவையான பொருள்களை அதற்க்கான பணத்தை
செலுத்தி ஆன்லைனிலே ஆர்டர் செய்வார்கள். சிலர்
பணம் செலுத்திய பிறகு பொருளை வாங்கும் விருப்பத்தையும் தேர்ந்து எடுக்கலாம். அமேசான்
அவர்கள் ஆர்டர் செய்த பொருள்களின் பட்டியலை உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
நீங்கள் அந்த பொருள்களை வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்த பிறகு,
அமேசான் அதற்கான விலையை (அவர்களின் தரகு கழித்து) உங்கள் வங்கி கணக்கில் சேர்த்து விடுவார்கள்.
கட்டணங்கள்
அமேசானில் உங்கள் பொருள்களை பட்டியலிடுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. அவர்கள் தரகு மட்டும் வசூலிக்கிறார்கள். மாதசந்தாவாக ரூபாய் 499 வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வோரு பொருள் விற்று முடியும் போது ரூபாய்
10 வசூலிக்கப்படுகிறது. தரகு கட்டணம் 5% லிருந்து
15% வரை பொருள்களுக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது.
குறிப்பாக புத்தகங்களுக்கு மின்னனு பொருள்களுக்கு 12% ம், மொபைல் போன்களுக்கு,
கணிணிகளுக்கு 5% ம், குழந்தைகளுக்கான பொருள்கள், நகைகள் மற்றும் வீட்டுப் பொருள்களுக்கு
15% ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தரகுக்கு
12..36% சேவை வரியும் உண்டு. தரகு கட்டணம்,
வாடிக்கையாளர் செலுத்தும் பணத்தின் மதிப்பில் கணக்கிடப்படுகிறது. இதில் டெலிவரி சார்ஜ் மற்றும் வரிகளும் அடங்கும்.
குறிப்பு: முதல் வருடத்திற்க்கு
சந்தா மற்றும் தரகுகளில் தள்ளுபடி ஆகியவை உண்டு, இரண்டாண்டுகள் ஒப்பந்த அடிப்படையில்.
மேலும் விபரங்களுக்கு >இங்கே< கிளிக் செய்து அமேசான் தளத்திற்க்கு சென்று தெரிந்துக்
கொள்ளவும்.