இணையம் மூலம் பொருள்களை வாங்குவது அதிகரித்திருக்கும்
இந்த காலத்தில், மின்னனு பொருள்கள், புத்தகங்கள், ஆடை அணிகலன்கள் தவிர இப்போது மளிகை
பொருள்கள் விற்கும் அளவிற்க்கு இது விரிவடைந்திருக்கிறது. அவ்வழியில் மளிகை பொருள்களை விற்கும் இணைய வணிகதளம்
லோக்கல் பன்யா (Local Banya) ஒரு நாளைக்கு 600 ஆர்டர்களை கையாளுகிறது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த
நிறுவனத்தில் இப்போது சுமார் 8000 மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப் படுகிறது. இந்நிறுவனத்தில் 100 க்கும் மேற்ப்பட்டோர் வேலை
பார்க்கின்றனர்.
இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதல்
காரணம் நேரம் தவறாமை. குறித்த நேரத்தில் பொருள்களை
வாடிக்கையாளர்களின் இடம் சென்று சேர்ப்பது இவர்களது வெற்றிக்கு ஒரு முதன்மையான காரணம். மேலும் பொருள்களை வாங்கிய பின்பு செய்து தரும் சேவையும்
ஒரு காரணம். இது இவர்களது தலையாய குறிக்கோளும்
கூட. ஏனென்றால் மளிகைப் பொருள்களை குறித்த
நேரத்தில் டெலிவரி செய்வது மிகவும் முக்கியம்.
அதுவும் எளிதில் அழுகும் பொருள்களான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சரியான நேரத்தில்
சென்று சேர்க்க வேண்டும்.
இந்த முயற்சி இவர்களுக்கு இந்த வெற்றியை
தேடி தந்திருக்கிறது. சரக்கு போக்குவரத்து
மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய இவை இரண்டும் இவர்களது மிகப் பெரிய தூண்கள்.
ஒரு ஆர்டர் சராசரியாக Rs.1350/- க்கு
விற்பனையாகிறது. இவற்றில் மளிகைப் பொருள்களின்
சதவிகிதம் 22 ஆகவும், தினசரி பொருள்கள் மற்றும் வீட்டிற்க்கு தேவையான பொருள்களின் முறையே
ஒவ்வொன்றும் 11 சதவிகிதமாகவும், காய்கறிகள் மற்றும் பழங்கள் 11 சதவிகிதமாகவும் உள்ளது.
இந்நிறுவனம் லாபம் மற்றும் நஷ்டமில்லாத
சமநிலைபுள்ளியை வரும் ஜூலை 2014 லில் அடையும் என எதிர்ப்பார்க்க படுகிறது. இந்நிறுவனம் தனது செயல்பாட்டை மேலும் விரிவுப்படுத்த
இருக்கிறது. இதற்க்காக சுமார் ஐந்து மில்லியன்
டாலருக்கு நிதியை திரட்ட திட்டமிட்டிருக்கிறது. (LocalBanya.com)
Source: YourStory.com
0 comments:
Post a Comment