Monday 5 May 2014

Filled Under: ,

ஒரு முடிதிருத்தும் தொழிலாளி வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் – ரமேஷ் பாபு

ரோல்ஸ் ராய்ஸ் என்பது ஒரு உயர் ரக கார் வகையை சார்ந்தது.  இதன் விலை எவ்வளவு தெரியுமா?  இதன் விலை இந்தியாவில் ரூபாய் இரண்டு கோடியே ஐம்பது லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

ரமேஷ் பாபு, ஒரு முடிதிருத்தும் தொழிலாளியாக இருந்து இன்று கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தவர்.  இவர் தனது குறைவான சேமிப்பிலிருந்து 1994 ஆம் ஆண்டு மாருதி காரை வாங்கியவர்.  2004 ஆம் ஆண்டில் இவர் நான்கு கார்களை வாடகைக்கு தரும் தொழிலை விரிவு படுத்தினார்.  இன்று 2014 ஆம் ஆண்டில் இவரிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கை 200.  இந்த கார்களில் 75 கார்கள் உயர்வகையை சார்ந்தவை.

Image Courtesy: yourstory.com

ரமேஷ் பாபு தனது வாழ்க்கையை அடிமட்டத்திலிருந்து தொடங்கியவர்.  இவ்வளவு வெற்றி பெற்ற பிறகும் இவர் தன் தந்தை சொல்லி கொடுத்த முடி திருத்தும் தொழிலை மறக்க வில்லை.  அதற்கு இவர் மனதில் எப்போதும் ஒரு இடம் உண்டு.  இன்றும் இவர் முடிதிருத்துவதிற்க்கு ரூபாய் நூறு மட்டுமே வாங்குகிறார்.  இவர் பல செய்திதாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ‘கோடீஸ்வர முடிதிருத்தும் தொழிலாளி’ என புகழ் பெற்றவர்.

முந்தைய வாழ்க்கை

இவர் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.  இவரது தந்தை ஒரு முடிதிருத்தும் தொழிலாளி.  இவர் தந்தை இறந்த பிறகு, இவரது தாய் வீட்டு வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.  இவரது தந்தையின் தொழிலை இவரது உறவினர் எடுத்து நடத்தினார்.  இதன் மூலம் இவரது குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் ஐந்து கிடைத்தது.  இந்த குறைந்த வருமானம் குடும்பத்திற்க்கு போதவில்லை.  நாள் ஒன்றுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.

ரமேஷ் பல சிறு சிறு வேலைகளை செய்து தனது குடும்பத்திற்க்காக உதவினார்.  பேப்பர் போடுவதிலிருந்து, பால் டெலிவரி செய்யும் சிறு சிறு வேலைகளை செய்து எப்படியோ தனது S.S.L.C. படிப்பை முடித்து, மாலையில் PUC சேர்ந்தார்.

பிறகு இவரது தாய்க்கும் முடிதிருத்தும் தொழிலை ஏற்று நடத்தி வந்த உறவினருக்கும் அடிக்கடி சண்டைகள் வந்து போயின.  ஒரு கட்டத்தில் இவரது உறவினர் இவர்களுக்கும் பணம் தருவதை நிறுத்தி விட்டார்.  அப்போது, இத்தொழிலை ஏற்று நடத்தலாம் என்று முன்வந்த இவரை இவரது தாய் இவரது படிப்பை காரணம் காட்டு இதற்கு சம்மதிற்க்க வில்லை.

ஆனால் அந்த கடையை இவர் ஏற்று நடத்த தொடங்கினார்.  காலையில் இத்தொழிலை செய்து மாலையில் படிப்பை தொடர்ந்த இவர் இந்த தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக கற்க தொடங்கினார்.  மாலையில் படிப்பு முடிந்த பிறகு மீண்டும் இரவிலிருந்து அடுத்த நாள் காலை ஒரு மணிவரை முடிதிருத்தும் தொழிலை தொடர்ந்தார்.

திருப்புமுனை

1993 ஆம் ஆண்டு பின் பகுதியில் இவரது உறவினர் வாங்கிய சிறிய காருக்கு எதிராக ஒரு சிறிய பெருமைக்காக, இவர் ஒரு பழைய மாருதி வேனை வாங்கினார்.   தனது குறைந்த சேமிப்பு மற்றும் கடன் மூலம் இவரது உறவினருடைய காரைவிட பெரியதான இந்த காரை வாங்கினார்.  இதற்காக இவரது தாத்தா அவரது சொந்த நிலத்தை கடனுக்காக அடமானம் வைத்தார். 

கடனுக்கான வட்டி ரூபாய் 6800 கட்டுவதற்க்கு மிகவும் சிரமப்பட்டார்.  பின்பு இவருடைய தாய்க்கு தெரிந்த ஒரு அக்கா கொடுத்த யோசனை மூலம் அந்த காரை வாடைகைக்கு விடத்தொடங்கினார்.  இந்த தொழிலைப் பற்றிய அனைத்து விபரங்களையும் இவருக்கு அந்த அக்கா சொல்லி கொடுத்தார்.

தொடர்ந்த வெற்றி

பிறகு 1994 ஆம் ஆண்டு முதல் இந்த தொழிலை முழுமையாக நடத்த தொடங்கினார்.  இவரது முதல் தொழில் Intel நிறுவனத்தின் மூலம் கிடைத்தது.  இதை வாங்கி கொடுத்தவர் அந்த அக்காதான் ஏனென்றால் அவர் அங்கு பணிபுரிந்து வந்திருக்கிறார்.  படிப்படியாக ஒவ்வொரு கார் களாக வாங்கி இந்த தொழிலை மேலும் விரிவுப் படுத்தினார்.  2004 ஆம் ஆண்டு வரை இவரிடம் இருந்த மொத்த கார்களின் எண்ணிக்கை 5 லிருந்து 6 வரை மட்டுமே.

பிறகு இந்த தொழிலில் பல போட்டிகள் வர தொடங்கிய போது, இவர் உயர் ரக கார்களை வாங்கி பயன் படுத்த தொடங்கினார்.  ஏனென்றால் இந்த தொழிலில் போட்டியாக இருந்தது சிறிய வகை கார்கள் மட்டுமே.

2004 ஆம் ஆண்டு ரூபார் 40 லட்சம் கொடுத்து ஒரு உயர்ரக முதன் முதல் வாங்கினார்.  அப்போது இதன் மதிப்பு அதிகம்.  இதை வாங்கிய போது பலரும் எதிர் கருத்துகள் தெரிவித்தனர்.  ஒருவேளை இந்த யோசனை சரியாக வில்லையேன்றால் இந்த காரை விற்று விடும் நோக்கில் இருந்தார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இவரது தொழில் மிகவும் நன்றாக செயல்பட தொடங்கியது. 

தொழிலில் வெற்றி பெற இடர்களை எதிர் கொள்ளுங்கள்

2011 ஆம் ஆண்டு இவர் வாங்கிய உயர்ரக கார் ரோல்ஸ் ராய்ஸ், வாங்கிய விலை ரூபாய் 4 கோடி.  பலரும் இந்த யோசனையை எச்சரித்தார்கள். இதில் உள்ள இடர்களை பற்றி கூறினார்கள்.  அப்போது இவர் தனக்கு தானே கூறி கொண்டது, ‘2004 ஆம் ஆண்டு நான் ரிஸ்க் எடுத்து உயர்ரக காரை வாங்கினேன்.  அப்படியென்றால் ஏன் என்னால் இப்போது ரிஸ்க் எடுக்க முடியாது?’  இந்த காரை வாங்கி மூன்று வருடங்கள் ஆகிறது.  இதற்க்கான வரவேற்பு மிகவும் அதிகமாக இருந்தது.  இதற்க்கான மாத தவணை வரும் டிசம்பர் மாதத்திற்க்குள் முடிகிறது’.

பெரிய சவால்கள்

எந்த ஒரு தொழிலிலும் ரிஸ்க் இருக்கிறது.  கடந்த ஏப்ரல் மாதம் இவர் 3 கோடி சாலை வரி கட்ட வேண்டியிருந்தது.  அவற்றை எப்படியே பலரிடம் கடன் வாங்கி, சொத்துகளை அடமானம் வைத்து கட்டினார்.  சாலை வரியினால் இவர் பெரும் இடர்பாடுகளை சந்தித்தார்.  ஆனால் வரும் ஆண்டுகளில் அதிலிருந்து மீண்டு வருவேன் என்று சொல்கிறார்.

இவர் தொழில் முனைவோருக்கு தரும் அறிவுரை, ‘கடினமாக உழையுங்கள், எளிமையாக இருங்கள், மற்றவை அனைத்தும் அதிர்ஷ்டம்தான்’.

Courtesy: The article was originally published by: YourStory.com

Image Courtesy: YourStory.com

0 comments:

Post a Comment