Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Thursday, 23 October 2014

, , , ,

இரயில் கட்டணத்தை தவணை முறையில் (EMI) செலுத்துங்கள் IRCTC இல்

இனி அதிகமாகி வரும் இரயில் கட்டணங்களை பற்றி கவலைப்பட வேண்டாம்.  இரயில் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வசதி ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் பொருந்தும்.


இந்திய இரயில்வே பல சிறப்பு விடுமுறை கால இரயில்களை அறிமுகப் படுத்தியிருக்கிறது.  இவற்றில் பயணம் செய்வதற்க்கு அதிக கட்டணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.  இதனால் நடுத்தர மக்கள் இவற்றை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.  இந்த EMI வசதிமூலம் அது சாத்தியமாயிருக்கிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, கட்டணம் செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது, EMI என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதன் வழியாக கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் இந்த வசதியை பெறலாம்.  முன்பதிவிற்க்கான கட்டணம் முழுவதும் கிரெடிட் கார்டிலிருந்து கழிக்க படும்.  பின்பு அது மாதா மாதம் வங்கியிலிருந்து தவணை முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.

தற்போது இந்த வசதி சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமெ உள்ளது.  மேலும் இனி வரும் நாட்களில் இவ்வசதி மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு விரிவுப்படுத்த படலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Source: Trak.in Image: wikimedia.org

Wednesday, 14 May 2014

, , , , ,

மேரிகார்.காம் (MeriCAR.com) உங்களை பணம் சம்பாதிக்க அழைக்கிறது

இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரித்திருப்பதால் இன்று ஒவ்வொரு வீட்டின் முற்றத்திலும் நீங்கள் கார்களை பார்க்கலாம்.  குறைந்த பட்சம் ஒரு சிறிய காரையாவது ஒவ்வொருவரும் வாங்க ஆசை படுகின்றர்.  இதனால் இன்று கார்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகிறது. கார் வைத்திருப்பவர்கள் அவற்றை பராமரிப்பதற்க்கு சிரம பட வேண்டியிருக்கிறது.  இதற்கு காரணம் அவர்களால் சரியான பாரமரிப்பு நிலையத்தை கண்டறிய முடிவதில்லை.  அதற்கு அவர்களுக்கு நேரமும் போதவில்லை.  இதனால் கார்களின் தரம் நாளுக்கு நாள் பாதிப்படைகிறது.  இதற்கு தீர்வாக வந்திருப்பதுதான் மேரிகார்.காம் (MeriCAR.com).


மேரிகார்.காம் டில்லியை தலைமையிடமாக கொண்ட கார் வொர்க் ஷாப்ஸ் மற்றும் கார்களை பராமரிக்கும் நிலையங்களை தனது தகவல் பெட்டகத்தில் வைத்திருக்கும் ஒரு வணிக இணையதளம்.  இதன் மூலம் உங்கள் கார்களை பராமரிக்க பராமரிப்பு நிலையங்களை உங்கள் ஊரிலேயே எளிதில் கண்டறியலாம்.  மேலும் இதன் மூலம் நீங்கள் வெறும் ஒரு அழைப்பு விடுத்தாலே போதும், பராமரிப்பு நிலையங்களிலிருந்து பணியாளர்கள் உங்கள் கார்களை உங்கள் வீட்டிற்கே வந்து எடுத்து கொண்டு சென்று மறுபடியும் உங்கள் வீட்டின் முற்றத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள்.

நீங்கள் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு

ராகேஷ் என்பவரால் 2008 ல் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனம் இப்போது இந்தியா முழுவது இதனை விரிவுப் படுத்தி கொண்டு இருக்கிறது. இதனுடைய ’மை டிரிம், மை சிட்டி’ (My Dream, My City) என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு நகரிலும் தனது மையத்தை நிறுவ உள்ளது.  இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. 

ராகேஷ் சொல்கிறார், ‘நாங்கள், தொழில்கள் முனைவோர்களை எங்களுடன் இணைய அழைக்கிறோம், அவர்கள் எந்த தொழிலிலும் ஈடுபட்டு இருந்தாலும் பரவாயில்லை.  மேலும் இல்லதரசிகள், பணியிலிருந்து ஒய்வு பெற்றவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் பணம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ள எவரையும் எங்களுடன் இணைய அழைக்கிறோம்.  அவர்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே மேரிகார்.காம் வில் இணைந்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.  இதை பற்றிய தகவல்களை நீங்கள் ஆன்லைன் வீடியோக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்’.


மேரிகார்.காம் தற்போது 10000 நபர்களை 1000 நகர்களில் இருந்து சேர்க்க திட்டம் கொண்டுள்ளது.  இவர்களுடன் பார்ட்னராக சேர்பவர்கள் மூலம் தனது கார் பாராமரிப்பு நிலையங்களை நிறுவ உள்ளது.  இதன் மூலம் பார்ட்னராக சேர்பவர்கள் தனக்கான பங்கை பெறலாம்.

சொந்த தொழில் செய்பவர்கள், கார் இன்சூரன்ஸ் ஏஜண்ட்டுகள் மற்றும் வீட்டிலிருந்த படியே பணம் சம்பாதிக்க நினைபவர்கள் உதிரி வருமானம் பெற இவர்களுடன் சேரலாம்.  கார் தொழில்களை பற்றிய முன் அனுபவம் தேவையில்லை. 

மேரிகார்.காம், தனியுரிம வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை மென்பொருளை தனது பார்ட்னர்களுக்கு வழங்கி எவ்வாறு தொழிலை விரிவிப்படுத்துவது என்பது பற்றி விளக்கும்.  இதன் மூலம் மூன்று நான்கு மாதங்களில் மாதம் ரூபாய் 50000 முதல் 100000 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்கிறது.  மேலும் அதன் பிறகு இத்தொழிலை முழு நேரமாக செய்பவர்கள் இதை விட இரண்டு மூன்று மடங்கும் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக இந்நிறுவனம் சொல்கிறது.

தொழில் உதாரணம்

கார் உரிமையாளர்கள் MeriCAR.com என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது MeriCAR ஹெல்ப்லைன் கால் சென்டர் மூலமாக தங்களது காரை பராமரிக்க பதிவு செய்து கொள்ளலாம்.  இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கார் உரிமையாளர்களுக்கு தங்களது பகுதியில் இருக்கும் பராமரிப்பு நிலையங்களை பற்றிய விவரங்களை தருவார்கள்.  கார் பராமரிப்பு நிலையங்கள் தரும் கமிஷன் தான் இந்நிறுவனத்தின் வருமானம்.  இதுவரை சுமார் 13000 க்கும் அதிகமான கார்களை மேரிகார்.காம் பதிவு செய்துள்ளது.


இது ஒரு B2B மாடல். கார் பராமரிப்பு நிறுவனங்கள் தங்களை இந்த இணையதளத்தில் இணைத்து கொள்வதின் மூலம் தங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது.  மேலும் இந்நிறுவனம் கார் உரிமையாளர்களுக்கு உத்திரவாதம், பாதுகாப்பும் வழங்குகிறது.   

தொடர்ந்த திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் மூலம் இத்தொழில் மேலும் வளர்கிறது.  மேலும் கார் உரிமையாளர்கள் இதன் மூலம் பெரும் பணத்தை மிச்ச படுத்த முடிகிறது.  இந்நிறுவனம் தயாரித்துள்ள சாப்ட்வேர் மூலம் பார்ட்னர்கள் மேரிகார்.காம் விற்கு கார்களை பதிவு செய்வதிலிருந்து, அவற்றை கண்காணிப்பது மற்றும் நிர்வகிப்பது வரை செய்ய முடியும்.  இதன் மூலம் அவர்கள் கமிஷன் பெற முடியும்.  கார் பராமரிப்பு நிலையங்களும் இந்த சாப்ட்வேரை பயன் படுத்தி தங்களது தொழிலை விரிவு படுத்த முடியும்.

இதில் பார்ட்னராக எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்நிறுவனத்தில் பார்ட்னராக முதலில் கீழ்வரும் லிங்கை பயன்படுத்தி அதில் வரும் பகுதியில் தங்களை பற்றிய விவரம் மற்றும் தாங்கள் தொடங்க விரும்பும் இடம் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.  இதன் மூலம் இதன் அடிப்படை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.  மேலும் தகவல்கள் பெற விரும்பினால் அதற்க்காக சிறப்பு கோரிக்கை தர வேண்டும்.

Summary:

Mericar.com is an online portal that helps the users (car owners) to choose the best car service centers nearby their home.  All the car service centers are well verified and trustworthy.  Car owners thereby reduce their cost and timing.  Now, Mericar.com calls for partners through which anyone can earn handsome income from their home, in their leisure time.   Retired persons, housewives, small entrepreneur, students and anyone who wants to earn extra or full income can opt for this offer.


Courtesy: Source and Image: yourstory.com

Tuesday, 13 May 2014

, , ,

மோட்டோரோலா அறிமுகப் படுத்துகிறது மோட்டோ E (Moto e): Rs.6999/-

மோட்டொரோலா சமீப காலமாக குறைந்த விலையுள்ள மற்றும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மொபைல் போன்களை அறிமுகப் படுத்திவருகிறது.  அந்த வகையில் இன்று அது அறிமுகப் படுத்தியிருக்கும் மொபைல் போன் மோட்டோ E (Moto e).  இதன் விலை ரூபாய் 6999/- மட்டுமே.  இந்த சிறப்பம்சங்களை கொண்ட மொபைல் போன்களை விட இதன் விலை குறைவே.  இதன் சிறப்பம்சங்களை காணலாம்.


டிஸ்ப்ளே (Display)

மோட்டோ E, மிகவும் தெளிவான காட்சியமைப்பை கொண்டுள்ளது.  இதன் டிஸ்ப்ளே கார்னிங்® மற்றும் கொரில்லா® அம்சங்கள் மூலம் பாதுகாக்க பட்டுள்ளது.  இதனால் இதன் பாதுகாப்பு மற்றும் நீடித்த ஆயுள் உறுதிப்படுத்தப் படுகிறது. இது ஒரு நீர் எதிர்ப்பு ஸ்பிளாஸ் பாதுகாப்பு கொண்டு பாதுகாக்கப் படுகிறது.  இதனால் தண்ணீர் பட்டாலும் போன் சேதமடையாது.  இதன் திரை (Display) அளவு 4.3 அங்குலம்.

பேட்டரி

இதன் பேட்டரி 1980 mAh திறன் கொண்டது.  இதனால் இதன் பேட்டரி 24 மணி நேரத்திற்க்கு தங்கும் திறன் கொண்டது.

சமீபத்திய ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் மற்றும் புதுப்பித்தல் உத்தரவாதம்

இது ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 என்ற சமீபத்திய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது.  இதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் மொபைலில் பல வேலைகளை செய்யலாம்.  மேலும் அதிவேக காட்சி அமைப்புகள், ஸ்மார்ட் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளையும் விரைவாக செய்யலாம்.  கூகிள் வாய்ஸ் மூலம் நீங்கள் போனை தொடாமலேயே கால் செய்யலாம்.  கூகிள் வரைபடத்தில் தேடலாம்.  நீங்கள் மொபைலை தொடாமலேயே உங்கள் பேச்சு மூலம் மொபைலை இயக்கலாம். மேலும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இலவசமாக புதுப்பிக்கலாம்.


மற்ற சிறப்பம்சங்கள்
  • திரை அளவு (Display): 4.4 அங்குலம் கொண்ட திரை
  • ஆப்பரேட்டிங்: ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 பதிப்பு
  • இணையயம் மற்றும் இணைப்புகள்:  இமெயில், 3G, Wifi, யூஸ்பி (USB), Bluetooth
  • வண்ணங்கள்: கறுப்பு மற்றும் வெள்ளை
  • ப்ராஸசர்: 1.2 GHz குவால்காம் ஸ்னாப் 200, இரட்டை கோர்
  • கேமரா: 5 மெகா பிக்சல் கொண்டது, வீடியோ பதிவு செய்யக் கூடியது. (ஃபிளாஷ் இல்லை)
  • மெமரி கார்ட்: உள்ளடங்கிய 4 GB மெமரி கொண்டது, வெளி மெமரி 32 GB (மைக்ரோ SD)

மற்றவை:
  • இரண்டு GSM சிம்கள் கொண்டது
  • தொடுதிரை கொண்டது
  • மியூசிக் ப்ளேயர், வீடியோ ப்ளேயர் மற்றும் FM உள்ளது

விலை:

மோட்டோ E வின் விலை ரூபாய் 6999/-, இதே சிறப்பம்சங்கள் கொண்ட மற்ற மொபைல்களைவிட இதன் விலை குறைவே.



சிறப்பு சலுகை: இந்த மொபைல் Flipkart.com என்ற வணிக தளத்தில் மட்டுமே கிடைக்கும்.  கிரெடிட் கார்ட் உள்ளவர்கள் தவணை முறையிலும் வாங்கலாம்.  இன்று (14/05/2014) இந்த மொபைலை ஆர்டர் செய்தால், Transcend 8 GB மெமரி காட்ர் 50% தள்ளுபடி விலையிலும், மோட்டோ E கவர் 50% தள்ளுபடி விலையிலும் மேலும் ரூபாய் 1000 மதிப்புள்ள மின் புத்தகங்கள் இலவசமாகவும் கிடைக்கும்.

Monday, 12 May 2014

, , , , ,

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அருமையான உணவு வகைகள்: FRSH

தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்களை கண்டுவரும் நம்முடைய வாழ்க்கை ஒன்றை கவனிக்க தவறிவிட்டது.  அதுதான் சத்தான உணவு.  இளைஞர்கள் பலர் இன்று குளிர் அடைக்கப்பட்ட அலுவலகங்களில் கடிகாரத்தை பார்க்காமல் பசியை கூட பொருப்படுத்தாமல் வேலை பார்க்கின்றனர்.  இதனால் அவசரகதியில் அவசர உணவுகளை உண்டு உடலை கெடுத்து கொள்கின்றனர்.  பல இளைஞர்கள் தனது குடும்பங்களை விட்டு விட்டு தனியாக தங்கியிருக்கின்றனர்.  இதனால் உணவு விசயத்தில் இவர்கள் படும் பாடு சொல்லிமாளாது. 


டில்லியில் ஐ.ஐ.டி யில் படித்த இளைஞர் படால் கொயல் ஒரு மெக்கானிகல் பொறியாளர்.  இந்த பிரச்சனைக்கு தீர்வு தேடி பல ஆண்டுகள் கழித்து உருவாக்கியதுதான் FRSH.  கவ்ரவ் லால் என்ற ஐ.ஐ.டி டில்லி மற்றும் ஐ.ஐ.ம் கல்கத்தாவில் படித்த நண்பரின் உதவி மூலம் சந்தைப் படுத்துதல் மற்றும் தொழில் உத்தியை கற்றுக் கொண்டு இந்த தொழிலை உருவாக்கியிருக்கிறார் படால்.

கடந்த மூன்றாண்டுகளில் இடைவிடாத உழைப்பின் மூலம் உருவானதே FRSH.  இது வேலை செய்யும் இளைஞர்களை கருத்தில் கொண்டு உருவானது.  இன்றைய இளைஞர்கள் தரம் நிறைந்த, குறைந்த நேரமே எடுத்து கொள்கிற, வகைகள் பல நிறைந்த உணவுவகைகளையே விரும்புகின்றனர்.  இவர்களுக்காக பல வணிக மாதிரிகளை சோதனை செய்த பின்னர் கடைசியாக வெற்றி பெற்றதுதான் FRSH.

நீங்கள் உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம்.  பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம்.  நீங்கள் அலுவலகம் செல்வதற்க்கு பயணம் செய்யும் போதே FRSH ல் 30 வினாடிகளில் ஒரு ஆரஞ்ச் ஜூஸை ஆர்டர் செய்யலாம்.  நீங்கள் அலுவலகத்தில் நுழையும் போது அங்கு வரவேற்பறையில் உங்களுக்காக ஆரஞ்ச் ஜூஸ் தயாராக இருக்கும்.  அதற்கான பணத்தை செலுத்தி விட்டு நீங்கள் அதை பெற்று கொள்ளலாம்.

பல தடவைகளுக்கு பிறகு மற்றும் வாடிக்கையாளர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு உணவின் தரம் உயர்த்தப் பட்டிருக்கிறது.  தற்போது இந்த சேவை குர்க்கானில் உள்ள சில அலுவலகங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.  விரைவில் இந்த சேவை குர்க்கானில் உள்ள பல அலுவலகங்களுக்கும் மேலும் பள்ளிகள், கல்லூரிகள், இரயில் நிலையங்கள், பல அடுக்குமாடி வீடுகளிலும் விரிவுப் படுத்தபட இருக்கிறது என்கிறார் படால்.


ஒரு நாளைக்கு 80 முதல் 90 வரை ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.  இந்த ஆண்டின் இறுதிக்குள் இதை 1000 ஆர்டர்களாக உயர்த்த FRSH திட்டமிட்டுள்ளது.  மேலும் இந்நிறுவனம் தொழில்நுட்பம், தானியங்கிகள் மற்றும் தரத்தில் முதலீடு செய்ய இருக்கிறது.  இதன் வாடிக்கையாளர்கள் தொடந்து இதற்க்கு ஆதரவு கொடுத்து வருவது இதன் வெற்றிக்கு ஒரு அடையாளம்.  இதன் முக்கிய நோக்கம் தரமான உணவு வகைகளை சரியான விலையில் கொடுப்பதேயாகும்.

Courtesy: The article was originally published by: yourstory.com
Image Courtesy: yourstory.com
, , , , ,

எக்ஸ் எஸ் பவர் கார்ட் (XS Powercard): உங்கள் பர்ஸில் அடங்கும் ஸ்மார்ட் போன் சார்ஜிங் கார்ட்

இன்று கைபேசி இல்லாத கைகள் இல்லை எனலாம்.  மேலும் நாளுக்கு நாள் பல புது அம்சங்களை கொண்ட செல்போன்கள் சந்தையில் அறிமுகமாகி வருகின்றன.  இந்திய ஒரு மிகப்பெரிய செல்போன்கள் சந்தை.  இதற்கு காரணம் இங்கு இருக்கும் மக்கள் தொகையும் ஏறிவரும் தனிநபர் வருமானமும். 

ஆனாலும் செல்போன்கள் வைத்திருப்பவர்களின் ஒரே குறை செல்போன்களில் தேவையான பாட்டரி சார்ஜ் இருப்பதில்லை.  ஏனென்றால் நாம் செல்போன்களை பேசுவதற்கு மட்டும் பயன் படுத்துவதில்லை.  பேசுவதை தாண்டி பல வேலைகளுக்கு நாம் செல்போன்களை பயன்படுத்துகிறோம்.  மேலும் செல்போன்களில் இணையம் பயன்பாடு அதிகரித்திருப்பதால் 3G, 4G என இணைய வேகம் அதிகரித்திருக்கிறது.  இந்த வேகம் செல்போன்களின் சார்ஜின் வேகத்தை பொருமளவிற்க்கு குறைக்கிறது.

இதனால் பல வேலைகளில் நம் செல்போன்கள் நமக்கு பயன்படும் நேரத்தில் செயலற்றும் போகின்றன.  இந்த குறையை போக்குவதற்க்காக மும்பையை அடிப்படையாக கொண்ட XYRA என்ற தொடக்க நிலை தொழில் நிறுவனம் உங்கள் பர்ஸிற்க்குள் அடங்க கூடிய ஸ்மார்ட் போன் சார்ஜரை அறிமுகப் படுத்திருக்கிறது.  இதன் பெயர் ‘எக்ஸ் எஸ் பவர் கார்ட்’ (XS Powercard).


இந்த சார்ஜரில் தகவல்கள் சேமிப்பகமும் (Data Storate) உள்ளடங்கிய டெட்ட கேபிளும் (Data Cable) இருக்கிறது.  இதே போல பல சார்ஜர்கள் இருந்தாலும் இதன் சிறப்பம்சம், நீங்கள் செல்போனையும் சார்ஜரையும் ஒரே நேரத்தில் வெளி மின்சார மூலத்தின் மூலம் சார்ஜ் செய்யும் போது முதலில் செல்போன் தான் சார்ஜ் ஆகும்.  அதன் பிறகு தான் பவர்கார்ட் சார்ஜ் ஆகும்.  மேலும் நீங்கள் பவர்கார்டை மட்டும் முதலில் சார்ஜ் செய்ய வேண்டுமென்றாலும் அவ்வாறே சார்ஜ் செய்யலாம்.

இந்த சார்ஜ்கார்ட் மினி யுஎஸ்பி (Mini USB) மற்றும் பல மின் இணைப்பு வகைகளை கொண்டுள்ளது.  இது 8/16/32 GB தகவல் சேமிப்பகம் (Data Storage) கொண்ட பல வகைகளில் கிடைக்கிறது.  இதன் விலை ரூபாய் 2000 மட்டுமே.  இந்த சார்ஜ்கார்ட் பல வண்ணங்களிலும் கிடைக்கிறது.  இது 2200 mAh சார்ஜ் சேமிக்கும் திறன் கொண்டது.  இதன் ஸ்டாண்ட்பை (Standby) திறன் 150 நாட்களுக்கு வரும்.

கீழ்வரும் வீடியோ மூலம் இதன் திறனை மேலும் அறியலாம்.



இந்த சார்ஜ்கார்டை அறிமுகப் படுத்தியது சாஹெஜ் சேதி, அர்மான் காந்தி மற்றும் அர்சான் இரானி.  இவர்கள் இந்த சார்ஜ்கார்டை உற்பத்தி செய்வதற்க்கு நிதி திரட்டி வருகிறார்கள்.  இது மாதிரி புதியதாக சிந்தித்து புது புது பொருள்களை மக்களின் தேவைக்கேற்ப அறிமுகம் படுத்துவதின் மூலம் நம் நாடும் உலக நாடுகளுக்கு மத்தியில் போட்டி போடும் திறன் பெறும். 

Courtesy: Source & Image: Trak.in

Saturday, 26 April 2014

, , ,

தொழில் நுட்பம் மூலம் கோடீஸ்வரர்கள் ஆன 10 பேரின் பட்டியல்

பிரபல பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes) கூற்றின் படி இந்த உலகத்தின் மொத்தம் 1645 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.  இவற்றில் 268 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் புதிதாக இணைந்தவர்கள்.  இதில் 42 பெண் கோடீஸ்வரர்களும் அடக்கம்.

இந்த கோடீஸ்வரர்களில் தொழில் நுட்பத்தை. அதாவது கம்ப்யூட்டரின் வன்பொருள் மற்றும் மென்பொருள் அல்லது அதை சார்ந்த இணையதளங்களின் நுட்பத்தை பயன்படுத்தி இந்த நிலைக்கு உயர்ந்தவர்களில் 10 பேர்களின் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


பில் கேட்ஸ்

இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பவர் எல்லோருக்கும் தெரிந்த பில் கேட்ஸ்தான்.  அவர் எவ்வாறு இந்த இடத்தை பிடித்தார், எல்லாம் கம்ப்யூட்டர்தான்.  கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ஆப்ரேடிங் சிஸ்டமான விண்டோஸ் இவரது கண்டுபிடிப்பு.  இப்போது இவரின் கண்டுபிடிப்பில் தான் உலகமே (கிட்டத்தட்ட) இயங்கி கொண்டிருக்கிறது. இவரது சொத்தின் மதிப்பு டாலர் 77.45 பில்லியன் (அட! நீங்களே கணக்கு பண்ணி கோங்க)

லாரி எலிசன்

இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நம்மில் பலருக்கு அதிகம் பரிச்சயமில்லாத லாரி எலிசன்.  பெற்றோர்களால் தனது உறவினருக்கு தத்து கொடுக்கப் பட்டவர்.  இவர் கண்டுபிடித்தது ஆரக்கிள் என்னும் மென்பொருள். இவரது சொத்தின் மதிப்பு டாலர் 49.50 பில்லியன் (என்ன கால்குலேட்டர எடுத்துடீங்களா?)

ஜெப் பிசோஸ்

அடுத்தது ஜெப் பிசோஸ்.  என்ன! பேரே வாயில நுழைய மாட்டேங்குதா?  நானே ஒரு குத்து மதிப்பாதான் எழுதியிருக்கேன்.  இவர் தான் அமேசான் என்கிற இ-வணிக தளத்தை அறிமுகப் படுத்தியவர்.  இன்று பல இ-வணிக தளங்களிற்க்கு இவர் அறிமுகப் படுத்திய அமேசான் தான் மாடல்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 30 பில்லியன் (அட போங்கப்பா!)

லாரி பேஜ்

அடுத்தது நம்ம லாரி பேஜ்.  என்னடா இது நம்ம லாரி பேஜா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இவர் தான் நம்ம (!) எல்லாவற்றையும் கண்டுபிடுத்துதரும் கூகிளை கண்டுபிடித்தவர்களில் ஒருவர்.  இவர பத்தி அதிகமா சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.  அது உங்களுக்கே தெரியும்.  இவரின் சொத்து மதிப்பு டாலர் 29.60 பில்லியன் (ஓ.கே!)

செர்ஜி பிரின்

கூகிளை கண்டுபிடித்ததில் ஒருவர் இங்கே இருக்கிறார்.  அவரை பற்றி சொல்லியாயிற்று. இன்னோருவர் யாரென்று நீங்கள் கவுண்டமணி அவர்கள் மாதிரி கேட்பது புரிகிறது.  நானும் அவர்தான்ங்க இவருன்னு சொல்ல மாட்டேன்.  அவர்தான் செர்ஜி பிரின்.  இவர் ஒரு ரஷ்யர்.  அமெரிக்காவிற்க்கு குடிபெயர்ந்தவர்களில் ஒருவர்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 29.20 பில்லியன்.

மார்க் ஜுக்கர்பெர்க்

இவரை பற்றி சொல்லவில்லை என்றால் தான் தப்பு.  இன்று நீங்களும் நானும் சிவனேன்னு உட்கார்ந்திருக்கிற பேஸ்புக்கை கண்டுபிடித்தவர்தான் இவர் (நல்ல கண்டுபிடிச்சாரு!).  இவருடைய சொத்தின் மதிப்பு டாலர் 26.20 பில்லியன் (அதுவும் குறுகிய காலத்தில்).

ஸ்டீவ் பால்மர்

நமது பட்டியலில் ஏழாவதாக வருபவர் ஸ்டீவ் பால்மர்.  இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1980 ஆம் ஆண்டு 30 ஆவது பணியாளராக சேர்ந்தார்.  இவரின் சொத்து மதிப்பு டாலர் 20.2 பில்லியன்.

மைக்கேல் டெல்

டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர் மைக்கேல் டெல்.  இவரும் அமெரிக்காவிற்க்கு குடிபெயர்ந்து கோடீஸ்வரராக உயர்ந்தவர்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 17.6 பில்லியன்.

பால் ஆலன்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.  இவர் மைக்ரொசாப்ட் நிறுவனத்தின் மூன்றாவது முக்கிய நபர்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 15.9 பில்லியன்.

லாரன்ஸ் பவல் ஜாப்ஸ் மற்றும் குடும்பத்தினர்

என்ன மாயாண்டி குடும்பத்தினர் ஞாபகத்திற்க்கு வருகிறார்களா?  இவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் மனைவி.  ஒருவேளை ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருந்தால் இந்த பட்டியலில் முதலிருக்கும் இடங்களில் இருந்திருப்பார்.  இவரின் சொத்து மதிப்பு டாலர் 14.2 பில்லியன்.

இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்.  இவர்கள் கடந்து வந்த பாதையும் அவ்வளவு எளிதல்ல.  பல போராட்டங்களை தாண்டி இந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள்.  இவர்களை பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

குறிப்பு: இந்த சொத்து பட்டியலை வெளியிட்டதன் மூலம் இவர்கள் யாரும் எந்த தேர்தலிலும் வேட்பாளராக நிற்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


Courtesy: The article was originally published in: Trak.in
Image Courtesy: Trak.in

Wednesday, 23 April 2014

, , ,

மைக்ரோசாப்ட் வழங்குகிறது இலவச விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டம்

சான் பிரான்சிஸ்கோவில் நடைப் பெற்ற மைக்ரோசாப்டின் (Microsoft) ஒரு நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.  அதாவது, ஒன்பது அங்குலத்திற்க்கும் குறைவான திரைக் கொண்ட எந்த ஒரு சாதனத்திலும் (மெபைல் போன் மற்றும் டப்டல்ஸ்) (Mobiles and Tablets) இந்த விண்டோஸ் 8 ஆப்ரேடிங் சிஸ்டம் இலவசமாக வழங்கப் படும்.


இதுவரை விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தை விலைக்கு கொடுத்தே பழகிய மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.  ஆனால் இந்த இலவசம் வன்பொருள் தயாரிக்கும் நிருவனங்களுக்கே பொருந்தும்.  விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வன்பொருள்களில் இது இலவசமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு கொடுக்கப் படும்.  இதனால் இந்த வன்பொருள்களின் விலை குறையுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  பொதுவாக விண்டோஸ் நோக்கியா மொபைல்களில் தான் அதிகம் பயன் படுத்தப் படுகிறது.

இது விண்டோஸ் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகலாம்.  ஏனென்றால் மொபைல்களில் பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு ஆப்ரேடிங் சிஸ்டம் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவது பயன் படுத்தப்படுகிறது.  இதனால் ஆண்டிராய்டு மொபைல்கள் அதிகமாக விற்பனை ஆவதை அனைவரும் அறிவொம்.  மேலும் இதனால் பல அப்ளிகேஷன்கள் இந்த ஆண்டிராய்டு தளத்தை பயன்படுத்தி உருவாக்கப் பட்டு பல சிறு நிறுவனங்களும் இவற்றை பயன் படுத்தும் மக்களும் பயன்ப் பெற்றுள்ளனர்.

கடைசியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஒப்பன் சோர்ஸ் (Open Source) என்று சொல்லப்படுகிற இலவச மென்பொருள்களின் பயன்பாடு மற்றும் இவற்றின் பலனை அறிந்திருக்கிறது.


Courtesy (The content was originally published by): Trak.in
Image Credit: Wikipedia

Monday, 21 April 2014

, , ,

மைக்ரோசாப்ட் வென்சர்ஸ் அறிமுக படுத்துகிறது ஜம்ஸ்டார்ட், தொழில் முனைவோருக்கு இலவசமாக ஆலோசனை வழங்கும் ஒரு துரித அழைப்பு எண்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான மைக்ரோசாப்ட் வென்சர்ஸ் (Microsoft Ventures), ஜம்ஸ்டார்ட் (JumpStart) என்ற ஹாட்லைன் அதாவது துரித அழைப்பு எண்ணை (Toll Free Number) அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த அழைப்பு எண்ணை பயன்படுத்தி தொழில் முனைவோர் தங்களது தொழில் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டு ஆலோசனைகளை பெறலாம். அதுவும் இலவசமாக. 


இந்த எண் 1 (800) 200-2114 ஒரு டோல் ஃப்ரி அதாவது கட்டணமில்லா எண் ஆகும். வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த எண்ணை தொடர்பு கொண்டு, தொழில் முனைவோர்கள் தங்களது தகவல்களை பெறலாம்.  நன்றாக பயிற்சி கொடுக்கப் பட்ட திறமை வாய்ந்த நிபுணர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள்.

இது மிகவும் வரவேற்க தகுந்ததாகும்.  தொழில் முனைவோர் தங்களின் சந்தேகங்களை போக்கி கொள்ள மிகவும் அனுபவமுள்ள தொழிலதிபர்களை நாட வேண்டியுள்ளது.  மேலும் ஆலோசனைகளை பெற செலவழிக்க வேண்டியுள்ளது.  இந்த முயற்சி மூலம் பல குறு மற்றும் சிறு தொழில் புரிவோர்கள் மிகவும் பயன் பெறுவார்கள்.  நன்றி மைக்ரோசாப்ட் வென்சர்ஸ்.

Courtesy The content was originally published by: Trak.in
Image Courtesy: Trak.in

Saturday, 19 April 2014

, , , , ,

Dineout.co.in யை கையகப்படுத்தியது Timescity.com

Timescity.com  ஒரு உணவு வழிகாட்டி மற்றும் உணவு விடுதிகளை தரம் பிரித்து விமர்சனம் செய்யும் ஒரு ஆன்லைன் இணைய தளம்.  சமீபத்தில் இந்த நிறுவனம் Dineout.co.in என்ற, டில்லி மற்றும் மும்பையில் உள்ள உணவு விடுதிகளில் இருக்கைகளை பதிவு செய்யும் சேவையை செய்து வரும் இணையதள நிறுவனத்தை கையகப்படுத்தியது.  இதன் மூலம் Timescity.com தங்களது சேவையை விரிவுப் படுத்தி உள்ளது.


Timescity.com இணையதளம் கடந்த 12-18 மாதங்களில் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.  இந்த இணையதளம் 20 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது.  Dineout.co.in யை கையகப் படுத்தியதன் மூலம், இது மேலும் பல பார்வையாளர்களை வரவேற்க்கும் என்று நம்பப்படுகிறது.

Dineout.co.in இணையதளம் டில்லி மற்றும் மும்பையில் உள்ள உணவு விடுதிகளில் இருக்கைகளை ஆன்லைன் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ பதிவு செய்யும் சேவையை வழங்கி வருகிறது.  அவ்வாறு பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியும் கொடுக்கிறது.  இது சுமார் 2 லட்சம் பதிவுகளை இதுவரை செய்திருக்கிறது.

இந்த சேவையில் ஈடுபட்டிருக்கும் Zomato.com இணையதளம், இந்திய சந்தையில் மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது.  இது மாதத்திற்க்கு சுமார் 50 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது.  இவர்களுடைய மொபைல் அப்பிளிகேஷன் ஆன்ராய்டு மற்றும் iOS இல் சுமார் 20 லட்சம் தடவை பதிவிறக்கம் செய்யப் பட்டிருக்கிறது.  மேலும் Burrp.com இணையதளம் இந்த சேவையில் இரண்டாவதாக உள்ளது.

Dineout.co.in இணையதளத்தை கையகப் படுத்தியதன் மூலம், Timescity.com இந்த இரண்டு முன்னனியில் இருக்கும் நிறுவனங்களிடம் தனது போட்டியை அதிகப்படுத்தும்.

The content was originally published: ஆதாரம்: Trak.in

Thursday, 17 April 2014

, , , , ,

மாத்தி யோசி: Shycart.com

எந்த ஒரு தொழிலின் அடிப்படையே அதற்க்கு உண்டான தேவையே.  தேவையின் அடிப்படையிலேயே ஒரு தொழிலின் அல்லது ஒரு பொருளின் வெற்றி நிர்ணியக்கப் படுகிறது.  மனிதனின் தேவைகள் பல. அவற்றை நாம் சரியாக இனம் கண்டுக் கொண்டால், நமது தொழிலுக்கான ஐடியா கிடைத்து விடும்.  நமது தொடர் சேவையினால் அது பிறகு வெற்றிப் பெருகிறது.


இப்போது மக்கள் பலப் பொருள்களை ஆன்லைனில் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  அவற்றுள் பலவற்றை மக்கள் நேரடியாக கடைகளில் சென்று வாங்குவதற்க்கு கூச்சப் படிவார்கள்.  அவ்வாறு வாங்கும் பொருள்களில், காண்டம் என்று சொல்லப் படுகிற கருத்தடை சாதனங்கள், பெண்களுக்கான மாதவிடாய் பொருள்கள் மிக முக்கியமானவை.  இவற்றை கருத்தில் கொண்டு, உருவாக்கப் பட்டுள்ள ஆன்லைன் ஷாப்பிங் தான் Shycart.com

இந்நிறுவனம் இது தவிர, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள், கருத்தரித்த அல்லது குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கான பொருள்கள் மற்றும் உடலுறவு சம்மந்தமான பொருள்களையும் விற்பனை செய்கிறார்கள்.

இவர்களுடைய ஒரு சிறப்பு அம்சம், இவர்கள் இந்த பொருள்களை பேக்கிங் செய்யும் முறை.  அதனால் வாங்குபவர்கள் கவலை கொள்ள தேவையில்லை.  மற்றவர்களால் நாம் என்ன பொருள் வாங்குகிறோம் என்று தெரியாதபடி பொருள்களை பேக்கிங் செய்து டெலிவரி செய்கிறார்கள். 


பெரும்பாலான பொருள்களை ஆன்லைனில் வாங்கும் பழக்கம் பெருகுகிற இந்த காலக் கட்டத்தில் தொழில் தொடங்க விரும்புவோர் அல்லது ஏற்கனவே தொழில் செய்வோர், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய இந்த மாதிரி மாற்றி யோசித்தால் பலன் பெறலாம்.

ஆதாரம்: Trak.in 
Image Courtesy: Shycart.com
The content was originally published by Trak.in

Tuesday, 25 February 2014

, , , , , ,

அமேசானில் (Amazon) ஆன்லைனில் உங்கள் பொருள்களை விற்பது எப்படி?

இணையதளம் உலகத்தை சுருக்கி இருந்தாலும் அது ஒரு வகையில் உலகளாவிய வாய்ப்புகளை பரந்து விரிய விட்டிருக்கிறது.  தொழில் முனைவோர் தங்கள் தொழில்களை பல நாடுகளுக்கு கொண்டு சென்று தங்கள் வருமானத்தை பெருக்குகின்றனர்.  அப்படி உங்களுக்கு உதவுவதற்க்காகவே அமேசான் அளிக்கும் இந்த சிறப்பு சேவை மூலம் நீங்கள் இந்தியா முழுவதும் உங்கள் பொருள்களை விற்க வாய்ப்பளிக்கிறது. 



முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் பொருள்களை அமேசானில் பட்டியலிடுங்கள்.  அதற்க்காக வடிவமைக்கப்பட்ட இணையதள கருவிகள், மென்பொருள்கள் மூலம் நீங்கள் உங்கள் பொருள்களை பட்டியலிடலாம்.

வாடிக்கையாளர்கள் அமேசானில் உங்கள் பொருள்களை காண்பார்கள்.  அவர்களுக்கு தேவையான பொருள்களை அதற்க்கான பணத்தை செலுத்தி ஆன்லைனிலே ஆர்டர் செய்வார்கள்.  சிலர் பணம் செலுத்திய பிறகு பொருளை வாங்கும் விருப்பத்தையும் தேர்ந்து எடுக்கலாம். அமேசான் அவர்கள் ஆர்டர் செய்த பொருள்களின் பட்டியலை உங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

நீங்கள் அந்த பொருள்களை வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைத்த பிறகு, அமேசான் அதற்கான விலையை (அவர்களின் தரகு கழித்து) உங்கள் வங்கி கணக்கில் சேர்த்து விடுவார்கள்.

கட்டணங்கள்

அமேசானில் உங்கள் பொருள்களை பட்டியலிடுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.  அவர்கள் தரகு மட்டும் வசூலிக்கிறார்கள்.  மாதசந்தாவாக ரூபாய் 499 வசூலிக்கப்படுகிறது.  மேலும் ஒவ்வோரு பொருள் விற்று முடியும் போது ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது.  தரகு கட்டணம் 5% லிருந்து 15% வரை பொருள்களுக்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது.  குறிப்பாக புத்தகங்களுக்கு மின்னனு பொருள்களுக்கு 12% ம், மொபைல் போன்களுக்கு, கணிணிகளுக்கு 5% ம், குழந்தைகளுக்கான பொருள்கள், நகைகள் மற்றும் வீட்டுப் பொருள்களுக்கு 15% ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  தரகுக்கு 12..36% சேவை வரியும் உண்டு.  தரகு கட்டணம், வாடிக்கையாளர் செலுத்தும் பணத்தின் மதிப்பில் கணக்கிடப்படுகிறது.  இதில் டெலிவரி சார்ஜ் மற்றும் வரிகளும் அடங்கும்.

குறிப்பு: முதல் வருடத்திற்க்கு சந்தா மற்றும் தரகுகளில் தள்ளுபடி ஆகியவை உண்டு, இரண்டாண்டுகள் ஒப்பந்த அடிப்படையில். மேலும் விபரங்களுக்கு >இங்கே< கிளிக் செய்து அமேசான் தளத்திற்க்கு சென்று தெரிந்துக் கொள்ளவும்.