Saturday 26 April 2014

Filled Under: , , ,

தொழில் நுட்பம் மூலம் கோடீஸ்வரர்கள் ஆன 10 பேரின் பட்டியல்

பிரபல பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes) கூற்றின் படி இந்த உலகத்தின் மொத்தம் 1645 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.  இவற்றில் 268 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் புதிதாக இணைந்தவர்கள்.  இதில் 42 பெண் கோடீஸ்வரர்களும் அடக்கம்.

இந்த கோடீஸ்வரர்களில் தொழில் நுட்பத்தை. அதாவது கம்ப்யூட்டரின் வன்பொருள் மற்றும் மென்பொருள் அல்லது அதை சார்ந்த இணையதளங்களின் நுட்பத்தை பயன்படுத்தி இந்த நிலைக்கு உயர்ந்தவர்களில் 10 பேர்களின் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


பில் கேட்ஸ்

இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பவர் எல்லோருக்கும் தெரிந்த பில் கேட்ஸ்தான்.  அவர் எவ்வாறு இந்த இடத்தை பிடித்தார், எல்லாம் கம்ப்யூட்டர்தான்.  கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ஆப்ரேடிங் சிஸ்டமான விண்டோஸ் இவரது கண்டுபிடிப்பு.  இப்போது இவரின் கண்டுபிடிப்பில் தான் உலகமே (கிட்டத்தட்ட) இயங்கி கொண்டிருக்கிறது. இவரது சொத்தின் மதிப்பு டாலர் 77.45 பில்லியன் (அட! நீங்களே கணக்கு பண்ணி கோங்க)

லாரி எலிசன்

இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நம்மில் பலருக்கு அதிகம் பரிச்சயமில்லாத லாரி எலிசன்.  பெற்றோர்களால் தனது உறவினருக்கு தத்து கொடுக்கப் பட்டவர்.  இவர் கண்டுபிடித்தது ஆரக்கிள் என்னும் மென்பொருள். இவரது சொத்தின் மதிப்பு டாலர் 49.50 பில்லியன் (என்ன கால்குலேட்டர எடுத்துடீங்களா?)

ஜெப் பிசோஸ்

அடுத்தது ஜெப் பிசோஸ்.  என்ன! பேரே வாயில நுழைய மாட்டேங்குதா?  நானே ஒரு குத்து மதிப்பாதான் எழுதியிருக்கேன்.  இவர் தான் அமேசான் என்கிற இ-வணிக தளத்தை அறிமுகப் படுத்தியவர்.  இன்று பல இ-வணிக தளங்களிற்க்கு இவர் அறிமுகப் படுத்திய அமேசான் தான் மாடல்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 30 பில்லியன் (அட போங்கப்பா!)

லாரி பேஜ்

அடுத்தது நம்ம லாரி பேஜ்.  என்னடா இது நம்ம லாரி பேஜா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இவர் தான் நம்ம (!) எல்லாவற்றையும் கண்டுபிடுத்துதரும் கூகிளை கண்டுபிடித்தவர்களில் ஒருவர்.  இவர பத்தி அதிகமா சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.  அது உங்களுக்கே தெரியும்.  இவரின் சொத்து மதிப்பு டாலர் 29.60 பில்லியன் (ஓ.கே!)

செர்ஜி பிரின்

கூகிளை கண்டுபிடித்ததில் ஒருவர் இங்கே இருக்கிறார்.  அவரை பற்றி சொல்லியாயிற்று. இன்னோருவர் யாரென்று நீங்கள் கவுண்டமணி அவர்கள் மாதிரி கேட்பது புரிகிறது.  நானும் அவர்தான்ங்க இவருன்னு சொல்ல மாட்டேன்.  அவர்தான் செர்ஜி பிரின்.  இவர் ஒரு ரஷ்யர்.  அமெரிக்காவிற்க்கு குடிபெயர்ந்தவர்களில் ஒருவர்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 29.20 பில்லியன்.

மார்க் ஜுக்கர்பெர்க்

இவரை பற்றி சொல்லவில்லை என்றால் தான் தப்பு.  இன்று நீங்களும் நானும் சிவனேன்னு உட்கார்ந்திருக்கிற பேஸ்புக்கை கண்டுபிடித்தவர்தான் இவர் (நல்ல கண்டுபிடிச்சாரு!).  இவருடைய சொத்தின் மதிப்பு டாலர் 26.20 பில்லியன் (அதுவும் குறுகிய காலத்தில்).

ஸ்டீவ் பால்மர்

நமது பட்டியலில் ஏழாவதாக வருபவர் ஸ்டீவ் பால்மர்.  இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1980 ஆம் ஆண்டு 30 ஆவது பணியாளராக சேர்ந்தார்.  இவரின் சொத்து மதிப்பு டாலர் 20.2 பில்லியன்.

மைக்கேல் டெல்

டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர் மைக்கேல் டெல்.  இவரும் அமெரிக்காவிற்க்கு குடிபெயர்ந்து கோடீஸ்வரராக உயர்ந்தவர்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 17.6 பில்லியன்.

பால் ஆலன்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.  இவர் மைக்ரொசாப்ட் நிறுவனத்தின் மூன்றாவது முக்கிய நபர்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 15.9 பில்லியன்.

லாரன்ஸ் பவல் ஜாப்ஸ் மற்றும் குடும்பத்தினர்

என்ன மாயாண்டி குடும்பத்தினர் ஞாபகத்திற்க்கு வருகிறார்களா?  இவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் மனைவி.  ஒருவேளை ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருந்தால் இந்த பட்டியலில் முதலிருக்கும் இடங்களில் இருந்திருப்பார்.  இவரின் சொத்து மதிப்பு டாலர் 14.2 பில்லியன்.

இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்.  இவர்கள் கடந்து வந்த பாதையும் அவ்வளவு எளிதல்ல.  பல போராட்டங்களை தாண்டி இந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள்.  இவர்களை பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

குறிப்பு: இந்த சொத்து பட்டியலை வெளியிட்டதன் மூலம் இவர்கள் யாரும் எந்த தேர்தலிலும் வேட்பாளராக நிற்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


Courtesy: The article was originally published in: Trak.in
Image Courtesy: Trak.in

0 comments:

Post a Comment