Sunday, 15 June 2014

Filled Under: , , ,

தொழிலில் சவால்களை சமாளித்து வெற்றி பெற சாம் வால்டனின் 12 விதிகள்

நீங்கள் வால் மார்ட் பற்றி கேள்வி பற்றி இருப்பீர்கள்.  வால் மார்ட் உலகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களின் ஒன்று.  சூப்பர் மார்க்கெட்டில் புரட்சி ஏற்படுத்திய ஒரு நிறுவனம்.  இந்த நிறுவனத்தை நிறுவியவர் சாம் வால்டன்.  அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில் அதிபர்.  அவர் கடைப்பிடித்த தொழில் விதிகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.  அவற்றை பின்பற்றி நீங்களும் உங்கள் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  1. பாரம்பரிய மதிநுட்பத்தை புறம் தள்ளுங்கள்.  புதிதாக சிந்தியுங்கள். உங்கள் தொழிலில் இருக்கும் அனைவரும் ஒரே மாதிரியான முறையை கடைப்பிடித்தால், நீங்கள் மாற்றி யோசியுங்கள்.  உங்கள் தொழிலில் புதிய முறையை புகுத்துங்கள்.  நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.
  2. எப்போதும் உயர்ந்த குறிக்கோளை கொண்டிருங்கள். போட்டியை ஊக்குவியுங்கள். முன்னேறுங்கள்.
  3. நீங்கள் உங்கள் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் பணியாளர்களின் நலனுக்காக இந்த தொழிலை நடத்துகிறீர்கள் என்ற எண்ணத்தை அவர்களிடம் உருவாக்குங்கள்.  அவர்கள் உங்களுக்காக வேலை செய்கிறார்கள் என்று அவர்களை எண்ண வைக்காதீர்கள்.
  4. அதிக எதிர்ப்பார்ப்புதான் உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.
  5. வாடிக்கையாளர்தான் உங்கள் முதலாளி.  அவர் நினைத்தால் தனது பணத்தை மற்றவர்களுக்காக செலவிட்டு உங்களை மேலிருந்து தரையிறக்க முடியும். 
  6. உங்கள் தொழிலை பொறுப்புணர்ச்சியோடு செய்யுங்கள்.  மற்றவர்களை விட நீங்கள் உங்கள் தொழிலின் மீது நம்பிக்கை வையுங்கள்.
  7. உயர்ந்த தலைவர்கள் தங்களுக்காக வேலை செய்யும் பணியாளர்களின் சுயமரியாதையை உயர்த்துவார்கள்.  சுயமரியாதையுடன் நடத்தப்படும் பணியாளர்கள்தான் உங்கள் சொத்து.  அவர்கள் உங்களுக்காக எதையும் சாதிப்பார்கள்.
  8. முதலீடு குறைவாயிருப்பதை பொருப்படுதாதீர்கள்.  உங்கள் கனவு தான் குறைவாக இருக்க கூடாது.
  9. உங்கள் தொழிலை நீங்கள் விரும்பி செய்தால், தினந்தோறும் அதை திறம்பட செய்ய முயலுவீர்கள்.  இந்த பழக்கம் உங்களுடைய பக்கத்திலிருப்பவருக்கும் பற்றிக் கொள்ளும்.
  10. சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, சரியான நேரத்தில் சொல்லப்பட்ட, உண்மையான பாராட்டுக்கு முன்னால் எதுவுமே நிகர் இல்லை.  அது இலவசங்களில் ஒன்று ஆனால் அதிர்ஷ்டம் கொடுக்கும் மதிப்பு மிகுந்தது.
  11. உங்களை நீங்களே தீவிரமாக்கி கொள்ளாதீர்கள். எப்போதும் தளர்வாயிருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களும் அதைப் போலவே மாறுவார்கள்.  ஆனந்தமாக இருங்கள்.
  12. அதிக அனுபவமில்லாத, வேலையே தெரியாத ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க நேரிட்டால், அவர் நீங்கள் கொடுக்கும் வேலை எதுவானாலும் எப்படியாவது செய்து முடிக்கும் ஆர்வம் இருந்தால், அப்படிபட்டவர் எப்படியாவது திறைமையாகவும் அதன் மூலம் அனுபவசாலியாகவும் ஆகிவிடுவார்.  இது பத்தில் ஒன்பது முறை நிருபனமாயிருக்கிறது.
Image & Source: YourStory.com

0 comments:

Post a Comment