Tuesday 17 June 2014

Filled Under: ,

இந்திய பொறியாளர்களுக்கு வெளிநாடுகளில் வேலை - இந்தியாவின் வாஷிங்டன் உடன்படிக்கை

பொறியாளர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்திய பொறியாளர்களின் திறமை உலகம் முழுவது அறியப்பட்ட ஒன்று.  இப்போது இது உலக அளவில் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.  இதற்கு காரணம், இந்தியா வாஷிங்டன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறது.  இதன் மூலம் இந்திய பொறியாளர்கள் உலகம் முழுவதும் வேலைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.  அவர்கள் வளர்ந்த நாடுகளில் அதிக சம்பளம் பெற முடியும்.  இந்தியா இந்த உடன்படிக்கையில் ஒரு அங்கமாக ஆகுவதற்கு சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்திருக்கிறது.  இதன் மூலம் இந்தியா உலக நாடுகளில் இந்த சலுகையை பெற்ற 17 ஆவது நாடாக ஆகிறது.

வாஷிங்டன் உடன்படிக்கை என்றால் என்ன?

வாஷிங்டன் உடன்படிக்கை ஒரு தொழில்முறை பொறியியல் பட்டப்படிப்பை சர்வதேச அளவில் அங்கீகாரம் செய்யும் ஒப்பந்தம்.  இது தொடங்கப்பட்ட ஆண்டு 1989.  பின்வரும் நாடுகள் இந்த பிரத்யேக மன்றத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன: ஆஸ்திரேலியா, கனடா, சீன தைபே, ஹாங்காங், சீனா, அயர்லாந்து, ஜப்பான், கொரியா, மலேஷியா, நியூசிலாந்து, ரஷ்யா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா.


இதன் மூலம் இந்தியாவில் பொறியியல் படிப்பு, இதில் மன்றம் வகிக்கும் நாடுகளில் அங்கீகரிக்கப் படும்.  இதன் மூலம் இந்த நாடுகளில் உள்ள பொறியியல் வேலைகளுக்கு இந்திய பொறியாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.  இது முன்பு மிகவும் கடினமாக இருந்தது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து பொறியியல் படிப்புகளும் இதில் அடக்கமா?

இந்த உடன்படிக்கையில் ஐ.டி பொறியாளர்கள் மற்றும் சாப்ட்வேர் பணியாளர்களுக்கு இடம் இல்லை.  மேலும் இந்தியாவில் பயிலப்படும் அனைத்து பொறியியல் படிப்புகளும் இதில் அடக்கம் இல்லை.  தற்போது மொத்தம் 220 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இதில் அடக்கம்.  மேலும் இந்த 220 கல்லூரிகளும் வாஷிங்டன் உடன்படிக்கையில் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும்.  இதன் மூலம் பயிலப்படும் படிப்புகள் மீண்டும் மற்ற 16 நாடுகளுக்கு நிகராக வடிவமைக்கப்படும்.

உதாரணத்திற்கு, இந்த 16 நாடுகளில் பயிலப்படும் பொறியியல் படிப்புகளில் சமூக அறிவியல் ஒரு பெரிய பாடமாக உள்ளது.  அதனால் இந்தியாவில் பயிலப்படும் பாடங்களில் சமூக அறிவியலையும் ஒரு பாடமாக இணைக்க வேண்டும்.  இது போல பல மாற்றம் செய்த பின்னரே இந்த உடன்படிக்கை மூலம் பலனை அடைய முடியும்.

இந்த மாற்றத்திற்க்கு சில காலம் ஆகலாம்.  ஆனால் இவை ஒழுங்கு படுத்தப்பட்ட பிறகு இதன் மூலம் இந்திய பொறியாளர்கள் மிகுந்த நன்மை அடைய முடியும். 

இப்போது இந்திய பெற்றோர்கள், பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு காரணம் கிடைத்துவிட்டது!

Image & Source: Trak.in

English Summary: India joining Washington Accord and Indian Engineers have chance to smile as they can get jobs in developed countries who are the part of this accord. 

1 comments: