Showing posts with label Investments. Show all posts
Showing posts with label Investments. Show all posts

Sunday, 13 October 2019

, ,

தங்கத்தில் முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்டுகள்




பொதுவாக தங்கத்தில் முதலீடுகள் நகைகளாக அல்லது தங்க காசுகளாக தான் முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால் அவ்வாறு தங்க நகைகளாக அல்லது தங்க காசுகளாக முதலீடு செய்யும்போது அவற்றை பாதுகாப்பது சற்று கடினமாக தான் இருக்கும்.
ஆனாலும் பாதுகாப்பான முறையில் அதாவது நகைகளாக அல்லது தங்க காசுகளாக முதலீடு செய்யாமல் கோல்ட் ஃபண்டு என்று சொல்லப்படுகின்ற மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நகைகளையும் தங்கக் காசுகளையும் பாதுகாக்கும் அவசியம் இருக்காது.  அவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு பற்றிய அறிமுகம்

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நாம் செய்யும் முதலீடு தங்க பரிமாற்ற வர்த்தக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.  அதாவது இ டி எஃப் என்று சொல்லப்படுகின்ற தங்க பரிமாற்ற வர்த்தக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. 

பொதுவாக இடிஎஃப்  முதலீடு செய்ய வேண்டுமென்றால் தனியாக டிமேட் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும்.  ஆனால் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய டிமேட் அக்கவுண்ட் தேவையில்லை. 

குறைந்த முதலீடாக மாதம் ஆயிரம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

மாதம் மாதம் முதலீடு செய்யும் தொகை முதலீடு செய்யும் தேதியில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும்.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவர்கள் இந்த கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு  திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு லாபம்

பொதுவாக முதலீடு என்று எடுத்துக் கொள்ளும்போது தங்கத்தில் 10 சதவிகிதம் முதலீடு செய்வது சரியானது.   அதற்குமேல் தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.  கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மற்ற மியூச்சுவல் ஃபண்டு போல அதிக லாபம் தரக்கூடியவை அல்ல.  பொதுவாக பங்கு சந்தை இறங்கியிருக்கும் காலங்களில் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது.

இத்திட்டங்கள் குறைந்த கால முதலீட்டிற்கு ஏற்றவை.

சிறந்த கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்

Kotak Gold Fund – Direct Plan

ஃபண்டு நிர்வாகம்: Kotak Mahindra Mutual Fund
ஆரம்பித்த தேதி: ஜனவரி 1, 2013
லாப அளவீடு: அதிகம்
ரிஸ்க் அளவீடு: சராசரி
குறைந்த முதலீட்டு தொகை: Rs.5000/-
ஒரு வருட லாபம்: 24%
மூன்று வருட லாபம்: 7%
ஐந்து வருட லாபம்: 6.55%
பரிந்துரைக்கும் முதலீட்டுக் காலம்: 3 வருடங்கள்
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

HDFC Gold Fund – Direct Plan

ஃபண்டு நிர்வாகம்: HDFC Mutual Fund
ஆரம்பித்த தேதி: ஜனவரி 1, 2013
லாப அளவீடு: சராசரி
ரிஸ்க் அளவீடு: சராசரிக்கும் கீழ்
குறைந்த முதலீட்டு தொகை: Rs.5000/-
ஒரு வருட லாபம்: 21%
மூன்று வருட லாபம்: 7%
ஐந்து வருட லாபம்: 6.14%
பரிந்துரைக்கும் முதலீட்டுக் காலம்: 3 வருடங்கள்
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

பொறுப்புத் துறப்பு: இந்த தளத்தில் வரும் கட்டுரைகள் யாவும் முதலீட்டாளர்களின் அறிமுகத்திற்கு மட்டுமே. இந்த கட்டுரைகளை படிப்பவர்களின் முதலீட்டிற்கு இந்த தளம் பொறுப்பேற்காது. படிப்பவர்கள் முதலீட்டு திட்டங்களை நன்கு ஆராய்ந்த பிறகு முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Thursday, 14 February 2019

, ,

5 சிறந்த நல்ல இலாபத்துடன் வருமான வரியையும் சேமிக்க மியூச்சுவல் ஃப்ண்டுகள்


நாம் வருமான வரியை சேமிக்க முதலீடு செய்யும் திட்டங்கள் நமக்கு வரியை சேமிப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட கால முதலீடில் நல்ல இலாபமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு வருமான வரியை சேமிக்கவும் நல்ல இலாபமும் தரும் திட்டங்களில் முதன்மையானது ELSS (Equity Linked Savings Scheme) என்று சொல்லக்கூடிய பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃப்ண்டுகள். 

நாம் ELSS மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்க்கு முன் அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.  சந்தைகளில் அம்மாதிரியான ELSS மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டங்கள் பல உள்ளன.   அந்த திட்டங்களில் 5 திட்டங்கள் மிகச் சிறந்த திட்டங்களாக இருக்கின்றன.  அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

1. Aditya Birla Sun Life Tax Relief 96 – Direct Plan

நிறுவனம்: Aditya Birla Sun Life Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.7,373/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
SIP முதலீடு: Rs.500 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 17%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 21%
NAV: Growth Plan: Rs.31.39, Dividend Plan: Rs.216.49

2. Axis Long Term Equity Fund – Direct Plan

நிறுவனம்: Axis Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.17,090/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
SIP முதலீடு: Rs.500 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 19%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 21%
NAV: Growth Plan: Rs.44.2871, Dividend Plan: Rs.34.6307

3. Mirae Asset Tax Saver Fund – Direct Plan

நிறுவனம்: Mirae Asset Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.1,315/- கோடிகள்
தொடங்கிய நாள்: 28/12/2015
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
SIP முதலீடு: Rs.500 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 18.45%
இலாப சதவிகிதம் (கடந்த 3 ஆண்டுகள்): 24%
NAV: Growth Plan: Rs.16.965, Dividend Plan: Rs.14.531

4. Quant Tax Plan – Direct Plan

நிறுவனம்: Mirae Quant Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.8/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.100/-
SIP முதலீடு: Rs.100 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 14%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 21%
NAV: Growth Plan: Rs.86.8018, Dividend Plan: Rs.11.5907

5. Tata India Tax Savings Plan – Direct Plan

நிறுவனம்: Mirae Tata Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.1,575/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
குறைந்த பட்ச SIP முதலீடு: Rs.150 (12 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 16%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 20%
NAV: Growth Plan: Rs.17.60, Dividend Plan: Rs.91.48

Tuesday, 29 July 2014

, , ,

உங்கள் தொழிலின் முதலீட்டிற்க்கு ஐந்து வழிகள்

நீங்கள் தொழில் செய்வதற்க்கு முக்கியமானது முதலீடு.  உங்களுடைய தொழில் யோசனை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் உங்களிடம் அதற்க்கான முதலீடு இல்லையென்றால் என்ன பயன்.  பொதுவாக தொழில் தொடங்குவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை.  அதற்கு பெரும்பாலும் தடையாக இருப்பது மூலதனம்.  சேர்த்து வைத்த பணம் அல்லது வங்கிகளின் கடன் தான் பெரும்பாலும் மூலதனத்திற்க்கு ஆதாரமாக விளங்குகின்றன.  ஆனால் எல்லோராலும் பணத்தை சேர்த்து வைத்து தொழில் தொடங்க முடியாமல் போகலாம்.  வங்கிகள் தரும் கடன் தான் தொழில் முனைவோர்களுக்கு மிகப்பெரிய பக்க பலம். ஆனாலும் எல்லோராலும் வங்கியில் எளிதாக கடன் பெற முடிவதில்லை.  எனினும் வங்கிகள் தவிர பல வழிகளில் உங்கள் தொழிலுக்கு மூலதனத்தை திரட்டலாம் என்று உங்களுக்கு தெரியுமா? 



உறவினர்கள் மற்றும் நண்பர்கள்

உங்களுடைய தொழிலுக்கு முதல் பக்க பலமாக இருப்பது உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்தான்.  நீங்கள் தொழில் தொடங்குவது என்று முடிவெடுத்து விட்டால் முதலில் அணுக வேண்டியது உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைதான். 

உங்கள் தொழில் குழந்தை முதல் காலடி எடுத்து வைப்பது இவர்களின் கைப்பிடித்துதான். உங்களுடைய தொழிலைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரையுங்கள்.  முடிந்தால் அவர்களையும் உங்கள் தொழிலின் ஒரு பார்ட்னராக ஏற்று கொள்ளுங்கள்.  ஆனால் ஒரு விஷயம், அவர்களின் இந்த முதலீன் உங்களின் நட்பு அல்லது உறவை கெடுக்கக் கூடியதாக இருக்க கூடாது.  அவர்கள் உங்களுக்கு உதவ தயாரா? ஒரு வேளை நஷ்டம் வந்தால் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்.  ஏனென்றால் கடன் அன்பை மட்டுமல்ல சில சமயம் எலும்பையும் முறிக்கும்.

வணிக ஊக்கிகள் (Business Incubaros)

வணிக ஊக்கிகள் எனப்படுபவர்கள் உங்கள் தொழிலுக்கு முதல் மூலதனம் தருவதோடு நின்றுவிடாமல் உங்கள் தொழிலுக்கு தேவையான அத்தனை ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.  இவர்கள் அனைவரும் தொழில் வல்லுனர்கள்.  ஆகையால் இவர்கள் உங்கள் தொழில் முதலீடு மற்றும் அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள்.

முன்னுரிமை பங்குதாரர்கள்

முன்னுரிமை பங்குதாரர்கள் உங்கள் தொழிலில் வரும் இலாபத்தை முதலில் பங்கு போட்டுக் கொள்ளும் உரிமையாளர்கள்.  இவர்களுக்கு தொழிலின் மூலம் கிடைக்கும் இலாபத்தை ஒரு குறிப்பிட்ட நிலையான சதவீகிதத்திற்க்கு எடுத்து கொள்ளுவார்கள்.  எந்த ஒரு பெரிய தொழிலின் முதல் மூலதனம் இவர்களுடையதாய் இருக்கும்.  இதன் மூலமே பல தொழில்கள் மேலும் வளர்ச்சி அடைய முடியும்.

மாற்றத்தக்க கடன் பத்திரம்

சமீப ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக இருப்பது இந்த மாற்றத்தக்க கடன் பத்திரங்கள்.  அதாவது கடன் கொடுப்பவர்கள் சிறிது காலத்திற்க்கு பிறகு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொழிலில் பங்கு தாரர்கள் ஆவார்கள்.  இதுதான் மாற்றத்தக்க கடன் பத்திரம் என்பது.  இந்த முறையிலும் நீங்கள் உங்கள் தொழிலுக்கான முதலீட்டை பெறலாம்.

துணிகர முதலீடு


துணிகர முதலீடு அல்லது ஆங்கிலத்தில் வென்சர் கேப்பிடல் மூலமும் உங்கள் தொழிலுக்கான முதலீட்டை பெறலாம்.  இந்த துணிகர முதலீடுப் பற்றி இங்கே விரிவாக கொடுத்துள்ளோம்.

English Summary:

You can fund your business in various ways.  There are five important ways that you can seek fund for your business.  These are: Family and Friends, Business Incubators, Preference Shares, Convertible Debentures and Venture Funding.

Image & Souce Courtesy: Yourstory.in

Friday, 28 February 2014

, , , ,

வென்சர் கேப்பிடல் (Venture Capital) / துணிகர முதலீடு என்றால் என்ன?

எந்த ஒரு தொழில் ஆரம்பிக்கும் போதும் அதற்கான முதலீடு பல வழிகளில் திரட்டப் படுகிறது.  பொதுவாக ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு தொழிலை தொடங்கும் போது அதனுடைய சாதக பாதகங்கள் ஏற்கனவே பரிச்சயமாகியிருக்கும்.  அதனால் முதலீடு போடுபவர்கள் அவற்றை கருத்தில் கொள்வார்கள்.  ஆனால் புதிதாக, சந்தையில் பரிச்சயமில்லாத, ஒரு தொழிலை தொடங்கும் போது அதற்க்கான முதலீட்டை பெறுவது அவ்வளவு சுலபமில்லை.  இதற்க்கான தீர்வுதான் வென்சர் கேப்பிடல் (Venture Capital) அதாவது துணிகர முதலீடு.

வென்சர் கேப்பிடல் என்று சொல்லப்படும் நிறுவனங்கள் போதுவாக புதிய, சந்தைக்கு பரிச்சயமில்லாத தொழில்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.  அவர்கள் உங்கள் தொழிலின் தன்மை, நீங்கள் அதற்க்காக போட்டிருக்கும் திட்டங்கள், லாப கணக்குகள் ஆகியவற்றை அலசி, உங்கள் தொழில் லாபம் ஈட்டும் என்று தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்வார்கள்.  இதன் மூலம் நீங்களும் உங்கள் தொழிலை கவனமாக ஆரம்பிக்கலாம். 

வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், மேலாண்மை நிபுணர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியவற்றை கொண்டு இருக்கும்.  இதனால் அவர்களின் அனுபவமும் அறிவும் உங்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும்.  அவர்கள் உங்களின் தொழிலின் ஒவ்வொரு படியிலும் தங்களது ஆலோசனைகளை வழங்குவார்கள். 

இந்த முதலீடுகள் பல கட்டங்களில் நடைபெறும்.  ஆரம்ப முதலீடு, சிறிது வளர்ச்சி அடைந்த பிறகு முதலீடு பின்பு தொழிலின் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்க்கான முதலீடு என பல கட்டங்களாக நடைபெறும்.

இந்நிறுவனங்கள் உங்களின் தொழிலின் பங்கு தாரர்களாக இருப்பார்கள். இந்த பங்குகள் மூலம் அவர்கள் தங்கள் லாபத்தை எடுத்துக் கொள்வார்கள்.  எப்போது உங்கள் தொழில் தன்னிச்சையாக முதலீடுகளை செய்ய முடிகிறதோ அப்போது அவர்கள் நிறுவன பங்குகளை விற்று விலகிக் கொள்வார்கள்.


குறிப்பு: இந்த கட்டுரை வென்சர் கேப்பிடல் பற்றிய ஒரு அறிமுகமே.  இது பற்றி அதிக தகவல்கள் பெற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது நிபுணர்களை அணுகவும்.