Sunday, 13 October 2019

Filled Under: , ,

தங்கத்தில் முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்டுகள்




பொதுவாக தங்கத்தில் முதலீடுகள் நகைகளாக அல்லது தங்க காசுகளாக தான் முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால் அவ்வாறு தங்க நகைகளாக அல்லது தங்க காசுகளாக முதலீடு செய்யும்போது அவற்றை பாதுகாப்பது சற்று கடினமாக தான் இருக்கும்.
ஆனாலும் பாதுகாப்பான முறையில் அதாவது நகைகளாக அல்லது தங்க காசுகளாக முதலீடு செய்யாமல் கோல்ட் ஃபண்டு என்று சொல்லப்படுகின்ற மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நகைகளையும் தங்கக் காசுகளையும் பாதுகாக்கும் அவசியம் இருக்காது.  அவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு பற்றிய அறிமுகம்

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நாம் செய்யும் முதலீடு தங்க பரிமாற்ற வர்த்தக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.  அதாவது இ டி எஃப் என்று சொல்லப்படுகின்ற தங்க பரிமாற்ற வர்த்தக பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. 

பொதுவாக இடிஎஃப்  முதலீடு செய்ய வேண்டுமென்றால் தனியாக டிமேட் அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும்.  ஆனால் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய டிமேட் அக்கவுண்ட் தேவையில்லை. 

குறைந்த முதலீடாக மாதம் ஆயிரம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்த பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

மாதம் மாதம் முதலீடு செய்யும் தொகை முதலீடு செய்யும் தேதியில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும்.

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவர்கள் இந்த கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு  திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.

கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு லாபம்

பொதுவாக முதலீடு என்று எடுத்துக் கொள்ளும்போது தங்கத்தில் 10 சதவிகிதம் முதலீடு செய்வது சரியானது.   அதற்குமேல் தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.  கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மற்ற மியூச்சுவல் ஃபண்டு போல அதிக லாபம் தரக்கூடியவை அல்ல.  பொதுவாக பங்கு சந்தை இறங்கியிருக்கும் காலங்களில் கோல்ட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது.

இத்திட்டங்கள் குறைந்த கால முதலீட்டிற்கு ஏற்றவை.

சிறந்த கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்

Kotak Gold Fund – Direct Plan

ஃபண்டு நிர்வாகம்: Kotak Mahindra Mutual Fund
ஆரம்பித்த தேதி: ஜனவரி 1, 2013
லாப அளவீடு: அதிகம்
ரிஸ்க் அளவீடு: சராசரி
குறைந்த முதலீட்டு தொகை: Rs.5000/-
ஒரு வருட லாபம்: 24%
மூன்று வருட லாபம்: 7%
ஐந்து வருட லாபம்: 6.55%
பரிந்துரைக்கும் முதலீட்டுக் காலம்: 3 வருடங்கள்
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

HDFC Gold Fund – Direct Plan

ஃபண்டு நிர்வாகம்: HDFC Mutual Fund
ஆரம்பித்த தேதி: ஜனவரி 1, 2013
லாப அளவீடு: சராசரி
ரிஸ்க் அளவீடு: சராசரிக்கும் கீழ்
குறைந்த முதலீட்டு தொகை: Rs.5000/-
ஒரு வருட லாபம்: 21%
மூன்று வருட லாபம்: 7%
ஐந்து வருட லாபம்: 6.14%
பரிந்துரைக்கும் முதலீட்டுக் காலம்: 3 வருடங்கள்
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

பொறுப்புத் துறப்பு: இந்த தளத்தில் வரும் கட்டுரைகள் யாவும் முதலீட்டாளர்களின் அறிமுகத்திற்கு மட்டுமே. இந்த கட்டுரைகளை படிப்பவர்களின் முதலீட்டிற்கு இந்த தளம் பொறுப்பேற்காது. படிப்பவர்கள் முதலீட்டு திட்டங்களை நன்கு ஆராய்ந்த பிறகு முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

0 comments:

Post a Comment