Sunday 4 May 2014

Filled Under: , , , , , , ,

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள், இந்த புத்தகத்தை எழுதியவர் ஸ்டீபன் கவே.  ஆங்கிலத்தில் ‘The 7 Habits of Highly Effective People’ என்ற பெயரில் வெளியான இந்த புத்தகத்தை தமிழிலில் மொழி பெயர்த்துள்ளனர்.  சுமார் இரண்டு கோடி பிரதிகளுக்கும் மேலாக விற்றுள்ள சுய முன்னேற்ற புத்தகம்.  ஆண்டுகள் பல ஆன பிறகும் இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளும் உத்திகளும் இன்றும் தொழில் முனைவோர் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.


இந்த புத்தகம் எவ்வாறு இரண்டு மனிதர்களின் பார்வைகள் வேறுபடுகிறது என்று அறிமுகப் படுத்துகிறது.  இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டீபன் கவே, ஒருவர் திறமையாக மாறுவதற்க்கு எவ்வாறு அடுத்தவரை சார்ந்திராமல் சொந்தமாக முடிவேடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார்.

இந்த புத்தகம், நீங்கள் அதிக ஆற்றல் பெறுவதற்க்கு ஏழு பழக்கங்களை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றி சொல்லுகிறது.  முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி பில் கிளிண்டன் அவர்கள் இந்த புத்தகத்தை படித்து அதில் கூறப்பட்டுள்ள பழக்கங்களை தன் வாழ்நாளில் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது கடைப்பிடித்து சிறப்பாக வழி நடத்தினார்.

ஆசிரியரைப் பற்றி

ஸ்டீபன் ரிச்சர்ட்ஸ் கவே ஒரு அமெரிக்க எழுத்தாளர், தொழிலதிபர், பேச்சாளர் மற்றும் சுய முன்னேற்றத்திற்க்கான பயிற்சி அளிப்பவராகவும் இருந்திருக்கிறார்.  இவர் இது தவிர பல சுய முன்னேற்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். 


புத்தகத்தைப் பற்றி
  • ஆசிரியர்:  ஸ்டீபன் ரிச்சர்ட்ஸ் கவே (தமிழிலில்: நாகலட்சுமி சண்முகம்)
  • பதிப்பாளர்: மஞ்சூல்
  • பக்கங்கள்: 512 பக்கங்கள்
  • விலை: Rs.228/- 
குறிப்பு: புத்தகம் வேண்டுவோர் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்து படிவத்தை நிரப்பியும் பெறலாம்.

0 comments:

Post a Comment