மனிதர்களாகிய நாம் ஒரு சமூக விலங்காக கருதப்படுகிறோம். இதன் அர்த்தம் நாம் தனியாக இந்த உலகத்தில் வாழ்க்கை
நடத்த முடியாது. நாம் பல மனிதர்களுடன் பழக
வேண்டியுள்ளது. அவ்வாறு பழகும் போது நாம் பல
குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர்களை நாம் நம் நண்பர்களாக்கி கொள்வது அவசியம். ஆனால் ஒருவரை நாம் நண்பராக்கி கொள்வது அவ்வளவு எளிதான
காரியம் அல்ல.
நீங்கள் பார்க்கும் அல்லது பழகும் அனைவரையும்
நண்பர்களாக்கி கொள்ளவும், மக்களிடம் செல்வாக்குடன் விளங்கவும், உங்கள் தொழில், தனிப்பட்ட
வாழ்க்கை ஆகியவற்றில் சிறந்து விளங்கவும் டேல் கார்னகி ஆங்கிலத்தில் எழுதிய ‘How
to Win Friends and Influence People?’ என்ற புத்தகம் ‘நண்பர்களை எளிதாகப் பெறுவதும்
மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை படிப்பவர்கள் அவர்களின்
மனைவி, கணவர், குழந்தைகள், முதலாளி, தொழிலாளி, நண்பர்கள் மற்றும் அன்றாடம் சந்திக்கும்
மனிதர்களை எளிதாக கையாளலாம். அவர்களிடம் செல்வாக்கு
பெறலாம். வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
குறிப்பு: இந்த புத்தகம் சுமார் 1 கோடிகளுக்கும் அதிகமாக
விற்பனையாகியுள்ளது.
ஆசிரியரைப்
பற்றி:
டேல் கார்னகி 1888 ஆம் ஆண்டு அமெரிக்காவில்
பிறந்த ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவர்
பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய
புத்தகங்கள் பலவும் இன்றும் மக்களால் விரும்பி படிக்க படுகிறது.
புத்தகத்தைப்
பற்றி:
- பெயர்: நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி?
- எழுத்தாளர்: டேல் கார்னகி
- பக்கங்கள்: 394 பக்கங்கள்
- விலை: Rs.175/-
where is the link to buy?
ReplyDelete