பணவீக்கம் என்பது நாம் வாங்கும் பொருள்கள்
மற்றும் நமக்கு அளிக்கப் படும் சேவைகளின் ஆண்டுக்கு ஆண்டு ஏறும் விலையேற்றம். இது விகிதத்தில்
கணக்கிடப் படுகிறது. உதாரணமாக ஒரு தொலைக்காட்சி
பெட்டியின் விலை தற்போது Rs.12000/- என்றால், ஆண்டிற்க்கு 9% என்ற சதவீகத்தில் அதன்
விலை ஐந்தாண்டுகளுக்கு பிறகு Rs.18463/- என்றிருக்கும். இதுதான் பணவீக்கம் எனப்படுகிறது.
பணவீக்கம் நாணயத்தின் வாங்கும் சக்தியை குறைக்கிறது. பணவீக்கம் விலை குறியீட்டெண் அடிப்படையில் நிர்ணயம்
செய்யப் படுகிறது. இந்தியா போன்ற வளர்ந்து
வரும் நாடுகளில் பணவீக்கம் பொதுவாக அதிகமாக காணப்படும். ஆனால் மிக அதிக பணவீக்கம் பொருளாதாரத்தை பாதிக்கும்.
பொதுவாக பணவீக்கம் அதிக ஏற்றமும் அதிக இறக்கமும்
இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது நலம். தேவையான அளவிற்க்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும்
கடமை மத்திய வங்கியை சார்ந்தது. பணவீக்கம்
தேவை மற்றும் வழுங்கல் போன்ற காரணிகளால் மாற்றம் அடைகிறது.
0 comments:
Post a Comment