Saturday 3 May 2014

Filled Under: ,

பொருளாதாரத்தில் ஜப்பானை முந்துகிறது இந்தியா: உலக வங்கி

வாங்கும் திறன் சமநிலையின் படி (Purchasing Power Parity (PPP)) பொருளாதாரத்தில் ஜப்பானை முந்தி மூன்றாவது இடம் பிடிக்கிறது இந்தியா, இது உலக வங்கியின் கூற்று. 



உலக வங்கி நடத்தும் சர்வதேச ஒப்பீடு திட்டம் (International Comparison Program (ICP)) என்ற ஆய்வின்படி உலக நாடுகளின் வாங்கும் திறன் சமநிலையை ஆராய்கிறது.  இந்த ஆய்வு கடைசியாக 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.  அப்போது இந்தியா இந்த பட்டியலில் பத்தாவாது இடத்தை பிடித்தது.  தற்போது 2011 ஆம் ஆண்டு நடந்த ஆய்வின் படி இந்தியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக இடம் பிடித்துள்ளது.

இந்த ஆய்வு 199 நாடுகளை உள்ளடக்கியது.  இதில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product), வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் இந்தியாவின் பங்களிப்பு 6.4 சதவீதமாக உள்ளது.  இதில் சீனா மற்றும் அமெரிக்காவின் பங்களிப்பு முறையே 14.9 மற்றும் 17.1 சதவீதமாக உள்ளது.

வாங்கும் திறன் சமநிலை, வெவ்வேறு நாடுகளில் உள்ள விலை வேறுபாடுகளுக்கு ஏற்ப அவற்றின் பொருளாதாரம் மற்றும் மக்கள் வருமான அளவை ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது.

இது இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.  மிக குறிகிய காலமான ஆறு ஆண்டுகளில் பத்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்க்கு முன்னேறியுள்ளது எந்த நாட்டிர்க்கும் ஒரு பெரிய சாதனையாகும்.

இந்த ஆய்வின் படி, ஆசிய பொருளாதாரத்தில் மூன்று முக்கிய நாடுகளான இந்தியா, சீனா இந்தோனேசியா ஆகியவை அமெரிக்காவை விட இரண்டு மடங்கு அளவில் இந்த பட்டியலில் முன்னேறியுள்ளன.  இதே போல, மெக்சிகோ, பிரேசில் மற்றும் ரஷ்யா மூன்று மடங்கு உயர்ந்துள்ளன.

உலகில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தோனேசியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் நடுத்தர வருமான வகையை சேர்ந்தவை.  உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 32.3 சதவீதம்.  மேலும் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் உயர் வருமான வகையை சேர்ந்தவை.  உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 32.9 சதவீதம்.


Courtesy: The article was originally published by: Trak.in

Image Courtesy: Trak.in

0 comments:

Post a Comment