Friday, 28 February 2014

Filled Under: , , , ,

வென்சர் கேப்பிடல் (Venture Capital) / துணிகர முதலீடு என்றால் என்ன?

எந்த ஒரு தொழில் ஆரம்பிக்கும் போதும் அதற்கான முதலீடு பல வழிகளில் திரட்டப் படுகிறதுபொதுவாக ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு தொழிலை தொடங்கும் போது அதனுடைய சாதக பாதகங்கள் ஏற்கனவே பரிச்சயமாகியிருக்கும்அதனால் முதலீடு போடுபவர்கள் அவற்றை கருத்தில் கொள்வார்கள்ஆனால் புதிதாக, சந்தையில் பரிச்சயமில்லாத, ஒரு தொழிலை தொடங்கும் போது அதற்க்கான முதலீட்டை பெறுவது அவ்வளவு சுலபமில்லைஇதற்க்கான தீர்வுதான் வென்சர் கேப்பிடல் (Venture Capital) அதாவது துணிகர முதலீடு.

வென்சர் கேப்பிடல் என்று சொல்லப்படும் நிறுவனங்கள் போதுவாக புதிய, சந்தைக்கு பரிச்சயமில்லாத தொழில்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.  அவர்கள் உங்கள் தொழிலின் தன்மை, நீங்கள் அதற்க்காக போட்டிருக்கும் திட்டங்கள், லாப கணக்குகள் ஆகியவற்றை அலசி, உங்கள் தொழில் லாபம் ஈட்டும் என்று தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்வார்கள்இதன் மூலம் நீங்களும் உங்கள் தொழிலை கவனமாக ஆரம்பிக்கலாம்

வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள், மேலாண்மை நிபுணர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியவற்றை கொண்டு இருக்கும்இதனால் அவர்களின் அனுபவமும் அறிவும் உங்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும்அவர்கள் உங்களின் தொழிலின் ஒவ்வொரு படியிலும் தங்களது ஆலோசனைகளை வழங்குவார்கள்

இந்த முதலீடுகள் பல கட்டங்களில் நடைபெறும்ஆரம்ப முதலீடு, சிறிது வளர்ச்சி அடைந்த பிறகு முதலீடு பின்பு தொழிலின் அடுத்த நிலைக்கு முன்னேறுவதற்க்கான முதலீடு என பல கட்டங்களாக நடைபெறும்.

இந்நிறுவனங்கள் உங்களின் தொழிலின் பங்கு தாரர்களாக இருப்பார்கள். இந்த பங்குகள் மூலம் அவர்கள் தங்கள் லாபத்தை எடுத்துக் கொள்வார்கள்.  எப்போது உங்கள் தொழில் தன்னிச்சையாக முதலீடுகளை செய்ய முடிகிறதோ அப்போது அவர்கள் நிறுவன பங்குகளை விற்று விலகிக் கொள்வார்கள்.


குறிப்பு: இந்த கட்டுரை வென்சர் கேப்பிடல் பற்றிய ஒரு அறிமுகமே.  இது பற்றி அதிக தகவல்கள் பெற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது நிபுணர்களை அணுகவும். 

0 comments:

Post a Comment