Friday, 14 March 2014

Filled Under: , ,

குரு பார்த்தால் கோடி நன்மை – திருவல்லீஸ்வரர் கோயில்

சென்னை-திருவள்ளுர் நெடுஞ்சாலையில் பாடி மேம்பாலச் சாலை பக்கத்தில், படவட்டம்மன் கோயில் எதிரே உள்ள ஒரு குறுகிய சாலை எங்களை திருவல்லீஸ்வரர் கோயில் வாசல் அருகே அழைத்து சென்றது.



இது ஒரு இந்தியாவில் உள்ள சிவத்தலங்களில் ஒன்றாகும்.  இந்த கோயில் மிகவும் பிரபலம் இல்லை என்றாலும் இதன் வரலாறு மிகவும் பழமை வாய்ந்ததாகும்.  மேலும் இத்தலம் திருஞான சம்பந்தர் அவர்களால் பாடப்பெற்ற தலமாகும்.  இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

கோயிலின் முன் முற்றத்துடன் கூடிய நடைபாதை உள்ளது.  நீங்கள் முற்றத்தை கடந்தால் மூலவரை வழிபடலாம்.  திருவல்லீஸ்வரர் என்பது மூலவரின் பெயர்.  மூலவரை சுற்றி உள்ள நடைபாதையில் நீங்கள், சூரியன், விநாயகர் மற்றும் முருகன் விக்கிரகங்களை காணலாம்.

ஒன்பது கிரகங்களில் ஒன்றான குருவிற்க்கு இங்கே தனி சந்நிதி உள்ளது.  குருவின் தாக்கம் ஒருவரின் வாழ்கையில் மிகவும் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது.  இத்தலம் ஒரு பரிகார தலமாகும். குருவினால் ஏற்படும் துன்பங்கள் இத்தலத்திற்க்கு சென்று வழிபடுவதால் தீரும்.


இடம்: பாடி, திருவள்ளுர் மாவட்டம், தமிழ்நாடு (சென்னைக்கு மிக அருகில்).  சென்னை சென்டரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரம்.

0 comments:

Post a Comment