Monday 12 May 2014

Filled Under: , , , , ,

அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அருமையான உணவு வகைகள்: FRSH

தொழில் நுட்பத்தில் பல முன்னேற்றங்களை கண்டுவரும் நம்முடைய வாழ்க்கை ஒன்றை கவனிக்க தவறிவிட்டது.  அதுதான் சத்தான உணவு.  இளைஞர்கள் பலர் இன்று குளிர் அடைக்கப்பட்ட அலுவலகங்களில் கடிகாரத்தை பார்க்காமல் பசியை கூட பொருப்படுத்தாமல் வேலை பார்க்கின்றனர்.  இதனால் அவசரகதியில் அவசர உணவுகளை உண்டு உடலை கெடுத்து கொள்கின்றனர்.  பல இளைஞர்கள் தனது குடும்பங்களை விட்டு விட்டு தனியாக தங்கியிருக்கின்றனர்.  இதனால் உணவு விசயத்தில் இவர்கள் படும் பாடு சொல்லிமாளாது. 


டில்லியில் ஐ.ஐ.டி யில் படித்த இளைஞர் படால் கொயல் ஒரு மெக்கானிகல் பொறியாளர்.  இந்த பிரச்சனைக்கு தீர்வு தேடி பல ஆண்டுகள் கழித்து உருவாக்கியதுதான் FRSH.  கவ்ரவ் லால் என்ற ஐ.ஐ.டி டில்லி மற்றும் ஐ.ஐ.ம் கல்கத்தாவில் படித்த நண்பரின் உதவி மூலம் சந்தைப் படுத்துதல் மற்றும் தொழில் உத்தியை கற்றுக் கொண்டு இந்த தொழிலை உருவாக்கியிருக்கிறார் படால்.

கடந்த மூன்றாண்டுகளில் இடைவிடாத உழைப்பின் மூலம் உருவானதே FRSH.  இது வேலை செய்யும் இளைஞர்களை கருத்தில் கொண்டு உருவானது.  இன்றைய இளைஞர்கள் தரம் நிறைந்த, குறைந்த நேரமே எடுத்து கொள்கிற, வகைகள் பல நிறைந்த உணவுவகைகளையே விரும்புகின்றனர்.  இவர்களுக்காக பல வணிக மாதிரிகளை சோதனை செய்த பின்னர் கடைசியாக வெற்றி பெற்றதுதான் FRSH.

நீங்கள் உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம்.  பணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம்.  நீங்கள் அலுவலகம் செல்வதற்க்கு பயணம் செய்யும் போதே FRSH ல் 30 வினாடிகளில் ஒரு ஆரஞ்ச் ஜூஸை ஆர்டர் செய்யலாம்.  நீங்கள் அலுவலகத்தில் நுழையும் போது அங்கு வரவேற்பறையில் உங்களுக்காக ஆரஞ்ச் ஜூஸ் தயாராக இருக்கும்.  அதற்கான பணத்தை செலுத்தி விட்டு நீங்கள் அதை பெற்று கொள்ளலாம்.

பல தடவைகளுக்கு பிறகு மற்றும் வாடிக்கையாளர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு உணவின் தரம் உயர்த்தப் பட்டிருக்கிறது.  தற்போது இந்த சேவை குர்க்கானில் உள்ள சில அலுவலகங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது.  விரைவில் இந்த சேவை குர்க்கானில் உள்ள பல அலுவலகங்களுக்கும் மேலும் பள்ளிகள், கல்லூரிகள், இரயில் நிலையங்கள், பல அடுக்குமாடி வீடுகளிலும் விரிவுப் படுத்தபட இருக்கிறது என்கிறார் படால்.


ஒரு நாளைக்கு 80 முதல் 90 வரை ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.  இந்த ஆண்டின் இறுதிக்குள் இதை 1000 ஆர்டர்களாக உயர்த்த FRSH திட்டமிட்டுள்ளது.  மேலும் இந்நிறுவனம் தொழில்நுட்பம், தானியங்கிகள் மற்றும் தரத்தில் முதலீடு செய்ய இருக்கிறது.  இதன் வாடிக்கையாளர்கள் தொடந்து இதற்க்கு ஆதரவு கொடுத்து வருவது இதன் வெற்றிக்கு ஒரு அடையாளம்.  இதன் முக்கிய நோக்கம் தரமான உணவு வகைகளை சரியான விலையில் கொடுப்பதேயாகும்.

Courtesy: The article was originally published by: yourstory.com
Image Courtesy: yourstory.com

1 comments: