இன்று கைபேசி இல்லாத கைகள் இல்லை எனலாம். மேலும் நாளுக்கு நாள் பல புது அம்சங்களை கொண்ட செல்போன்கள்
சந்தையில் அறிமுகமாகி வருகின்றன. இந்திய ஒரு
மிகப்பெரிய செல்போன்கள் சந்தை. இதற்கு காரணம்
இங்கு இருக்கும் மக்கள் தொகையும் ஏறிவரும் தனிநபர் வருமானமும்.
ஆனாலும் செல்போன்கள் வைத்திருப்பவர்களின்
ஒரே குறை செல்போன்களில் தேவையான பாட்டரி சார்ஜ் இருப்பதில்லை. ஏனென்றால் நாம் செல்போன்களை பேசுவதற்கு மட்டும்
பயன் படுத்துவதில்லை. பேசுவதை தாண்டி பல வேலைகளுக்கு
நாம் செல்போன்களை பயன்படுத்துகிறோம். மேலும்
செல்போன்களில் இணையம் பயன்பாடு அதிகரித்திருப்பதால் 3G, 4G என இணைய வேகம் அதிகரித்திருக்கிறது. இந்த வேகம் செல்போன்களின் சார்ஜின் வேகத்தை பொருமளவிற்க்கு
குறைக்கிறது.
இதனால் பல வேலைகளில் நம் செல்போன்கள் நமக்கு
பயன்படும் நேரத்தில் செயலற்றும் போகின்றன.
இந்த குறையை போக்குவதற்க்காக மும்பையை அடிப்படையாக கொண்ட XYRA என்ற தொடக்க நிலை
தொழில் நிறுவனம் உங்கள் பர்ஸிற்க்குள் அடங்க கூடிய ஸ்மார்ட் போன் சார்ஜரை அறிமுகப்
படுத்திருக்கிறது. இதன் பெயர் ‘எக்ஸ் எஸ் பவர்
கார்ட்’ (XS Powercard).
இந்த சார்ஜரில் தகவல்கள் சேமிப்பகமும்
(Data Storate) உள்ளடங்கிய டெட்ட கேபிளும் (Data Cable) இருக்கிறது. இதே போல பல சார்ஜர்கள் இருந்தாலும் இதன் சிறப்பம்சம்,
நீங்கள் செல்போனையும் சார்ஜரையும் ஒரே நேரத்தில் வெளி மின்சார மூலத்தின் மூலம் சார்ஜ்
செய்யும் போது முதலில் செல்போன் தான் சார்ஜ் ஆகும். அதன் பிறகு தான் பவர்கார்ட் சார்ஜ் ஆகும். மேலும் நீங்கள் பவர்கார்டை மட்டும் முதலில் சார்ஜ்
செய்ய வேண்டுமென்றாலும் அவ்வாறே சார்ஜ் செய்யலாம்.
இந்த சார்ஜ்கார்ட் மினி யுஎஸ்பி (Mini
USB) மற்றும் பல மின் இணைப்பு வகைகளை கொண்டுள்ளது. இது 8/16/32 GB தகவல் சேமிப்பகம் (Data
Storage) கொண்ட பல வகைகளில் கிடைக்கிறது. இதன்
விலை ரூபாய் 2000 மட்டுமே. இந்த சார்ஜ்கார்ட்
பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. இது 2200 mAh
சார்ஜ் சேமிக்கும் திறன் கொண்டது. இதன் ஸ்டாண்ட்பை
(Standby) திறன் 150 நாட்களுக்கு வரும்.
கீழ்வரும் வீடியோ மூலம் இதன் திறனை மேலும்
அறியலாம்.
இந்த சார்ஜ்கார்டை அறிமுகப் படுத்தியது சாஹெஜ்
சேதி, அர்மான் காந்தி மற்றும் அர்சான் இரானி.
இவர்கள் இந்த சார்ஜ்கார்டை உற்பத்தி செய்வதற்க்கு நிதி திரட்டி வருகிறார்கள். இது மாதிரி புதியதாக சிந்தித்து புது புது பொருள்களை
மக்களின் தேவைக்கேற்ப அறிமுகம் படுத்துவதின் மூலம் நம் நாடும் உலக நாடுகளுக்கு மத்தியில்
போட்டி போடும் திறன் பெறும்.
Courtesy: Source & Image: Trak.in
0 comments:
Post a Comment