இந்தியாவில் தொழில் நடத்துவது கடினமாக இருக்கிறது. நாளுக்கு நாள் புதிய தொழில்கள் தொடங்கும் இந்த நேரத்தில்
இந்தியாவில் ஒரு தொழிலை நடத்துவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. இதில் இந்தியா 134 ஆவது இடத்தில் இருக்கிறது.
உலக வங்கியும், இன்டெர்நேஷனல் ஃபைனான்ஸ்
கார்ப்பரேஷனும் சேர்ந்து நடத்திய 2014 ஆம் ஆண்டிற்க்கான ’தொழில் நடத்துவது’ என்ற ஆய்வில்
இந்தியா பிடித்திருப்பது 134 ஆவது இடம் மட்டுமே.
அட! மெத்தமே 189 நாடுகளே இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. இதில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவிற்க்கு கிட்டதட்ட
கடைசி இடத்தை தான் பிடிக்க முடிந்துள்ளது.
இது போன வருடம் 2013 யை விட மோசம்.
போன வருடம் 131 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 134 ஆவது இடத்திற்க்கு
தள்ளப் பட்டிருக்கிறது. இதன் பட்டியலை
>இங்கே< காணலாம்.
இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது
சிங்கப்பூர். இது இந்த இடத்தை கடந்த 5 ஆண்டுகளாக
தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிங்கப்பூரில்
நீங்கள் ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்றால் அதற்கு 48 மணிக்கும் குறைவான நேரமே ஆகும். ஆனால் இந்தியாவில் அதற்கு குறைந்தது 27 நாட்களாவது
ஆகும். அதுவும் அனைத்து நிலையும் உங்களுக்கு
சாதகமாக இருந்தால் மட்டும்.
ஹாங்காங், நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும்
டென்மார்க் போன்ற நாடுகள் இந்த பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. மேலும் BRIC Nations என்று சொல்லப்படும் வளர்ந்து
வரும் நாடுகளின் குழுவில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது. இதில் ரஷ்யா 92 ஆவது இடத்திலும், சீனா 96 ஆவது இடத்திலும்,
பிரேசில் 116 ஆவது இடத்திலும் இருக்கின்றன.
மேலும் ’தொழில் தொடங்குவது’ என்ற பட்டியலில்
இந்தியா பிடித்திருப்பது 179 ஆவது இடம். ஆக
வெறும் 10 நாடுகள் மட்டுமே அதன் பின் இருக்கிறது.
இந்தியாவில் ஒரு தொழில் தொடங்க 12 வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. மேலும் இதற்கு குறைந்தது ஒரு மாத காலம் ஆகும். ஒரு வணிகத்தை தொடங்குதல், அனுமதி பெறுதல், ஒப்பந்தங்கள்
செயல்படுத்துவது மற்றும் வரி செலுத்துவது ஆகியவற்றில் ஏற்படும் தாமதங்கள் இந்தியா இந்த
இடத்தை பிடிக்க காரணமாயிருக்கிறது.
ஆனாலும் இத்தனை தாமதங்கள் இருந்தாலும் தொழில்களுக்கு
கடன் பெறுவதிலும் முதலீட்டாளர்களின் நலன் காப்பதிலும் இந்தியா சிறந்து விளங்கியிருக்கிறது. இத்தனை தடைகள் இருந்தாலும் இந்த விதத்தில் முதலீட்டாளர்கள்
தங்கள் பணத்தை தைரியமாக முதலீடு செய்யலாம்.
இதனால்தான் உலக பொருளாதாரத்தில் தேக்கங்கள் இருந்தாலும் இந்தியாவில் அதன் பாதிப்பு
அவ்வளவாக இல்லை.
Courtesy: The article was originally published by: Trak.in
Image Courtesy: Trak.in
0 comments:
Post a Comment