Friday 9 May 2014

Filled Under: , , ,

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி-3

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறேம்.  இதன் >பகுதி-1< >பகுதி-2< யும் படிக்கவும்.

லி கா ஷிங்

லி கா ஷிங் ஒரு ஹாங்காங் தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் ஒரு கொடையாளி.  இவர் தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்.  இவருடைய சொத்தின் மதிப்பு சமீபகாலம் வரை டாலர் 31.9 பில்லியன் என்று ஒரு கணக்கு சொல்கிறது.


ஷிங் சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் பிறந்தவர்.  இவர் தனது 15 ஆவது வயதிலேயே தன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது.  இவரி ஒரு பிளாஸ்டிக் டிரேடிங் செய்யும் நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் கடினமான வேலை செய்து வந்தார்.  சில வருடங்களுக்கு பின்னர் தன் சொந்த நிறுவனமான சேங் காங் நிறுவனத்தை தொடங்கினார்.

பின் இவரது தொழில்களை பல துறைகளிலும் விரிவு படுத்தினார்.  அதில் வங்கிகள், கட்டுமான பணி, ரியல் எஸ்டேட், பிளாஸ்டிக், செல் பேசி, சாட்டிலைட் டிவி, சிமெண்ட், சூப்பர் மார்க்கேட், ஒட்டல்கள் ஆகிய மிக சிலவும் அடங்கும்.  இன்று ஹாங்காங்கில் இவர் கைபடாத தொழில்களே கிடையாது எனலாம்.  இவருடைய கடின உழைப்பால் இன்று 55 நாடுகளில் சுமார் 2 லட்சத்திற்க்கும் மேலான தொழிலாளிகள் கொண்ட இவரது தொழில்கள் விரிவுப் படுத்தப்பட்டிருக்கின்றன. 

ஜன் கவ்ம்

ஜன் கவ்ம், இன்று பலரது கைப் பேசிகளில் பயன்ப்படுத்த படும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும், வாட்ஸ் அப் (WhatsApp) என்ற மொபைல் அப்ளிகேஷனை கண்டுபிடித்தவர்.  இவரது கண்டுபிடிப்பை பேஸ்புக் நிறுவனம் டாலர் 19 பில்லியன் கொடுத்து வாங்கியிருக்கிறது.  இதனால் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனவர்கள் பட்டியலில் ஜன் கவ்ம் சேர்ந்திருக்கிறார். 


இவர் உக்ரேனில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர்.  இவரது 16 ஆவது வயதில் வயிற்று பிழைப்புக்காக கலிபோர்னியாவிற்க்கு குடிபெயர்ந்தது இவரது குடும்பம்.  பல சரக்கு கடையில் தரையை சுத்தம் செய்து அதற்க்கான கூலியை வாங்குவதற்க்கு வரிசையில் நின்று வாங்கியவர் தனது 18 ஆவது வயதில் திறமைப் பெற்ற ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கராக (Computer Hacker) மாறினார். 

1997 ஆம் ஆண்டு இவரை யாஹூ (Yahoo) நிறுவனம் உள்கட்டமைப்பு பொறியாளராக பணியமர்த்தியது.  பின்பு இவரது பிறந்த நாளில், பிப்ரவரி 24, 2009 ஆம் ஆண்டு  வாட்ஸ் அப்ஸ் அப்பிளிகேஷனை அறிமுகப் படுத்தினார்.

திருபாய் அம்பானி

கடைசியாக ஆனால் மிகவும் குறிப்பாக, நமது இந்தியர், திருபாய் அம்பானி.  இன்று இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனம், ரிலயன்ஸ் இண்டஸ்ரிஸையை உருவாக்கியவர்.  இவர் ஒரு பள்ளி ஆசிரியருக்கு மகனாக பிறந்தவர்.  இவருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகள்.  இவர் சிறுவயதிலேயே ஒரு குவளை நிலக்கடலை எண்ணெயை மொத்த விலையில் கடனுக்கு வாங்கி அதை சில்லைறையாக விற்பார்.  இதனால் இவருக்கு கொஞ்சம் லாபம் கிடைத்தது.


வார இறுதி நாட்களில் பள்ளி விடுமுறையில் தன் கிராமத்தில் சிறு கடைகளை போட்டு விற்பனை செய்து தன் குடும்பத்திற்க்கு உதவி வந்தார்.

இவர் தனது 17 ஆவது வயதில் யேமன் நாட்டிற்க்கு வேலை வேண்டி குடிப்பெயர்ந்தார்.  அங்கு பொருட்களை பல இடங்களுக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார்.  அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்து இவர் வேலை செய்த நிறுவனம், ஷெல் பொருட்களின் (Shell Products) விநியோகஸ்தரராக ஆகியது.  இதனால் நிறுவனம், இவருக்கு எண்ணெய் நிரப்பும் நிலையத்தை மேற்பார்வையிடும் பணி பதவி உயர்வு கொடுத்தது.  அங்கு வேலை செய்து கொண்டிருந்த அம்பானி தான் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதாக அடிக்கடி கற்பனை செய்து கொண்டார்.  அதை பின்னாளில் நினைவாக்கியும் காட்டினார்.  

இந்தியாவிற்கு திரும்பிய பின்னர் அம்பானி அகமத் நகரில் ஒரு ஜவுளி ஆலையை நிறுவினார்.  இந்த ஆலை மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், இவர் மீது பங்கு சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டும் இருந்தது.  இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் பின்பு நிரூபிக்கப் படவில்லை. 

2007 ஆம் ஆண்டு வாக்கில் இவரது அம்பானி குடும்பத்திற்கு டாலர் 60 பில்லியன் சொத்து சொந்தமாகி, உலகத்திலேயே இரண்டாவது பெரிய பணக்கார குடும்பமாகியது.


பொதுவாக இப்படி பட்டவர்களின் வாழ்கை வரலாறுகளை படிக்கும் போது நமக்கும் ஒரு உத்வேகம் கிடைக்கிறது.  இவர்கள் அனைவரும் குடிசையிலிருந்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்.  ஆகையால் பணக்காரர்கள் ஆவது அல்லது அதிக பணம் சம்பாதிப்பது பாமரனுக்கும் சாத்தியம் என்று இவர்கள் மூலம் உண்மை ஆகிறது.  இதனுடன் இப்பகுதி நிறைவடைகிறது.  இதுப் பற்றி உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

Courtesy: The article was originally published by: yourstory.com
Image Courtesy: yourstory.com

0 comments:

Post a Comment