Monday 26 May 2014

Filled Under:

உலக கால்பந்து போட்டி: தகவல்கள்-1

இன்னும் சில வாரங்களில் தொடங்க போகும் உலக கால்பந்து போட்டியை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.  உலக கால்பந்து போட்டி, பெடரேஷன் இன்டர்னேஷனல் தி புட்பால் அசோசியேஷன் என்ற அமைப்பின் மூலம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகிறது.  இது இப்போது கால்பந்து ஆட்டத்திற்க்கு பெயர்போன பிரேசிலில் ஜுன் மாதம் 13 ஆம் தேதி தொடங்குகிறது.  உலக கால்பந்து போட்டி பற்றிய சில தகவல்களை தொடர்ந்து இந்த ‘தமிழ் இதழ்’ லில் காணலாம்.


முதல் உலக கால்பந்து போட்டி நடைப்பெற்ற ஆண்டு 1930.  இந்த போட்டி உருகுவே நாட்டில் நடத்தப்பட்டது.  மொத்தம் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன.  இதில் வெற்றி பெற்றதும் உருகுவே நாடுதான்.  முதல் போட்டி உருகுவேவில் நடத்தப் பட்டதற்க்கான காரணம், அப்போது 1924 மற்றும் 1928 ஆண்டுகளில் உருகுவே ஒலிம்பிக்கில் கால்பந்து போட்டியில் தங்க பதக்கங்களை வென்றிருந்தது. மேலும் அது தனது 100 வது சுதந்திரதினத்தை 1930 ஆம் ஆண்டு கொண்டாட இருந்தது.  இதனால் முதல் உலக கால்பந்து போட்டி உருகுவேவில் நடத்துவது என்பது தீர்மானமானது.

ஆனால் உருகுவே நாடு, தென் அமெரிக்காவில் இருந்ததால் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அப்போதைக்கு இருந்த போக்குவரத்தின் வசதி குறைவு காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க முடியவில்லை.  இதனால் மெத்தம் 13 நாடுகள் மட்டுமே பங்கு கொண்டன.

அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைப்பெற்ற உலக கால்பந்து போட்டியில் உருகுவே பங்கேற்கவில்லை.  உருகுவே ஐரோப்பிய நாடுகளுக்கு பதிலடியாக இந்த முடிவை எடுத்தது.  ஆனால் இதற்கு உருகுவே பணப்பற்றாகுறையை காரணமாக சொன்னாலும், ஐரோப்பிய நாடுகள் 1930 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் கலந்து கொள்ளாததே முதற் காரணமாக பட்டது.

இதனால் வெற்றி பெற்ற அணி அடுத்த போட்டியில் பதக்கத்தை தக்க வைக்க கலந்து கொள்ளாத முதல் மற்றும் கடைசி நாடாக உருகுவே வரலாற்றில் இடம் பெற்றது.

Image Courtesy: Wikipedia

0 comments:

Post a Comment