நெப்போலியன் ஹில் அவர்கள் எழுதி 1937 ஆம்
ஆண்டு வெளிவந்து சுமார் 7 கோடிகளுக்கும் அதிகமாக விற்பனையாகிய ’Think and Grow
Rich’ என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கமே ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக்
குவியுங்கள்’.
இந்த புத்தகத்தில் நெப்போலியன் ஹில், வாழ்க்கையில்
எந்த நிலையில் என்ன வேலையில் உள்ளவர்களும் பணக்காரர்கள் ஆவதற்க்கான தத்துவத்தை எடுத்துரைக்கிறார். சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஆய்வுகள் செய்து,
வாழ்க்கையில் வெற்றி பெற்று பணக்காரர்கள் ஆன அவரின் நெருங்கிய நண்பர்களின் வெற்றியின்
இரகசியங்களை எழுதியிருக்கிறார்.
நீங்கள் எப்படி 13 வழிகளை பின்பற்றி பணக்காரர்கள்
ஆகலாம் என்பது பற்றி ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இந்த புத்தகத்தின் மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்
பலர். இந்த புத்தகம் பணக்காரர் ஆனவர்களின்
வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. உலகிலுள்ள கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில்
ஒன்றாக இப்புத்தகம் பரிந்துரைக்க பட்டிருக்கிறது.
ஆசிரியரைப்
பற்றி
நெப்போலியன் ஹில் 1883 ஆம் ஆண்டு பிறந்த
அமெரிக்க எழுத்தாளர். இவர் தம் வாழ் நாளில்
பல பணக்காரர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.
அவ்வாறு தாம் கற்ற மற்றும் தாம் பின்பற்றிய வழிகளையே இந்த புத்தகத்தில் அவர்
எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் பிரபல தொழில்
அதிபர் அன்ரூ கார்னகி அவரின் உந்துதலின் பேரில் இந்த புத்தகத்தை எழுதினார். சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட வெற்றி பெற்றவர்களை
பேட்டி கண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டது.
அவர்களில் பலர் கோடீஸ்வரர்கள்.
புத்தகத்தைப்
பற்றி
- பெயர்: சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்
- ஆசிரியர்: நெப்போலியன் ஹில்
- பக்கங்கள்: 320 பக்கங்கள்
- விலை: Rs.123/-
0 comments:
Post a Comment