Wednesday, 19 February 2014

Filled Under: , , , , ,

மார்க்கெட்டிங் மாயாஜாலம்

தொழில்களையும் மார்க்கெட்டிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சந்தைப்படுத்துதலையும் என்றும் பிரிக்க முடியாது.  உங்களிடம் மிகச் சிறந்த தொழில் ஐடியா இருக்கலாம், அந்த தொழிலை ஆரம்பிக்க அதிக பணம் இருக்கலாம், ஆனால் உங்களிடம் உங்கள் பொருளையே சேவையையோ மக்களிடம் சென்று சேர்க்காத வரை நீங்கள் தொழிலில் இலாபம் ஈட்ட முடியாது.  மிகவும் சிறிய அளவில் ஆரம்பிக்கப்படும் பல தொழில்கள் அதிகமாக இலாபம் ஈட்டுவது இந்த மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்திதான். 


சந்தையில் போட்டியாளர்களை சமாளித்து மக்களிடம் நம் பொருள்களை எப்படி சேர்த்து அதிக இலாபம் ஈட்டுவது என்பது பற்றி சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ‘மார்க்கெட்டிங் மாயாஜாலம்’ என்ற புத்தகத்தில் மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.  நீங்கள் சிறுதொழில் நிறுவனராய் இருந்தாலும், மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிவோரானாலும், ஏதேனும் விதத்தில் நீங்கள் தொழிலில் சம்பந்தப் பட்டவரானாலும் இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  பெரும்பாலான மார்க்கெட்டிங் புத்தகங்கள் ஆங்கிலத்திலேயே வெளிவந்துள்ளன.  அனைவரும் எளிதில் புரிந்துக் கொள்ளும் படியாக எளிய தமிழில் இந்த புத்தகம் இருக்கிறது.  

ஆசிரியரைப் பற்றி
இப்புத்தகத்தின் ஆசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ. படித்துள்ளவர்.  மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.  கவின்கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM சென்னை, ITM சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ், கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார். 


புத்தகத்தைப் பற்றி
  • பெயர்: மார்க்கெட்டிங் மாயாஜாலம்
  • ஆசிரியர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
  • பக்கங்கள்: 100 பக்கங்கள்
  • விலை: Rs.100/- (டெலிவரி சார்ஜ் தனி) (மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கலாம்)

குறிப்பு: புத்தகம் வேண்டுவோர் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்து படிவத்தை நிரப்பியும் பெறலாம்.

0 comments:

Post a Comment