Friday, 21 February 2014

Filled Under: , , ,

சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்

மருத்துவப் படிப்புகள் இல்லாத காலத்திலேயே நம் சித்தர்கள் நமக்கு வரும் நோய்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு இயற்கை முறையில் சரி செய்து கொள்வது பற்றியும் ஓலைச் சுவடிகளில் பதிந்து விட்டு போயிருக்கிறார்கள்.  ஆங்கில ஆதிக்கம் நமது பாரம்பரியத்தில் ஏற்படுத்திய தாக்கத்தில் அழிந்து போன அல்லது அழிந்துக் கொண்டு வரும் மற்றைவையில் நமது சித்த வைத்தியமும் அடங்கும்.

எதற்கு எடுத்தாலும் நாம் ஆங்கில மருத்துவமனைகளுக்கு ஓடுவது, நமது பாட்டி வைத்தியம் எனப்படும் கை வைத்தியம் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்லாததால் வந்த நிலைமை.  அவ்வகையில் டாக்டர். அருண் சின்னையா அவர்கள் எழுதிய ‘சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்’ என்ற புத்தகம் மனித உடலில் இருக்கும் ஒன்பது மண்டலங்கள், ஏற்படும் நோய்கள், அந்த நோய்களுக்கான இயற்கையான எளிதாக மூலிகை மருந்துகள் பற்றியிம் தெளிவாக விளக்குகிறது.

அம்மருந்துகளை எப்படி சாப்பிடுவது, சாப்பிடும் கால அளவு, அவ்வாறு முறைப்படி சாப்பிட்டால் எவ்வளவு நாளில் நோய்கள் குணமாகும் என்பது பற்றியும் விளக்கியிருக்கிறார்.  இது ஒரு எளிமையான முழுமையான மற்றும் ஒவ்வோரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

ஆசிரியரைப் பற்றி
நூலாசிரியர் டாக்டர் அருண் சின்னையா, மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி. பட்டமும், இயற்கை மருத்துவத்தில் டிப்ளமோ சான்றிதழும் பெற்றவர். மருத்துவப் பணியிலும், மருந்துகள் செய்முறையிலும் பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சென்னையில் உள்ள தன்னுடைய ஆதவன் இயற்கை மருத்துவ ஆய்வு மையத்தின் மூலம் ஆண்மைக் குறைவு, ஆஸ்துமா, நீரிழிவு நோய், உடல் பருமன், மாதவிலக்குக் கோளாறுகள் போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து வருகிறார். 


புத்தகத்தைப் பற்றி 
  • பெயர்: சித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம்
  • ஆசிரியர்: டாக்டர் அருண் சின்னையா
  • பக்கங்கள்: 200 பக்கங்கள்
  • பதிப்பாளர்: நலம்
  • விலை: Rs.200/- (வாங்க விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள லிங்கைப் கிளிக் செய்து புத்தகத்தை வாங்கி கொள்ளலாம்)
குறிப்பு: புத்தகம் வேண்டுவோர் மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்து படிவத்தை நிரப்பியும் பெறலாம்.

0 comments:

Post a Comment