Monday, 28 April 2014

,

இந்தியாவில் பெருகும் தொழில் நிறுவனங்கள்

தொழில்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் (Minstry of Corporate Affiars) விபரங்கள் அடிப்படையில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் நிறுவனங்கள் பதிவுப் பெற்றிருக்கின்றன.  இது இந்தியாவில் எப்போதும் இல்லாத எண்ணிக்கை.

Image Credit: Trak.in

இந்த விபரத்தின் அடிப்படையில் 98,473 நிறுவனங்கள் நிறுவப்பெற்று ரூபாய் 39,000 கோடி மூலதனம் திரட்டப் பட்டிருக்கிறது.  இவற்றில் வணிக சேவைகள் தரும் நிறுவனங்கள் அதிக அளவில், 32,254 புதியதாய் நிறுவப்பட்டிருக்கின்றன.  இவற்றில் ஐ.டி. நிறுவனங்களும் அடங்கும்.

இவற்றிற்க்கு அடுத்த படியாக உற்பத்தி தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் 14,996 புதியதாய் பதியப் பெற்றிருக்கின்றன.  மூன்றாவது இடத்தில் இருக்கும் துறை ரியல் எஸ்டேட், 10,752 நிறுவனங்கள் புதியதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் 10646 மற்றும் 10335 அளவில் அடுத்தடுத்து உருவாகியிருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் மஹாராஷ்டிராவில் 2,83,588 அதிக அளவில் பதியப் பெற்றிருக்கின்றன.  அடுத்ததாக டில்லியில் 2,61,456 நிறுவனங்களும் மேற்கு வங்காளத்தில் 1,81,182 நிறுவனங்களும் பதியப் பெற்றிருக்கின்றன.

கடந்த மார்ச் 2014 ஆண்டு வரை பதியப் பெற்ற 13,94,819 நிறுவனங்களில் 9,52,433 மட்டுமே செயல்பட்டுகொண்டிருக்கின்றன.  இவற்றில் டில்லியில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 1,89,441, மஹாராஷ்டிராவில் 1,88,768 உம், மேற்கு வங்காளத்தில் 1,34,292 நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. 

இந்த நிறுவனங்களில் 65% பத்து லட்சம் அல்லது அதற்கும் குறைவான மூலதனம் கொண்டுள்ளன.  இவற்றில் 2% மட்டுமே பத்து கோடிக்கும் அதிகமான மூலதனம் கொண்டுள்ளன.  மேலும் இவற்றில் 24 மாதங்களுக்கும் மேலாக தப்பி பிழைக்கும் நிறுவனங்கள் மிக குறைவு.

மேலும் கடந்த ஆண்டில் 216 அந்நிய நிறுவனங்கள் மட்டுமே பதிவுப் பெற்றிருக்கின்றன.  இந்த எண்ணிக்கைகள் மிகவும் வரவேற்க்க தகுந்தவை. 

Courtesy: The article was originally published by: Trak.in
Image Courtesy: Trak.in

Saturday, 26 April 2014

, , ,

தொழில் நுட்பம் மூலம் கோடீஸ்வரர்கள் ஆன 10 பேரின் பட்டியல்

பிரபல பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes) கூற்றின் படி இந்த உலகத்தின் மொத்தம் 1645 கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.  இவற்றில் 268 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் புதிதாக இணைந்தவர்கள்.  இதில் 42 பெண் கோடீஸ்வரர்களும் அடக்கம்.

இந்த கோடீஸ்வரர்களில் தொழில் நுட்பத்தை. அதாவது கம்ப்யூட்டரின் வன்பொருள் மற்றும் மென்பொருள் அல்லது அதை சார்ந்த இணையதளங்களின் நுட்பத்தை பயன்படுத்தி இந்த நிலைக்கு உயர்ந்தவர்களில் 10 பேர்களின் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.


பில் கேட்ஸ்

இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பவர் எல்லோருக்கும் தெரிந்த பில் கேட்ஸ்தான்.  அவர் எவ்வாறு இந்த இடத்தை பிடித்தார், எல்லாம் கம்ப்யூட்டர்தான்.  கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ஆப்ரேடிங் சிஸ்டமான விண்டோஸ் இவரது கண்டுபிடிப்பு.  இப்போது இவரின் கண்டுபிடிப்பில் தான் உலகமே (கிட்டத்தட்ட) இயங்கி கொண்டிருக்கிறது. இவரது சொத்தின் மதிப்பு டாலர் 77.45 பில்லியன் (அட! நீங்களே கணக்கு பண்ணி கோங்க)

லாரி எலிசன்

இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நம்மில் பலருக்கு அதிகம் பரிச்சயமில்லாத லாரி எலிசன்.  பெற்றோர்களால் தனது உறவினருக்கு தத்து கொடுக்கப் பட்டவர்.  இவர் கண்டுபிடித்தது ஆரக்கிள் என்னும் மென்பொருள். இவரது சொத்தின் மதிப்பு டாலர் 49.50 பில்லியன் (என்ன கால்குலேட்டர எடுத்துடீங்களா?)

ஜெப் பிசோஸ்

அடுத்தது ஜெப் பிசோஸ்.  என்ன! பேரே வாயில நுழைய மாட்டேங்குதா?  நானே ஒரு குத்து மதிப்பாதான் எழுதியிருக்கேன்.  இவர் தான் அமேசான் என்கிற இ-வணிக தளத்தை அறிமுகப் படுத்தியவர்.  இன்று பல இ-வணிக தளங்களிற்க்கு இவர் அறிமுகப் படுத்திய அமேசான் தான் மாடல்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 30 பில்லியன் (அட போங்கப்பா!)

லாரி பேஜ்

அடுத்தது நம்ம லாரி பேஜ்.  என்னடா இது நம்ம லாரி பேஜா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இவர் தான் நம்ம (!) எல்லாவற்றையும் கண்டுபிடுத்துதரும் கூகிளை கண்டுபிடித்தவர்களில் ஒருவர்.  இவர பத்தி அதிகமா சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.  அது உங்களுக்கே தெரியும்.  இவரின் சொத்து மதிப்பு டாலர் 29.60 பில்லியன் (ஓ.கே!)

செர்ஜி பிரின்

கூகிளை கண்டுபிடித்ததில் ஒருவர் இங்கே இருக்கிறார்.  அவரை பற்றி சொல்லியாயிற்று. இன்னோருவர் யாரென்று நீங்கள் கவுண்டமணி அவர்கள் மாதிரி கேட்பது புரிகிறது.  நானும் அவர்தான்ங்க இவருன்னு சொல்ல மாட்டேன்.  அவர்தான் செர்ஜி பிரின்.  இவர் ஒரு ரஷ்யர்.  அமெரிக்காவிற்க்கு குடிபெயர்ந்தவர்களில் ஒருவர்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 29.20 பில்லியன்.

மார்க் ஜுக்கர்பெர்க்

இவரை பற்றி சொல்லவில்லை என்றால் தான் தப்பு.  இன்று நீங்களும் நானும் சிவனேன்னு உட்கார்ந்திருக்கிற பேஸ்புக்கை கண்டுபிடித்தவர்தான் இவர் (நல்ல கண்டுபிடிச்சாரு!).  இவருடைய சொத்தின் மதிப்பு டாலர் 26.20 பில்லியன் (அதுவும் குறுகிய காலத்தில்).

ஸ்டீவ் பால்மர்

நமது பட்டியலில் ஏழாவதாக வருபவர் ஸ்டீவ் பால்மர்.  இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1980 ஆம் ஆண்டு 30 ஆவது பணியாளராக சேர்ந்தார்.  இவரின் சொத்து மதிப்பு டாலர் 20.2 பில்லியன்.

மைக்கேல் டெல்

டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கியவர் மைக்கேல் டெல்.  இவரும் அமெரிக்காவிற்க்கு குடிபெயர்ந்து கோடீஸ்வரராக உயர்ந்தவர்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 17.6 பில்லியன்.

பால் ஆலன்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.  இவர் மைக்ரொசாப்ட் நிறுவனத்தின் மூன்றாவது முக்கிய நபர்.  இவரின் சொத்தின் மதிப்பு டாலர் 15.9 பில்லியன்.

லாரன்ஸ் பவல் ஜாப்ஸ் மற்றும் குடும்பத்தினர்

என்ன மாயாண்டி குடும்பத்தினர் ஞாபகத்திற்க்கு வருகிறார்களா?  இவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் மனைவி.  ஒருவேளை ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருந்தால் இந்த பட்டியலில் முதலிருக்கும் இடங்களில் இருந்திருப்பார்.  இவரின் சொத்து மதிப்பு டாலர் 14.2 பில்லியன்.

இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி கோடீஸ்வரர்கள் ஆனவர்கள்.  இவர்கள் கடந்து வந்த பாதையும் அவ்வளவு எளிதல்ல.  பல போராட்டங்களை தாண்டி இந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள்.  இவர்களை பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

குறிப்பு: இந்த சொத்து பட்டியலை வெளியிட்டதன் மூலம் இவர்கள் யாரும் எந்த தேர்தலிலும் வேட்பாளராக நிற்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


Courtesy: The article was originally published in: Trak.in
Image Courtesy: Trak.in

Wednesday, 23 April 2014

, , ,

மைக்ரோசாப்ட் வழங்குகிறது இலவச விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டம்

சான் பிரான்சிஸ்கோவில் நடைப் பெற்ற மைக்ரோசாப்டின் (Microsoft) ஒரு நிகழ்ச்சியில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.  அதாவது, ஒன்பது அங்குலத்திற்க்கும் குறைவான திரைக் கொண்ட எந்த ஒரு சாதனத்திலும் (மெபைல் போன் மற்றும் டப்டல்ஸ்) (Mobiles and Tablets) இந்த விண்டோஸ் 8 ஆப்ரேடிங் சிஸ்டம் இலவசமாக வழங்கப் படும்.


இதுவரை விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தை விலைக்கு கொடுத்தே பழகிய மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.  ஆனால் இந்த இலவசம் வன்பொருள் தயாரிக்கும் நிருவனங்களுக்கே பொருந்தும்.  விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வன்பொருள்களில் இது இலவசமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு கொடுக்கப் படும்.  இதனால் இந்த வன்பொருள்களின் விலை குறையுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  பொதுவாக விண்டோஸ் நோக்கியா மொபைல்களில் தான் அதிகம் பயன் படுத்தப் படுகிறது.

இது விண்டோஸ் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகலாம்.  ஏனென்றால் மொபைல்களில் பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு ஆப்ரேடிங் சிஸ்டம் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவது பயன் படுத்தப்படுகிறது.  இதனால் ஆண்டிராய்டு மொபைல்கள் அதிகமாக விற்பனை ஆவதை அனைவரும் அறிவொம்.  மேலும் இதனால் பல அப்ளிகேஷன்கள் இந்த ஆண்டிராய்டு தளத்தை பயன்படுத்தி உருவாக்கப் பட்டு பல சிறு நிறுவனங்களும் இவற்றை பயன் படுத்தும் மக்களும் பயன்ப் பெற்றுள்ளனர்.

கடைசியாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஒப்பன் சோர்ஸ் (Open Source) என்று சொல்லப்படுகிற இலவச மென்பொருள்களின் பயன்பாடு மற்றும் இவற்றின் பலனை அறிந்திருக்கிறது.


Courtesy (The content was originally published by): Trak.in
Image Credit: Wikipedia

Tuesday, 22 April 2014

, , ,

தொழில் முனைவோருக்கான 5 கட்டளைகள்

ஒவ்வொரு தொழில் முனைவோரும் தங்களுக்கான கட்டளைகளை தாங்களே வகுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த கட்டளைகள் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில் வெற்றி பெற உதவும்.  பொதுவாக இந்த கட்டளைகளை எவ்வாறு தமக்கு தாமே இட்டுக் கொள்வது என்பது கடினமான ஒன்று,  அதனால் இங்கே 5 கட்டளைகளை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கட்டளை 1: பின்பற்றாதீர்கள், தலைமை தாங்குங்கள்

தொழில் முனைவோருக்கு என்று எந்த நிபந்தனைகளும் இல்லை.  நீங்கள் யாருடைய கட்டளையையும் பின்பற்ற தேவையில்லை.  நீங்களே நிபந்தனைகளை உருவாக்குகிரீர்கள், நீங்களே அவற்றை உடைக்கவும் செய்கிரீர்கள்.  நீங்கள் யாரையும் பின்பற்றாதீர்கள்.  உங்களை நீங்களே தலைமை தாங்குங்கள்.  உங்களுக்கு தேவையான வெற்றியை நீங்களே முடிவேடுங்கள்.

கட்டளை 2: நீண்டகாலத்தைப் பற்றி எண்ணுங்கள்

எந்த ஒரு தொழிலுமே வெற்றியடைய அதற்க்கான காலம் இருக்கிறது.  எந்த ஒரு தொழிலுமே ஆரம்பித்த உடனேயே வெற்றிப் பெற்று விடாது.  ஒரே இரவில் நிலவை எட்டி பிடிப்பது அல்லது ஒரு பாடலில் பணக்காரர் ஆகிவிடுவது நடைமுறையில் சாத்தியமில்லை.  உங்களின் விடாமுயற்சியும் பொறுமையும் தான் உங்கள் வெற்றிக்கு துணை நிற்கும்.  சைனாவில் ஒரு பழமொழி சொல்கிறது, ஒரு தொழிலை முழுமையாக உருவாகுவதற்கு 1000 நாட்கள் ஆகும் என்று.  இதை எப்பொதும் நினைவில் கொள்ளவும்.

கட்டளை 3: உங்களுக்கு வார ஓய்வு நாட்கள் கிடையாது

தொழில் முனைவோருக்கு ஓய்வு என்பதே கிடையாது.  விடுமுறை என்பது, தாங்கள் வாழும் வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற விரும்பும் மக்களுக்கு தான் தேவைப்படும்.  இது பிரபலமான சேத் கோடின் அவர்கள் சொன்னது.  தொழில் முனைவோர் தங்களுக்கான வாழ்க்கையை தாங்கள் செய்யும் தொழிலிருந்தே உருவாக்கி கொள்கிறார்கள்.  அவர்களுக்கென்று தனியாக விடுமுறை என்பது கிடையாது.  தாங்கள் வாழும் வாழ்க்கையை விரும்பி வாழ்பவர்களுக்கு அல்லது தாங்கள் விரும்பும் வாழ்கையை வாழ்பவர்களுக்கு விடுமுறை என்பது தேவையில்லை.


கட்டளை 4: மார்க் ஜுக்கர்பெர்க் உடன் உங்களை ஒப்பிடாதீர்கள்

உங்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.  பெரும்பாலும் நீங்கள் ஏமாற்றமும் விரக்தியும் அடைய நேரிடலாம்.  மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் ஒரு தனிபிறவி.  அவருடைய வெற்றியை உங்களுடைய வெற்றியுடன் ஒப்பிடாதீர்கள்.  நீங்கள் தனித்திறமை வாய்ந்தவர்.  அவரை விட நீங்கள் பல மடங்கு உயரலாம்.  பெரும்பாலும் நீங்கள் உங்களை பலருடன் ஒப்பிட்டு பார்ப்பதினால் அவர்களுடைய வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.  உங்களுக்கான வாழ்க்கையை நீங்களே தேர்ந்தேடுங்கள்.  உங்களுக்கென்று ஒரு வெற்றி காத்திருக்கிறது.   

கட்டளை 5: எப்போதும் திருப்தி அடையாதீர்கள்

எப்போது நீங்கள் உங்கள் தொழிலில் திருப்தி அடைகிறீர்களே அப்போதே உங்கள் தொழிலுக்கான வெளி வாயிலை திறந்து விடுகிறீர்கள்.  ஒவ்வொரு துறையிலும் மேம்பாடுகள் அதிகரிக்கும் இந்த காலத்தில் போதும் என்ற சொல்லே உங்கள் தொழிலுக்கு புண் செய்யும் சொல்லாகும். 


1900 ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவில் குளிர் சாதனம் இல்லாத காலத்தில், பல தொழில் முனைவோர் ஐஸ் கட்டிகளை வெளியிலிருந்ந்து வெட்டியெடுத்து வந்து வீடுகளுக்கும், ஹோட்டல்களுக்கும் மேலும் சில நிறுவனங்களுக்கும் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்கள்.  அப்போது ஒரு வருடத்திற்க்கு பத்து மில்லியன் (ஒரு கோடி) பவுண்டுகள் அதாவது சுமார் 45 லட்சம் கிலோ ஐஸ் விற்பனையாகியது.  இதனால் பல மடங்கு லாபம் அடைந்த தொழிலதிபர்கள் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்கள் மேலும் சிந்திக்கவில்லை செயலாற்றவில்லை.  ஒரு நாள், ஒருவர் குளிர்சாதனப் பெட்டியை அறிமுகப் படுத்தினார்.  பத்து மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தொழில் ஓய்வுப் பெற்று கொண்டது.  அதற்கு பிறகு நடந்தவை வரலாறு.

Courtesy (The content was originally published by): Trak.in
Image Credit: Pixabay.com & Brain Solis

Monday, 21 April 2014

, , ,

மைக்ரோசாப்ட் வென்சர்ஸ் அறிமுக படுத்துகிறது ஜம்ஸ்டார்ட், தொழில் முனைவோருக்கு இலவசமாக ஆலோசனை வழங்கும் ஒரு துரித அழைப்பு எண்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான மைக்ரோசாப்ட் வென்சர்ஸ் (Microsoft Ventures), ஜம்ஸ்டார்ட் (JumpStart) என்ற ஹாட்லைன் அதாவது துரித அழைப்பு எண்ணை (Toll Free Number) அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த அழைப்பு எண்ணை பயன்படுத்தி தொழில் முனைவோர் தங்களது தொழில் சம்பந்தமான சந்தேகங்களை கேட்டு ஆலோசனைகளை பெறலாம். அதுவும் இலவசமாக. 


இந்த எண் 1 (800) 200-2114 ஒரு டோல் ஃப்ரி அதாவது கட்டணமில்லா எண் ஆகும். வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த எண்ணை தொடர்பு கொண்டு, தொழில் முனைவோர்கள் தங்களது தகவல்களை பெறலாம்.  நன்றாக பயிற்சி கொடுக்கப் பட்ட திறமை வாய்ந்த நிபுணர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள்.

இது மிகவும் வரவேற்க தகுந்ததாகும்.  தொழில் முனைவோர் தங்களின் சந்தேகங்களை போக்கி கொள்ள மிகவும் அனுபவமுள்ள தொழிலதிபர்களை நாட வேண்டியுள்ளது.  மேலும் ஆலோசனைகளை பெற செலவழிக்க வேண்டியுள்ளது.  இந்த முயற்சி மூலம் பல குறு மற்றும் சிறு தொழில் புரிவோர்கள் மிகவும் பயன் பெறுவார்கள்.  நன்றி மைக்ரோசாப்ட் வென்சர்ஸ்.

Courtesy The content was originally published by: Trak.in
Image Courtesy: Trak.in

Saturday, 19 April 2014

, , , , ,

Dineout.co.in யை கையகப்படுத்தியது Timescity.com

Timescity.com  ஒரு உணவு வழிகாட்டி மற்றும் உணவு விடுதிகளை தரம் பிரித்து விமர்சனம் செய்யும் ஒரு ஆன்லைன் இணைய தளம்.  சமீபத்தில் இந்த நிறுவனம் Dineout.co.in என்ற, டில்லி மற்றும் மும்பையில் உள்ள உணவு விடுதிகளில் இருக்கைகளை பதிவு செய்யும் சேவையை செய்து வரும் இணையதள நிறுவனத்தை கையகப்படுத்தியது.  இதன் மூலம் Timescity.com தங்களது சேவையை விரிவுப் படுத்தி உள்ளது.


Timescity.com இணையதளம் கடந்த 12-18 மாதங்களில் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.  இந்த இணையதளம் 20 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது.  Dineout.co.in யை கையகப் படுத்தியதன் மூலம், இது மேலும் பல பார்வையாளர்களை வரவேற்க்கும் என்று நம்பப்படுகிறது.

Dineout.co.in இணையதளம் டில்லி மற்றும் மும்பையில் உள்ள உணவு விடுதிகளில் இருக்கைகளை ஆன்லைன் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ பதிவு செய்யும் சேவையை வழங்கி வருகிறது.  அவ்வாறு பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியும் கொடுக்கிறது.  இது சுமார் 2 லட்சம் பதிவுகளை இதுவரை செய்திருக்கிறது.

இந்த சேவையில் ஈடுபட்டிருக்கும் Zomato.com இணையதளம், இந்திய சந்தையில் மிக அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது.  இது மாதத்திற்க்கு சுமார் 50 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது.  இவர்களுடைய மொபைல் அப்பிளிகேஷன் ஆன்ராய்டு மற்றும் iOS இல் சுமார் 20 லட்சம் தடவை பதிவிறக்கம் செய்யப் பட்டிருக்கிறது.  மேலும் Burrp.com இணையதளம் இந்த சேவையில் இரண்டாவதாக உள்ளது.

Dineout.co.in இணையதளத்தை கையகப் படுத்தியதன் மூலம், Timescity.com இந்த இரண்டு முன்னனியில் இருக்கும் நிறுவனங்களிடம் தனது போட்டியை அதிகப்படுத்தும்.

The content was originally published: ஆதாரம்: Trak.in

Thursday, 17 April 2014

, , , , ,

மாத்தி யோசி: Shycart.com

எந்த ஒரு தொழிலின் அடிப்படையே அதற்க்கு உண்டான தேவையே.  தேவையின் அடிப்படையிலேயே ஒரு தொழிலின் அல்லது ஒரு பொருளின் வெற்றி நிர்ணியக்கப் படுகிறது.  மனிதனின் தேவைகள் பல. அவற்றை நாம் சரியாக இனம் கண்டுக் கொண்டால், நமது தொழிலுக்கான ஐடியா கிடைத்து விடும்.  நமது தொடர் சேவையினால் அது பிறகு வெற்றிப் பெருகிறது.


இப்போது மக்கள் பலப் பொருள்களை ஆன்லைனில் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  அவற்றுள் பலவற்றை மக்கள் நேரடியாக கடைகளில் சென்று வாங்குவதற்க்கு கூச்சப் படிவார்கள்.  அவ்வாறு வாங்கும் பொருள்களில், காண்டம் என்று சொல்லப் படுகிற கருத்தடை சாதனங்கள், பெண்களுக்கான மாதவிடாய் பொருள்கள் மிக முக்கியமானவை.  இவற்றை கருத்தில் கொண்டு, உருவாக்கப் பட்டுள்ள ஆன்லைன் ஷாப்பிங் தான் Shycart.com

இந்நிறுவனம் இது தவிர, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள், கருத்தரித்த அல்லது குழந்தைப் பெற்ற தாய்மார்களுக்கான பொருள்கள் மற்றும் உடலுறவு சம்மந்தமான பொருள்களையும் விற்பனை செய்கிறார்கள்.

இவர்களுடைய ஒரு சிறப்பு அம்சம், இவர்கள் இந்த பொருள்களை பேக்கிங் செய்யும் முறை.  அதனால் வாங்குபவர்கள் கவலை கொள்ள தேவையில்லை.  மற்றவர்களால் நாம் என்ன பொருள் வாங்குகிறோம் என்று தெரியாதபடி பொருள்களை பேக்கிங் செய்து டெலிவரி செய்கிறார்கள். 


பெரும்பாலான பொருள்களை ஆன்லைனில் வாங்கும் பழக்கம் பெருகுகிற இந்த காலக் கட்டத்தில் தொழில் தொடங்க விரும்புவோர் அல்லது ஏற்கனவே தொழில் செய்வோர், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய இந்த மாதிரி மாற்றி யோசித்தால் பலன் பெறலாம்.

ஆதாரம்: Trak.in 
Image Courtesy: Shycart.com
The content was originally published by Trak.in