Tuesday 22 April 2014

Filled Under: , , ,

தொழில் முனைவோருக்கான 5 கட்டளைகள்

ஒவ்வொரு தொழில் முனைவோரும் தங்களுக்கான கட்டளைகளை தாங்களே வகுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த கட்டளைகள் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில் வெற்றி பெற உதவும்.  பொதுவாக இந்த கட்டளைகளை எவ்வாறு தமக்கு தாமே இட்டுக் கொள்வது என்பது கடினமான ஒன்று,  அதனால் இங்கே 5 கட்டளைகளை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கட்டளை 1: பின்பற்றாதீர்கள், தலைமை தாங்குங்கள்

தொழில் முனைவோருக்கு என்று எந்த நிபந்தனைகளும் இல்லை.  நீங்கள் யாருடைய கட்டளையையும் பின்பற்ற தேவையில்லை.  நீங்களே நிபந்தனைகளை உருவாக்குகிரீர்கள், நீங்களே அவற்றை உடைக்கவும் செய்கிரீர்கள்.  நீங்கள் யாரையும் பின்பற்றாதீர்கள்.  உங்களை நீங்களே தலைமை தாங்குங்கள்.  உங்களுக்கு தேவையான வெற்றியை நீங்களே முடிவேடுங்கள்.

கட்டளை 2: நீண்டகாலத்தைப் பற்றி எண்ணுங்கள்

எந்த ஒரு தொழிலுமே வெற்றியடைய அதற்க்கான காலம் இருக்கிறது.  எந்த ஒரு தொழிலுமே ஆரம்பித்த உடனேயே வெற்றிப் பெற்று விடாது.  ஒரே இரவில் நிலவை எட்டி பிடிப்பது அல்லது ஒரு பாடலில் பணக்காரர் ஆகிவிடுவது நடைமுறையில் சாத்தியமில்லை.  உங்களின் விடாமுயற்சியும் பொறுமையும் தான் உங்கள் வெற்றிக்கு துணை நிற்கும்.  சைனாவில் ஒரு பழமொழி சொல்கிறது, ஒரு தொழிலை முழுமையாக உருவாகுவதற்கு 1000 நாட்கள் ஆகும் என்று.  இதை எப்பொதும் நினைவில் கொள்ளவும்.

கட்டளை 3: உங்களுக்கு வார ஓய்வு நாட்கள் கிடையாது

தொழில் முனைவோருக்கு ஓய்வு என்பதே கிடையாது.  விடுமுறை என்பது, தாங்கள் வாழும் வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற விரும்பும் மக்களுக்கு தான் தேவைப்படும்.  இது பிரபலமான சேத் கோடின் அவர்கள் சொன்னது.  தொழில் முனைவோர் தங்களுக்கான வாழ்க்கையை தாங்கள் செய்யும் தொழிலிருந்தே உருவாக்கி கொள்கிறார்கள்.  அவர்களுக்கென்று தனியாக விடுமுறை என்பது கிடையாது.  தாங்கள் வாழும் வாழ்க்கையை விரும்பி வாழ்பவர்களுக்கு அல்லது தாங்கள் விரும்பும் வாழ்கையை வாழ்பவர்களுக்கு விடுமுறை என்பது தேவையில்லை.


கட்டளை 4: மார்க் ஜுக்கர்பெர்க் உடன் உங்களை ஒப்பிடாதீர்கள்

உங்களை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.  பெரும்பாலும் நீங்கள் ஏமாற்றமும் விரக்தியும் அடைய நேரிடலாம்.  மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் ஒரு தனிபிறவி.  அவருடைய வெற்றியை உங்களுடைய வெற்றியுடன் ஒப்பிடாதீர்கள்.  நீங்கள் தனித்திறமை வாய்ந்தவர்.  அவரை விட நீங்கள் பல மடங்கு உயரலாம்.  பெரும்பாலும் நீங்கள் உங்களை பலருடன் ஒப்பிட்டு பார்ப்பதினால் அவர்களுடைய வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.  உங்களுக்கான வாழ்க்கையை நீங்களே தேர்ந்தேடுங்கள்.  உங்களுக்கென்று ஒரு வெற்றி காத்திருக்கிறது.   

கட்டளை 5: எப்போதும் திருப்தி அடையாதீர்கள்

எப்போது நீங்கள் உங்கள் தொழிலில் திருப்தி அடைகிறீர்களே அப்போதே உங்கள் தொழிலுக்கான வெளி வாயிலை திறந்து விடுகிறீர்கள்.  ஒவ்வொரு துறையிலும் மேம்பாடுகள் அதிகரிக்கும் இந்த காலத்தில் போதும் என்ற சொல்லே உங்கள் தொழிலுக்கு புண் செய்யும் சொல்லாகும். 


1900 ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவில் குளிர் சாதனம் இல்லாத காலத்தில், பல தொழில் முனைவோர் ஐஸ் கட்டிகளை வெளியிலிருந்ந்து வெட்டியெடுத்து வந்து வீடுகளுக்கும், ஹோட்டல்களுக்கும் மேலும் சில நிறுவனங்களுக்கும் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்கள்.  அப்போது ஒரு வருடத்திற்க்கு பத்து மில்லியன் (ஒரு கோடி) பவுண்டுகள் அதாவது சுமார் 45 லட்சம் கிலோ ஐஸ் விற்பனையாகியது.  இதனால் பல மடங்கு லாபம் அடைந்த தொழிலதிபர்கள் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்கள் மேலும் சிந்திக்கவில்லை செயலாற்றவில்லை.  ஒரு நாள், ஒருவர் குளிர்சாதனப் பெட்டியை அறிமுகப் படுத்தினார்.  பத்து மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தொழில் ஓய்வுப் பெற்று கொண்டது.  அதற்கு பிறகு நடந்தவை வரலாறு.

Courtesy (The content was originally published by): Trak.in
Image Credit: Pixabay.com & Brain Solis

0 comments:

Post a Comment