பொதுவாக சம்பளதாரர்களுக்கு வரியை சேமிப்பது ஒரு முக்கியமாக விஷயமாக இருக்கிறது. எவ்வாறு வரி கட்டாமல் இருப்பது என்பது ஒவ்வொருவரின்
தலையாயப் பிரச்சனையாக இருக்கிறது. அதனால்
பெரும்பாலும் அவசரகதியில் பிறர் சொல்லும் ஏதோ ஒரு வரி சேமிக்கும் திட்டத்தில் முதலீடு
செய்து விடுகின்றனர். பின்பு அவ்வாறு முதலீடு
செய்த திட்டம் சரியான இலாபம் ஈட்டாமல் சேமித்த வரியை விட அதிக அளவில் நஷ்டம் அடைகின்றனர். அவ்வாறு நஷ்டம் அடையாமல் மேலும் வரியை கணிசமான அளவில்
சேமிக்க ஒரு முக்கியமான திட்டத்தை இங்கு நாம் காணலாம்.
பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) பங்குச்
சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் (ELSS)
பரஸ்பர நிதி பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் அல்லது ELSS (Equity
Linked Savings Scheme) என்று சொல்லப் படுகிற முதலீடு மிகவும் இலாபம் தரக்கூடியதாகவும்
வரியை சேமிக்கவும் உதவுகிறது. இந்த மூதலீட்டீற்க்கு
வருமான வரி சட்டத்தின் 80C கீழ் வருடத்திற்க்கு
ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் வரை வரி விலக்கு
உண்டு.
வருட வரம்பு (Lock-in Period)
இத்திட்டம் குறைந்த லாக் இன் (Lock-in) பீரிய்டு கொண்டது. அதாவது இத்திட்டத்தில் முதலீடு செய்தால் 3 வருடங்களுக்கு
இதில் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாது.
ஆனால் இத்திட்டம் மற்ற வரி சேமிப்பு திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி
(PPF-15 வருடங்கள்), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC-5 வருடங்கள்) மற்றும் FD (5 வருடங்கள்)
விட குறைந்த வருட வரம்பைக் கொண்டது. இதனால்
உங்களுக்கு பணம் தேவைப்படும் போது 3 வருடங்களுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் பணத்தை
இத்திட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
அதிக இலாபம்
ELSS திட்டத்தில் முதலீடு செய்தால் மற்ற வரி சேமிப்பு திட்டங்களை விட அதிக
இலாபம் ஈட்டலாம். உதாரணத்திற்க்கு PPF ல் சராசரியாக
வருடத்திற்க்கு 8-9% சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. NSC 7-8% சதவிகிதம் மற்றும் FD ல் சராசரியாக வருடத்திற்க்கு
6-7% சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. ஆனால்
ELSS திட்டம் வருடத்திற்க்கு சராசரியாக 12 முதல் 15 சதவிகிதம் வருமானம் தரக்கூடியது.
உதாரணத்திற்க்கு இத்திட்டத்திங்களின் மூலமாக PPF லாக் இன் பீரிய்டு ஆன 15 வருடத்தை
கணக்கில் கொண்டு வருமானத்தை கணக்கிடுவோம்.
மாதாந்திர முதலீடு – Rs.5000/-
முதலீட்டு வருடங்கள் – 15 வருடங்கள்
PPF மற்றும் NSC – 8% சதவிகித வட்டியில் 15 வருடங்களுக்கு இலாபம் - Rs.16,29,127/-
FD – 7% சதவிகித வட்டியில் 15 வருடங்களுக்கு இலாபம் - Rs.15,07,741/-
ELSS – 12% சதவிகித வட்டியில் 15 வருடங்களுக்கு இலாபம் - Rs.22,36,783/-
ELSS திட்டம் கடந்த 15 வருடங்களில் சராசரியாக வருடத்திற்க்கு 15% சதவிகித இலாபம்
கொடுத்திருக்கிறது. அதாவது மாதத்திற்க்கு
Rs.5000/- சுமார் 15 வருடங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்திருந்தால் 15 வருட முடிவில்
சுமார் Rs.28,54,825/- இலாபம் கிடைத்திருக்கும்.
முதலீடு செய்த மொத்த தொகை Rs.9,00,000/-.
மற்ற திட்டங்களை விட சுமார் 75% சதவிகிதம் அதிக லாபம் பெற்றிருக்கிறது.
ELSS ல் முதலீடு செய்து இலாபம் பெறுவது
எப்படி?
பொதுவாக பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது
சந்தை சார்ந்த ஏற்ற இறக்கங்கள் மூதலீட்டை பாதிக்கும். பொதுவாக சந்தைகளின் இறக்கங்கள் முதலீட்டார்களை பெரிதும்
பாதிப்பவை. கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தக்
கூடியவை. அதனால் முதலீட்டாளர்கள் சந்தைகளில்
முதலீடு செய்ய தயங்குவார்கள்.
ஆனால் SIP மூலமாக மாதந்தோறும் 3 அல்லது 4 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்து
வந்தால் நஷ்டம் அடைய வாய்ப்பில்லை. 10 அல்லது அதற்க்கு மேல் தொடர்ந்து பணத்தை எடுக்காமல்
முதலீடு செய்து வந்தால் அதிக லாபம் பெறுவது உறுதி. வருமான வரி சேமிப்பது மட்டுமல்லாமல் அதிக இலாபமும்
ஈட்டலாம்.
0 comments:
Post a Comment