Tuesday, 17 June 2014

,

இந்திய பொறியாளர்களுக்கு வெளிநாடுகளில் வேலை - இந்தியாவின் வாஷிங்டன் உடன்படிக்கை

பொறியாளர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்திய பொறியாளர்களின் திறமை உலகம் முழுவது அறியப்பட்ட ஒன்று.  இப்போது இது உலக அளவில் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.  இதற்கு காரணம், இந்தியா வாஷிங்டன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கிறது.  இதன் மூலம் இந்திய பொறியாளர்கள் உலகம் முழுவதும் வேலைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.  அவர்கள் வளர்ந்த நாடுகளில் அதிக சம்பளம் பெற முடியும்.  இந்தியா இந்த உடன்படிக்கையில் ஒரு அங்கமாக ஆகுவதற்கு சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்திருக்கிறது.  இதன் மூலம் இந்தியா உலக நாடுகளில் இந்த சலுகையை பெற்ற 17 ஆவது நாடாக ஆகிறது.

வாஷிங்டன் உடன்படிக்கை என்றால் என்ன?

வாஷிங்டன் உடன்படிக்கை ஒரு தொழில்முறை பொறியியல் பட்டப்படிப்பை சர்வதேச அளவில் அங்கீகாரம் செய்யும் ஒப்பந்தம்.  இது தொடங்கப்பட்ட ஆண்டு 1989.  பின்வரும் நாடுகள் இந்த பிரத்யேக மன்றத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றன: ஆஸ்திரேலியா, கனடா, சீன தைபே, ஹாங்காங், சீனா, அயர்லாந்து, ஜப்பான், கொரியா, மலேஷியா, நியூசிலாந்து, ரஷ்யா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா.


இதன் மூலம் இந்தியாவில் பொறியியல் படிப்பு, இதில் மன்றம் வகிக்கும் நாடுகளில் அங்கீகரிக்கப் படும்.  இதன் மூலம் இந்த நாடுகளில் உள்ள பொறியியல் வேலைகளுக்கு இந்திய பொறியாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.  இது முன்பு மிகவும் கடினமாக இருந்தது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து பொறியியல் படிப்புகளும் இதில் அடக்கமா?

இந்த உடன்படிக்கையில் ஐ.டி பொறியாளர்கள் மற்றும் சாப்ட்வேர் பணியாளர்களுக்கு இடம் இல்லை.  மேலும் இந்தியாவில் பயிலப்படும் அனைத்து பொறியியல் படிப்புகளும் இதில் அடக்கம் இல்லை.  தற்போது மொத்தம் 220 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இதில் அடக்கம்.  மேலும் இந்த 220 கல்லூரிகளும் வாஷிங்டன் உடன்படிக்கையில் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும்.  இதன் மூலம் பயிலப்படும் படிப்புகள் மீண்டும் மற்ற 16 நாடுகளுக்கு நிகராக வடிவமைக்கப்படும்.

உதாரணத்திற்கு, இந்த 16 நாடுகளில் பயிலப்படும் பொறியியல் படிப்புகளில் சமூக அறிவியல் ஒரு பெரிய பாடமாக உள்ளது.  அதனால் இந்தியாவில் பயிலப்படும் பாடங்களில் சமூக அறிவியலையும் ஒரு பாடமாக இணைக்க வேண்டும்.  இது போல பல மாற்றம் செய்த பின்னரே இந்த உடன்படிக்கை மூலம் பலனை அடைய முடியும்.

இந்த மாற்றத்திற்க்கு சில காலம் ஆகலாம்.  ஆனால் இவை ஒழுங்கு படுத்தப்பட்ட பிறகு இதன் மூலம் இந்திய பொறியாளர்கள் மிகுந்த நன்மை அடைய முடியும். 

இப்போது இந்திய பெற்றோர்கள், பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஒரு காரணம் கிடைத்துவிட்டது!

Image & Source: Trak.in

English Summary: India joining Washington Accord and Indian Engineers have chance to smile as they can get jobs in developed countries who are the part of this accord. 

Sunday, 15 June 2014

, , ,

தொழிலில் சவால்களை சமாளித்து வெற்றி பெற சாம் வால்டனின் 12 விதிகள்

நீங்கள் வால் மார்ட் பற்றி கேள்வி பற்றி இருப்பீர்கள்.  வால் மார்ட் உலகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களின் ஒன்று.  சூப்பர் மார்க்கெட்டில் புரட்சி ஏற்படுத்திய ஒரு நிறுவனம்.  இந்த நிறுவனத்தை நிறுவியவர் சாம் வால்டன்.  அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில் அதிபர்.  அவர் கடைப்பிடித்த தொழில் விதிகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.  அவற்றை பின்பற்றி நீங்களும் உங்கள் தொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  1. பாரம்பரிய மதிநுட்பத்தை புறம் தள்ளுங்கள்.  புதிதாக சிந்தியுங்கள். உங்கள் தொழிலில் இருக்கும் அனைவரும் ஒரே மாதிரியான முறையை கடைப்பிடித்தால், நீங்கள் மாற்றி யோசியுங்கள்.  உங்கள் தொழிலில் புதிய முறையை புகுத்துங்கள்.  நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.
  2. எப்போதும் உயர்ந்த குறிக்கோளை கொண்டிருங்கள். போட்டியை ஊக்குவியுங்கள். முன்னேறுங்கள்.
  3. நீங்கள் உங்கள் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் பணியாளர்களின் நலனுக்காக இந்த தொழிலை நடத்துகிறீர்கள் என்ற எண்ணத்தை அவர்களிடம் உருவாக்குங்கள்.  அவர்கள் உங்களுக்காக வேலை செய்கிறார்கள் என்று அவர்களை எண்ண வைக்காதீர்கள்.
  4. அதிக எதிர்ப்பார்ப்புதான் உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.
  5. வாடிக்கையாளர்தான் உங்கள் முதலாளி.  அவர் நினைத்தால் தனது பணத்தை மற்றவர்களுக்காக செலவிட்டு உங்களை மேலிருந்து தரையிறக்க முடியும். 
  6. உங்கள் தொழிலை பொறுப்புணர்ச்சியோடு செய்யுங்கள்.  மற்றவர்களை விட நீங்கள் உங்கள் தொழிலின் மீது நம்பிக்கை வையுங்கள்.
  7. உயர்ந்த தலைவர்கள் தங்களுக்காக வேலை செய்யும் பணியாளர்களின் சுயமரியாதையை உயர்த்துவார்கள்.  சுயமரியாதையுடன் நடத்தப்படும் பணியாளர்கள்தான் உங்கள் சொத்து.  அவர்கள் உங்களுக்காக எதையும் சாதிப்பார்கள்.
  8. முதலீடு குறைவாயிருப்பதை பொருப்படுதாதீர்கள்.  உங்கள் கனவு தான் குறைவாக இருக்க கூடாது.
  9. உங்கள் தொழிலை நீங்கள் விரும்பி செய்தால், தினந்தோறும் அதை திறம்பட செய்ய முயலுவீர்கள்.  இந்த பழக்கம் உங்களுடைய பக்கத்திலிருப்பவருக்கும் பற்றிக் கொள்ளும்.
  10. சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, சரியான நேரத்தில் சொல்லப்பட்ட, உண்மையான பாராட்டுக்கு முன்னால் எதுவுமே நிகர் இல்லை.  அது இலவசங்களில் ஒன்று ஆனால் அதிர்ஷ்டம் கொடுக்கும் மதிப்பு மிகுந்தது.
  11. உங்களை நீங்களே தீவிரமாக்கி கொள்ளாதீர்கள். எப்போதும் தளர்வாயிருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களும் அதைப் போலவே மாறுவார்கள்.  ஆனந்தமாக இருங்கள்.
  12. அதிக அனுபவமில்லாத, வேலையே தெரியாத ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க நேரிட்டால், அவர் நீங்கள் கொடுக்கும் வேலை எதுவானாலும் எப்படியாவது செய்து முடிக்கும் ஆர்வம் இருந்தால், அப்படிபட்டவர் எப்படியாவது திறைமையாகவும் அதன் மூலம் அனுபவசாலியாகவும் ஆகிவிடுவார்.  இது பத்தில் ஒன்பது முறை நிருபனமாயிருக்கிறது.
Image & Source: YourStory.com

Saturday, 14 June 2014

, , ,

LocalBanya (லோக்கல் பன்யா) - ஆன்லைன் மளிகை கடை

இணையம் மூலம் பொருள்களை வாங்குவது அதிகரித்திருக்கும் இந்த காலத்தில், மின்னனு பொருள்கள், புத்தகங்கள், ஆடை அணிகலன்கள் தவிர இப்போது மளிகை பொருள்கள் விற்கும் அளவிற்க்கு இது விரிவடைந்திருக்கிறது.  அவ்வழியில் மளிகை பொருள்களை விற்கும் இணைய வணிகதளம் லோக்கல் பன்யா (Local Banya) ஒரு நாளைக்கு 600 ஆர்டர்களை கையாளுகிறது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் இப்போது சுமார் 8000 மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப் படுகிறது.  இந்நிறுவனத்தில் 100 க்கும் மேற்ப்பட்டோர் வேலை பார்க்கின்றனர். 


இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதல் காரணம் நேரம் தவறாமை.  குறித்த நேரத்தில் பொருள்களை வாடிக்கையாளர்களின் இடம் சென்று சேர்ப்பது இவர்களது வெற்றிக்கு ஒரு முதன்மையான காரணம்.  மேலும் பொருள்களை வாங்கிய பின்பு செய்து தரும் சேவையும் ஒரு காரணம்.  இது இவர்களது தலையாய குறிக்கோளும் கூட.  ஏனென்றால் மளிகைப் பொருள்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்வது மிகவும் முக்கியம்.  அதுவும் எளிதில் அழுகும் பொருள்களான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சரியான நேரத்தில் சென்று சேர்க்க வேண்டும். 

இந்த முயற்சி இவர்களுக்கு இந்த வெற்றியை தேடி தந்திருக்கிறது.  சரக்கு போக்குவரத்து மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய இவை இரண்டும் இவர்களது மிகப் பெரிய தூண்கள். 

ஒரு ஆர்டர் சராசரியாக Rs.1350/- க்கு விற்பனையாகிறது.  இவற்றில் மளிகைப் பொருள்களின் சதவிகிதம் 22 ஆகவும், தினசரி பொருள்கள் மற்றும் வீட்டிற்க்கு தேவையான பொருள்களின் முறையே ஒவ்வொன்றும் 11 சதவிகிதமாகவும், காய்கறிகள் மற்றும் பழங்கள் 11 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்நிறுவனம் லாபம் மற்றும் நஷ்டமில்லாத சமநிலைபுள்ளியை வரும் ஜூலை 2014 லில் அடையும் என எதிர்ப்பார்க்க படுகிறது.  இந்நிறுவனம் தனது செயல்பாட்டை மேலும் விரிவுப்படுத்த இருக்கிறது.  இதற்க்காக சுமார் ஐந்து மில்லியன் டாலருக்கு நிதியை திரட்ட திட்டமிட்டிருக்கிறது. (LocalBanya.com)

Source: YourStory.com