Thursday 14 February 2019

, ,

5 சிறந்த நல்ல இலாபத்துடன் வருமான வரியையும் சேமிக்க மியூச்சுவல் ஃப்ண்டுகள்


நாம் வருமான வரியை சேமிக்க முதலீடு செய்யும் திட்டங்கள் நமக்கு வரியை சேமிப்பதோடு மட்டுமல்லாமல் நீண்ட கால முதலீடில் நல்ல இலாபமும் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.

அவ்வாறு வருமான வரியை சேமிக்கவும் நல்ல இலாபமும் தரும் திட்டங்களில் முதன்மையானது ELSS (Equity Linked Savings Scheme) என்று சொல்லக்கூடிய பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃப்ண்டுகள். 

நாம் ELSS மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்க்கு முன் அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.  சந்தைகளில் அம்மாதிரியான ELSS மியூச்சுவல் ஃப்ண்ட் திட்டங்கள் பல உள்ளன.   அந்த திட்டங்களில் 5 திட்டங்கள் மிகச் சிறந்த திட்டங்களாக இருக்கின்றன.  அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

1. Aditya Birla Sun Life Tax Relief 96 – Direct Plan

நிறுவனம்: Aditya Birla Sun Life Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.7,373/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
SIP முதலீடு: Rs.500 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 17%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 21%
NAV: Growth Plan: Rs.31.39, Dividend Plan: Rs.216.49

2. Axis Long Term Equity Fund – Direct Plan

நிறுவனம்: Axis Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.17,090/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
SIP முதலீடு: Rs.500 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 19%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 21%
NAV: Growth Plan: Rs.44.2871, Dividend Plan: Rs.34.6307

3. Mirae Asset Tax Saver Fund – Direct Plan

நிறுவனம்: Mirae Asset Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.1,315/- கோடிகள்
தொடங்கிய நாள்: 28/12/2015
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
SIP முதலீடு: Rs.500 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 18.45%
இலாப சதவிகிதம் (கடந்த 3 ஆண்டுகள்): 24%
NAV: Growth Plan: Rs.16.965, Dividend Plan: Rs.14.531

4. Quant Tax Plan – Direct Plan

நிறுவனம்: Mirae Quant Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.8/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.100/-
SIP முதலீடு: Rs.100 (6 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 14%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 21%
NAV: Growth Plan: Rs.86.8018, Dividend Plan: Rs.11.5907

5. Tata India Tax Savings Plan – Direct Plan

நிறுவனம்: Mirae Tata Mutual Fund
ஃப்ண்டின் மொத்த சொத்தின் மதிப்பு: Rs.1,575/- கோடிகள்
தொடங்கிய நாள்: 01/01/2013
குறைந்த பட்ச முதலீடு: Rs.500/-
குறைந்த பட்ச SIP முதலீடு: Rs.150 (12 Cheques)
இலாப சதவிகிதம் (தொடங்கிய நாளிலிருந்து): 16%
இலாப சதவிகிதம் (கடந்த 5 ஆண்டுகள்): 20%
NAV: Growth Plan: Rs.17.60, Dividend Plan: Rs.91.48

Sunday 10 February 2019

,

மியூச்சுவல் ஃபண்ட் ELSS ல் முதலீடு செய்து அதிக இலாபத்தை அடைந்து வரியையும் சேமிக்கலாம்


பொதுவாக சம்பளதாரர்களுக்கு வரியை சேமிப்பது ஒரு முக்கியமாக விஷயமாக இருக்கிறது.  எவ்வாறு வரி கட்டாமல் இருப்பது என்பது ஒவ்வொருவரின் தலையாயப் பிரச்சனையாக இருக்கிறது.   அதனால் பெரும்பாலும் அவசரகதியில் பிறர் சொல்லும் ஏதோ ஒரு வரி சேமிக்கும் திட்டத்தில் முதலீடு செய்து விடுகின்றனர்.  பின்பு அவ்வாறு முதலீடு செய்த திட்டம் சரியான இலாபம் ஈட்டாமல் சேமித்த வரியை விட அதிக அளவில் நஷ்டம் அடைகின்றனர்.  அவ்வாறு நஷ்டம் அடையாமல் மேலும் வரியை கணிசமான அளவில் சேமிக்க ஒரு முக்கியமான திட்டத்தை இங்கு நாம் காணலாம்.

பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் (ELSS)

பரஸ்பர நிதி பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் அல்லது ELSS (Equity Linked Savings Scheme) என்று சொல்லப் படுகிற முதலீடு மிகவும் இலாபம் தரக்கூடியதாகவும் வரியை சேமிக்கவும் உதவுகிறது.  இந்த மூதலீட்டீற்க்கு  வருமான வரி சட்டத்தின் 80C கீழ் வருடத்திற்க்கு ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் வரை  வரி விலக்கு உண்டு.

வருட வரம்பு (Lock-in Period)

இத்திட்டம் குறைந்த லாக் இன் (Lock-in) பீரிய்டு கொண்டது.  அதாவது இத்திட்டத்தில் முதலீடு செய்தால் 3 வருடங்களுக்கு இதில் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாது.  ஆனால் இத்திட்டம் மற்ற வரி சேமிப்பு திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி (PPF-15 வருடங்கள்), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC-5 வருடங்கள்) மற்றும் FD (5 வருடங்கள்) விட குறைந்த வருட வரம்பைக் கொண்டது.  இதனால் உங்களுக்கு பணம் தேவைப்படும் போது 3 வருடங்களுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் பணத்தை இத்திட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.




அதிக இலாபம்

ELSS திட்டத்தில் முதலீடு செய்தால் மற்ற வரி சேமிப்பு திட்டங்களை விட அதிக இலாபம் ஈட்டலாம்.  உதாரணத்திற்க்கு PPF ல் சராசரியாக வருடத்திற்க்கு 8-9% சதவிகிதம் வட்டி கிடைக்கிறது.  NSC 7-8% சதவிகிதம் மற்றும் FD ல் சராசரியாக வருடத்திற்க்கு 6-7% சதவிகிதம் வட்டி கிடைக்கிறது.  ஆனால் ELSS திட்டம் வருடத்திற்க்கு சராசரியாக 12 முதல் 15 சதவிகிதம் வருமானம் தரக்கூடியது.

உதாரணத்திற்க்கு இத்திட்டத்திங்களின் மூலமாக PPF லாக் இன் பீரிய்டு ஆன 15 வருடத்தை கணக்கில் கொண்டு வருமானத்தை கணக்கிடுவோம்.

மாதாந்திர முதலீடு – Rs.5000/-

முதலீட்டு வருடங்கள் – 15 வருடங்கள்

PPF மற்றும் NSC – 8% சதவிகித வட்டியில் 15 வருடங்களுக்கு இலாபம் - Rs.16,29,127/-

FD – 7% சதவிகித வட்டியில் 15 வருடங்களுக்கு இலாபம் - Rs.15,07,741/-

ELSS – 12% சதவிகித வட்டியில் 15 வருடங்களுக்கு இலாபம் - Rs.22,36,783/-

ELSS திட்டம் கடந்த 15 வருடங்களில் சராசரியாக வருடத்திற்க்கு 15% சதவிகித இலாபம் கொடுத்திருக்கிறது.  அதாவது மாதத்திற்க்கு Rs.5000/- சுமார் 15 வருடங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்திருந்தால் 15 வருட முடிவில் சுமார் Rs.28,54,825/- இலாபம் கிடைத்திருக்கும்.   முதலீடு செய்த மொத்த தொகை Rs.9,00,000/-.

மற்ற திட்டங்களை விட சுமார் 75% சதவிகிதம் அதிக லாபம் பெற்றிருக்கிறது. 

ELSS ல் முதலீடு செய்து இலாபம் பெறுவது எப்படி?

பொதுவாக பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது சந்தை சார்ந்த ஏற்ற இறக்கங்கள் மூதலீட்டை பாதிக்கும்.  பொதுவாக சந்தைகளின் இறக்கங்கள் முதலீட்டார்களை பெரிதும் பாதிப்பவை.  கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை.  அதனால் முதலீட்டாளர்கள் சந்தைகளில் முதலீடு செய்ய தயங்குவார்கள்.

ஆனால் SIP மூலமாக மாதந்தோறும் 3 அல்லது 4 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நஷ்டம் அடைய வாய்ப்பில்லை.   10 அல்லது அதற்க்கு மேல் தொடர்ந்து பணத்தை எடுக்காமல் முதலீடு செய்து வந்தால் அதிக லாபம் பெறுவது உறுதி.   வருமான வரி சேமிப்பது மட்டுமல்லாமல் அதிக இலாபமும் ஈட்டலாம்.