Thursday 23 October 2014

, , , ,

இரயில் கட்டணத்தை தவணை முறையில் (EMI) செலுத்துங்கள் IRCTC இல்

இனி அதிகமாகி வரும் இரயில் கட்டணங்களை பற்றி கவலைப்பட வேண்டாம்.  இரயில் கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.  இவ்வசதி ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டும் பொருந்தும்.


இந்திய இரயில்வே பல சிறப்பு விடுமுறை கால இரயில்களை அறிமுகப் படுத்தியிருக்கிறது.  இவற்றில் பயணம் செய்வதற்க்கு அதிக கட்டணம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.  இதனால் நடுத்தர மக்கள் இவற்றை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.  இந்த EMI வசதிமூலம் அது சாத்தியமாயிருக்கிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது, கட்டணம் செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் போது, EMI என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதன் வழியாக கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் இந்த வசதியை பெறலாம்.  முன்பதிவிற்க்கான கட்டணம் முழுவதும் கிரெடிட் கார்டிலிருந்து கழிக்க படும்.  பின்பு அது மாதா மாதம் வங்கியிலிருந்து தவணை முறையில் எடுத்துக் கொள்ளப்படும்.

தற்போது இந்த வசதி சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமெ உள்ளது.  மேலும் இனி வரும் நாட்களில் இவ்வசதி மற்ற கிரெடிட் கார்டுகளுக்கு விரிவுப்படுத்த படலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Source: Trak.in Image: wikimedia.org

Thursday 16 October 2014

,

தொழிலில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் மற்றும் தடுக்கும் இரண்டு முக்கிய வழிமுறைகள்

நீங்கள் உங்கள் தொழிலில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு கையாளுகிறீர்கள்?  உங்களுக்கு வரவேண்டிய பணம் தாமதமாகிறதா? அல்லது உங்கள் தொழிலில் வேறு எதாவது சிக்கல்கள் இருக்கிறதா?

நீங்கள் ஏற்கனவே தொழில் நடத்துபவராயின் இந்த பிரச்சனைகளை எதிர் கொண்டு இருக்கலாம்.  அல்லது புதிதாக தொழில் தொடங்குபவராயின் அவற்றை பற்றி கேள்விப் பட்டிருக்கலாம்.  எவ்வாறாயினும் அப்பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  அவ்வாறு இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?  தெரிந்து கொள்ளுங்கள்.

ஓன்று: நீங்கள் வணிக ஒப்பந்தங்கள் போடும் போது முன்கூட்டியே பின்வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒப்பந்தங்கள் போடுங்கள்.  ஒப்பந்தம் போடும் போது உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப பேச்சுவார்த்தை நடத்துங்கள்.  இந்த ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை.  பின்னால் இவற்றால் வரும் நன்மை தீமைகளுக்கு நாம் பொறுப்பாக நேரிடும்.  ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது நன்மைகளை மட்டும் பாராமல் அனைத்து வகையான தீமைகளையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஒப்பந்தங்களை தயார் செய்யுங்கள்.


இரண்டு: பொதுவாக தொழில்களில் கடனுக்கு விற்பனை செய்வது இயல்பான ஒன்று.  ஆனால் அந்த கடனை வசூலிப்பது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.  விற்பனைகளுக்கான தொகையை வசூலிக்கும் முறைகளை வழிமுறைப் படுத்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் செயல் முறைகள் உள்ளன.  இதன் மூலம் உங்கள் விற்பனைக்கான தொகையை எந்த வித சிரமுமின்றி வசூல் செய்யலாம்.  கடன்களை சரியாக கட்டவில்லை என்றால் இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.  கூறிப்பிட்ட நேரத்தில் கட்ட தவறிய கடன் மீது வட்டி மற்றும் அபராத தொகை விதிக்க முடியும்.  இது பல தொழில் முனைவோர்களுக்கு தெரிவதில்லை.  இது பற்றி மேலும் அறிந்து கொள்ள அருகிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு ஆணைத்தை (MSME) தொடர்பு கொள்ளவும்.