Friday, 30 August 2013

நீங்கள் யார்?

நீங்கள் யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? அதற்கு உங்களுக்கு நேரம் இருந்தால்தானே. உங்களுடைய அதிகபட்சமான நேரத்தை  அடுத்தவர்களின் நலனுக்காகவே(!) நீங்கள் செலவிட்டிருக்கிறீர்கள்.  நீங்கள் அடுத்தவர்கள் சொல்வதையே அதிகமாக நம்புகிரீர்கள்.  அவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்களோ அப்படியே ஆகுகிறீர்கள்.  நீங்கள் பிறந்த போது உங்களுக்கு என்ன பெயர் வைத்தார்களோ அதுவாகவே ஆகிவிட்டீர்கள்.  எப்பொதெல்லாம் உங்கள் பெயரை யாரோ சொல்லி அழைக்கும் போதெல்லாம் நீங்கள் திரும்பி பார்த்திருக்கிறீர்கள், அது நீங்கள் இல்லாவிட்டாலும். படித்துவிட்டு பட்டம் பெற்றதும் உங்கள் பெயரோடு நீங்கள் படித்த பட்டத்தையும் இணைத்துக்கொண்டீர்கள்.

நீங்கள் திருமணம் செய்துக்கொண்டீர்கள் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டீர்கள்.  அவர்களை வளர்த்தீர்கள், படிக்க வைத்தீர்கள் அவர்களுக்காகவும் உங்களுக்காகவும் சொத்து சேர்த்தீர்கள்.  அப்புறம் நீங்கள் எப்பொது இறக்கிறீர்களோ உங்களை அவர்கள் உடல் (Body) என்று மட்டுமே அழைப்பார்கள்.  ஆம், அவர்கள் சொல்வது சரிதான்.  நீங்கள் 
இந்த உலகத்தின் ஒரு பகுதிதான்.  நீங்கள் இந்த பூமியின் மற்றொரு உருவமாகி இருக்கிறீர்கள். நீங்கள் இந்த உடலோடு பிறக்கவில்லை.  இந்த உடலை இங்கிருந்தே வளர்த்திருக்கிறீர்கள்.  எதை நீங்கள் உண்கிறீர்களோ அதுவாகவே ஆகுகிறீர்கள்.

நீங்கள் இப்பொது அவர்கள் உங்களை அழைக்கும் பெயரும் இல்லை, இந்த உடலும் இல்லை.  ஒருவேளை நீங்கள் இந்த மனமா? நீங்கள் இந்த மனதை எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் அடுத்தவர்கள் என்ன சொன்னார்களோ அதையே எப்பொதும் நம்புகிறிர்கள்.  நீங்கள் இதுவரை கண்ணால் பார்த்திராத கடவுளை நம்புகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் உங்கள் பெற்றொர் மற்றும் அடுத்தவர்கள் சொன்னதை அப்படியே நம்பிவிட்டீர்கள்.

நீங்கள் ஒரு அழியாத, அழிக்க முடியாத ஆன்மா.  ஆன்மாவிற்க்கு வலி இல்லை, யாருக்கும் வலி கொடுப்பதில்லை, எப்பொதும் கவலை படுவதில்லை, அதற்கு இந்த உலகத்தில் எந்த சொந்தமும் இல்லை.  நீங்கள் இப்பொது எல்லாவ|ற்றிலும் இருந்து சுதந்திரமாக இருக்கிறீர்கள்.

Thursday, 1 August 2013

கவிதை


உடல் எனதா 
உயிர் எனதா
எதை எனதென்பேன்
இறைவா!

மண்ணிலிருந்து முளைக்கும்
மரம், செடி
மண்ணில் மடியும்
மீண்டும் 

எதுவும் தொடங்குவதும் இல்லை 
முடிவதும் இல்லை
எனதென்பது ஏதும் இல்லை
எல்லாம் நீயாக இருப்பதால்!

Image credit: Google/Owner