Wednesday, 20 October 2010

தமிழ் நீ!



தமிழ் எழுத்துக்களில்
உயிர் எழுத்துக்கள்
பன்னிரெண்டிலும்
மெய் எழுத்துக்கள்
பதினேட்டிலும் 
உயிர்மெய் எழுத்துக்கள்
இருநூற்றி நாற்பதிலும்
எனக்கு மிகவும் பிடித்த
எனக்கு சொந்தமான
ஒரு வார்த்தை 'நீ'


Thursday, 5 August 2010

அதிகாலை


அதிகாலை நேரம்
ஆரவாரம் இல்லா சாலை
நடை பயிலும் மக்கள்
சிலர் ஓட்டமுமாக

விடிந்தது தெரியாமல்
விழித்தேயிருக்கும் தெருவிளக்குகள்
மெல்லியதாய் காற்று
மர இலைகளை வருடிப் போகும்

இரவுக்கு விடைக் கொடுத்து
பகலுக்கு பதில் தேடும் சூரியன்
சின்னதாய் புன்னகைத்து
தொடங்குங்கள் நாளிதை!

Sunday, 7 February 2010

மழைத் துளிகள்


மேகத்தின் மீது
கல் எறிந்தது யாரோ
கண்ணாடியைப் போல
உடைந்து கொட்டுகிறது!

Image credit: google/owner

Friday, 5 February 2010

நினைவிருக்கும் வரை

கொஞ்ச தூரம் தான் நடந்திருப்பேன்


எதோ ஒன்றை மறந்ததை

மனது உணர்த்த

மறுபடியும் உன்னிடம் வந்தேன்


என்ன என்று நீ புன்னகைத்து

கொண்டே கேட்க

எதுவும் சொல்லாமல்

உன்னையே நான் பார்க்க


மறுபடியும் என்ன என்று நீ

காரணம் புரியாமல்கேட்க

'பேருந்துக்கு சில்லரை இல்லை' என்று

உன்னிடம் பணம் வாங்கி சென்றது

இன்றும் நினைவிருக்கிறது

கண்டிப்பாக கொடுத்துவிடுகிறேன்

Sunday, 10 January 2010

நீளமான கவிதை

ஹைக்கு கவிதைகளையே
எழுதிப்பழகிய நான்
கொஞ்சம் அதிகமாக எழுத
ஆசைப் பட்டு


எதை எழுதுவது என்று
புரியாமல்
ஏதோ எழுதுகிறேன்
அவசர அவசரமாக


இன்னும் வார்த்தைகள் சரியாக
புலப்படவில்லை என்றாலும்
பத்து வரிகளுக்குமேல் எழுதிவிட்டேன்
ஆஹா! எனக்கும் எழுத வருகிறது
நீளமான கவிதை