நீங்கள்
தொழில் செய்வதற்க்கு முக்கியமானது முதலீடு. உங்களுடைய தொழில் யோசனை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் உங்களிடம் அதற்க்கான முதலீடு
இல்லையென்றால் என்ன பயன். பொதுவாக தொழில் தொடங்குவது
என்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதற்கு பெரும்பாலும் தடையாக
இருப்பது மூலதனம். சேர்த்து வைத்த பணம் அல்லது
வங்கிகளின் கடன் தான் பெரும்பாலும் மூலதனத்திற்க்கு ஆதாரமாக விளங்குகின்றன. ஆனால் எல்லோராலும் பணத்தை சேர்த்து வைத்து தொழில் தொடங்க
முடியாமல் போகலாம். வங்கிகள் தரும் கடன் தான்
தொழில் முனைவோர்களுக்கு மிகப்பெரிய பக்க பலம். ஆனாலும் எல்லோராலும் வங்கியில் எளிதாக கடன் பெற முடிவதில்லை. எனினும் வங்கிகள் தவிர பல வழிகளில் உங்கள் தொழிலுக்கு
மூலதனத்தை திரட்டலாம் என்று உங்களுக்கு தெரியுமா?
உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
உங்களுடைய தொழிலுக்கு முதல் பக்க பலமாக இருப்பது உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்தான். நீங்கள் தொழில் தொடங்குவது என்று முடிவெடுத்து விட்டால் முதலில் அணுக வேண்டியது உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைதான்.
உங்கள் தொழில் குழந்தை முதல் காலடி எடுத்து வைப்பது இவர்களின் கைப்பிடித்துதான். உங்களுடைய தொழிலைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரையுங்கள். முடிந்தால் அவர்களையும் உங்கள் தொழிலின் ஒரு பார்ட்னராக ஏற்று கொள்ளுங்கள். ஆனால் ஒரு விஷயம், அவர்களின் இந்த முதலீன் உங்களின் நட்பு அல்லது உறவை கெடுக்கக் கூடியதாக இருக்க கூடாது. அவர்கள் உங்களுக்கு உதவ தயாரா? ஒரு வேளை நஷ்டம் வந்தால் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று பாருங்கள். ஏனென்றால் கடன் அன்பை மட்டுமல்ல சில சமயம் எலும்பையும் முறிக்கும்.
வணிக ஊக்கிகள் (Business Incubaros)
வணிக ஊக்கிகள் எனப்படுபவர்கள் உங்கள் தொழிலுக்கு முதல் மூலதனம் தருவதோடு நின்றுவிடாமல்
உங்கள் தொழிலுக்கு தேவையான அத்தனை ஆலோசனைகளையும் வழங்குவார்கள். இவர்கள் அனைவரும் தொழில் வல்லுனர்கள். ஆகையால் இவர்கள் உங்கள் தொழில் முதலீடு மற்றும்
அதன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள்.
முன்னுரிமை பங்குதாரர்கள்
முன்னுரிமை பங்குதாரர்கள் உங்கள் தொழிலில் வரும் இலாபத்தை
முதலில் பங்கு போட்டுக் கொள்ளும் உரிமையாளர்கள்.
இவர்களுக்கு தொழிலின் மூலம் கிடைக்கும் இலாபத்தை ஒரு குறிப்பிட்ட நிலையான சதவீகிதத்திற்க்கு
எடுத்து கொள்ளுவார்கள். எந்த ஒரு பெரிய தொழிலின்
முதல் மூலதனம் இவர்களுடையதாய் இருக்கும். இதன்
மூலமே பல தொழில்கள் மேலும் வளர்ச்சி அடைய முடியும்.
மாற்றத்தக்க கடன் பத்திரம்
சமீப ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக இருப்பது இந்த மாற்றத்தக்க
கடன் பத்திரங்கள். அதாவது கடன் கொடுப்பவர்கள்
சிறிது காலத்திற்க்கு பிறகு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொழிலில் பங்கு தாரர்கள் ஆவார்கள். இதுதான் மாற்றத்தக்க கடன் பத்திரம் என்பது. இந்த முறையிலும் நீங்கள் உங்கள் தொழிலுக்கான முதலீட்டை
பெறலாம்.
துணிகர முதலீடு
துணிகர முதலீடு அல்லது ஆங்கிலத்தில் வென்சர் கேப்பிடல் மூலமும்
உங்கள் தொழிலுக்கான முதலீட்டை பெறலாம். இந்த
துணிகர முதலீடுப் பற்றி இங்கே விரிவாக கொடுத்துள்ளோம்.
English Summary:
You can fund your business
in various ways. There are five important
ways that you can seek fund for your business.
These are: Family and Friends, Business Incubators, Preference Shares, Convertible
Debentures and Venture Funding.
Image & Souce Courtesy: Yourstory.in